மற்ற நடிகர்கள் மாதிரி ஆர்பாட்டம் எல்லாம் பண்ணல! சிம்பிளா மனைவியுடன் ஷோரூமுக்கே வந்து புதிய காரை வாங்கிய நடிகர்
பிரபல மலையாள பட நடிகர் ஒருவர் மிகவும் எளிமையாக வந்து புதிய காரை டெலிவரி பெற்றுச் சென்ற வீடியோ ஆட்டோ உலகத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. 'கூமேன்' மற்றும் 'அதியான்' போன்ற முன்னணி படங்களில் நடித்தவர் பிரபல மலையாள ஆக்டர் பிரசாந்த் முரளி. முன்னணி கதாபாத்திரத்தில் இவர் நடிக்கவில்லை என்றாலும், இவர் ஏற்று நடித்த ரோல்கள் பல பெருத்த தாக்கத்தை பார்வையாளர்கள் மத்தியில் எழுப்பும் வகையிலேயே இருந்தது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக அவர் நடித்த 'உல்லொழுக்கு' படத்தைக் கூறலாம்.
சிறந்த கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் இந்த நடிகர், தற்போது தன்னுடைய பயணங்களை சிறந்ததாக மாற்ற சிறப்பான கார் மாடல் ஒன்றை புதிதாக வாங்கி இருக்கின்றார். அவர் ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் (Volkswagen Virtus) எனும் கார் மாடலையே வாங்கி இருக்கின்றார்.

இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த செடான் (Sedan) ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் பணக்காரர்கள் மத்தியில் இந்த கார் மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால் செடான் கார் பிரிவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் உள்ளது.
மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Ciaz) மற்றும் ஹோண்டா சிட்டி (Honda City) போன்ற முன்னணி செடான் கார்களுக்கே இது விற்பனையில் தண்ணிக் காட்டிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் பிரீமியம் அம்சங்களை மட்டுமல்ல பாதுகாப்பு அம்சங்களையும் மிக தாராளமாகக் கொண்டிருக்கின்றது.
மிக முக்கியமாக இதன் ஆரம்ப நிலை வேரியண்ட் தொடங்கி உயர்நிலை வேரியண்ட் வரை என அனைத்திலும் 6 ஏர்பேக்குகள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல, இஎஸ்சி (ESC), மல்டி கொலிசன் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் இந்த காரில் ஃபோக்ஸ்வேகன் வழங்கி இருக்கின்றது.
குறிப்பாக, டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), பார்க் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் விர்சுஸ் கார் மாடலில் பெற்றுக் கொள்ள முடியும். இவை மட்டுமல்ல இன்னும் 40-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களை இந்த காரில் வாரி வழங்கி இருக்கின்றது, ஃபோக்ஸ்வேகன்.

பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கியிருப்பதில் மட்டுமல்ல பாதுகாப்பை தரும் விஷயத்திலும் இந்த கார் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றது. குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இத்தகைய அதிகபட்ச பாதுகாப்பு ரேட்டிங்கை விர்சுஸ் கார் மாடல் பெற்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் பாதுகாப்பை தருவதில் மட்டுமல்ல பிரீமியம் அம்சங்களை தாங்கியிருப்பதிலும் சிறந்த செடான் காராக உள்ளது.
அந்தவகையில், 10 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், தொடு திரை வசதி, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், எலெக்ட்ரானிக் சன்ரூஃப், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற பிரீமியம் அம்சங்களையும் போக்ஸ்வேகன் விர்சுஸ் தன்னுள் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்தது போன்ற அதிக பாதுகாப்பு மற்றும் பிரீமியம் அம்சங்களையே விர்சுஸ் கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது. இந்த காரையே பிரபல மலையாள நடிகர் பிரசாந்த் முரளி தற்போது வாங்கி இருக்கின்றார். இந்த காருக்கு முன்னதாக அவர் ஃபோக்ஸ்வேகன் போலோ காரை பயன்படுத்தி வந்ததார் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









