ட்ரோல் செய்தவர்கள் இப்போ வயிற்றெரிச்சல்ல இருப்பாங்க! ஷூட்டிங் ஸ்பாட்க்கு போர்ஷே காரில் வந்த நடிகர்!
பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் (Prithviraj), தனது புதிய போர்ஷே (Porsche) காரில் ஸ்டைலாக வந்து இறங்கிய படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த படங்கள் வெளியானதில் இருந்து, இணையத்தில் பரவும் ட்ரோல்களுக்கு மத்தியில், பிருத்விராஜ் குறித்த பல்வேறு விமர்சனங்கள் மீண்டும் பேசு பொருளாகி உள்ளன.
சமகால நிகழ்வுகளில் இருந்து சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான பல விஷயங்கள் வரை ட்ரோல்கள் மூலம் கவனத்தை ஈர்க்கின்றன. புகழ்ந்து பேசவோ அல்லது விமர்சிக்கவோ ட்ரோல்கள் ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளன என்றால் அது மிகையில்லை. குறிப்பாக, நடிகர்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி ட்ரோல் ஆகுகின்றன.

மேலும் சில சமயங்களில் ரசிகர் மன்றங்கள் மற்ற நடிகர்களுக்கு எதிராக ட்ரோல்களை உருவாக்கி பரப்புவதையும் காண முடிகிறது. அந்த வகையில் சமீப காலமாக, நடிகர் பிருத்விராஜுக்கு எதிராக கேரளாவில் சமூக வலைத்தளங்களில் பரவலாக ட்ரோல்கள் வெளிவந்துள்ளன. அவரது ஆரம்ப கால திரைப்படங்களின் காட்சிகளைப் பயன்படுத்தி, 'நடிப்பு தெரியாது', 'கல்வி அறிவு இல்லை' போன்ற விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
எனினும், அதன்பின் நடிப்பு, இயக்கம் மற்றும் பாடல் பாடுவது என பல துறைகளில் அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார். பல சூப்பர் ஸ்டார்கள் கூட தங்கள் ஆரம்ப காலங்களில் பல்வேறு குறைபாடுகளுடன் இருந்திருக்கின்றனர். ஆனால் அவற்றை சரிசெய்து, புதுமைகளைக் கொண்டுவந்துதான் இன்று அவர்கள் சூப்பர் ஸ்டார்களாக உருவெடுத்துள்ளனர்.

பிருத்விராஜ், நடிப்பு மற்றும் இயக்கம் மட்டுமின்றி, ஆடம்பர வாகனங்கள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது கேரேஜில் பல உயர்ரக கார்கள் இருந்தாலும், போர்ஷே 911 ஜிடி3 டூரிங் (911 GT3 Touring) அவரது மதிப்புமிக்க சேகரிப்பில் தலைசிறந்த ஒன்றாகும். இதன் அடிப்படை விலை சுமார் ரூ.3.49 கோடி ஆகும்.
ஆனால் உரிமையாளர் பிரித்விராஜின் விருப்பத்திற்கேற்ப தனிப்பயனாக்கப்பட்டுள்ளதால் இதன் உண்மையான மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். இந்த சிறப்புமிக்க போர்ஷே 911 ஜிடி3 டூரிங் காரை வாங்குவதற்கு நீண்ட காத்திருப்பு காலம் தேவைப்படும். இந்தியாவில் மிகச் சிலரிடமே இந்த சூப்பர்கார் உள்ளது. பொதுவாக பிருத்விராஜ் தனது இந்த காரை பொதுவெளியில் அதிகம் பயன்படுத்தியது இல்லை.
ஆனால் தற்போது அவர் தனது படப்பிடிப்பு தளத்திற்கு இந்த காரில் வந்துள்ளார். பிரித்விராஜ் வைத்திருக்கும் போர்ஷே 911 ஜிடி3 டூரிங் பேக்கேஜில் 4.0 லிட்டர் பிளாட்-சிக்ஸ் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் உடன் காரை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு PDK ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம்.
போர்ஷே நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த என்ஜின் 502 bhp சக்தியையும், 470 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த சூப்பர்கார் வெறும் 3.2 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 317 கிமீ ஆகும். போர்ஷேவின் இந்த ஸ்போர்ட்ஸ் கார் சுமார் 9 கிமீ மைலேஜ் தருவதாக போர்ஷே நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிருத்விராஜ் அகேட் கிரே மெட்டாலிக் நிறத்தில் இந்த காரை வாங்கி பயன்படுத்தி வருகிறார். இவரது போர்ஷே 911 ஜிடி3 டூரிங் கார் அதன் முதல் பார்வையிலேயே தனித்துவமான ஸ்டைலைக் கொண்டுள்ளது. புதிய கார்பன் ஃபைபர் பொனட் இரண்டு ஏர் அவுட்லெட்கள் உடன், பெரிய ரேடியேட்டர் கிரில் கொண்ட புதிய பம்பர், விரிவுப்படுத்தக்கூடிய முன்பக்க ஸ்பிளிட்டர், வாத்து-கழுத்து வடிவிலான பெரிய பின்புற விங், புதிய டிஃப்யூசர், அடாப்டிவ் ஸ்பாய்லர் மற்றும் குரோம் விண்டோ ட்ரிம் ஆகியவை இதன் வெளிப்புற சிறப்பம்சங்களாகும்.
காரின் உட்புறத்தில் டிரைவ் மோட் செலக்டருடன் கூடிய மூன்று-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன், போர்ஷே கம்யூனிகேஷன் மேனேஜ்மென்ட் (PCM) மற்றும் எலக்ட்ரிக்காக சரிசெய்யக்கூடிய ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் என பல அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலையாள உலகை தாண்டி இந்திய அளவில் முன்னணி நடிகராக விளங்கும் பிரித்விராஜிடம் போர்ஷே 911 ஜிடி3 டூரிங் தவிர, லம்போர்கினி உருஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடிஸ் ஜி-வேகன், மினி கூப்பர் போன்ற பல ஆடம்பர கார்கள் உள்ளன. சமீபத்திய கேலி, கிண்டல்களுக்கு தனது லக்சரியான வாழ்க்கை மூலம் நெட்டிசன்களுக்கு பதிலளிப்பதற்காகவே இத்தகைய விலையுயர்ந்த போர்ஷே காரின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் பிரித்விராஜ் சென்றுள்ளார் என நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications








