லம்போர்கினி காருக்கு ரூ.7 லட்சத்தில் பேன்ஸி நம்பர் வாங்கிய நடிகர் பிருத்விராஜ்!

Written By:

மலையாள நடிகர்களுக்கு இடையே விலை உயர்ந்த கார்களை வாங்குவதில் போட்டா போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல முன்னணி மலையாள நடிகர் பிருத்திவிராஜ் லம்போர்கினி சூப்பர் காரை வாங்கி இருக்கிறார்.

லம்போர்கினி காருக்கு ரூ.7 லட்சத்தில் பேன்ஸி எண் வாங்கிய நடிகர் பிருத்விராஜ்!

பெங்களூரில் உள்ள லம்போர்கினி ஷோரூமில் புதிய லம்போர்கினி ஹூராகென் சூப்பர் காரை முன்பதிவு அண்மையில் டெலிவிரி பெற்றார். ரூ.3 கோடி விலையில் இந்த காரை வாங்கி இருக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.

லம்போர்கினி காருக்கு ரூ.7 லட்சத்தில் பேன்ஸி எண் வாங்கிய நடிகர் பிருத்விராஜ்!

நடிகை அமலாபால் உள்ளிட்ட மலையாள சினிமா நட்சத்திரங்கள் புதுச்சேரியில் சொகுசு கார்களை வாங்கி வரி ஏய்ப்பு செய்தது அம்பலமானது. இந்த நிலையில், நடிகர் பிருத்விராஜ் லம்போர்கினி காரை பெங்களூரில் வாங்கினாலும், கேரளாவில்தான் பதிவு செய்து முன்மாதிரியாக மாறி இருக்கிறார்.

லம்போர்கினி காருக்கு ரூ.7 லட்சத்தில் பேன்ஸி எண் வாங்கிய நடிகர் பிருத்விராஜ்!

ரூ.3 கோடி மதிப்பில் வாங்கிய அந்த லம்போர்கினி ஹூராகென் காரை எர்ணாகுளம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்தார். இதற்காக, ரூ.43.15 லட்சம் வரியை ரொக்கமாக செலுத்தி பதிவு செய்துள்ளார்.

லம்போர்கினி காருக்கு ரூ.7 லட்சத்தில் பேன்ஸி எண் வாங்கிய நடிகர் பிருத்விராஜ்!

மேலும், தனது புதிய லம்போர்கினி ஹூராகென் சூப்பர் காருக்கு KL07 CN 0001 என்ற பதிவு எண்ணையும் ரூ.7 லட்சம் செலுத்தி வாங்கி இருக்கிறார். இந்த பேன்ஸி பதிவு எண்ணை 4 பேர் கேட்டதால், ஏலம் விடப்பட்டது.

லம்போர்கினி காருக்கு ரூ.7 லட்சத்தில் பேன்ஸி எண் வாங்கிய நடிகர் பிருத்விராஜ்!

இந்த ஏலத்தில் பிறரைவிட அதிக தொகை கொடுத்து அந்த பதிவு எண்ணை பெற்றிருக்கிறார் பிருத்விராஜ். வரி மற்றும் பேன்ஸி எண்ணிற்காக மொத்தமாக ரூ.50.15 லட்சத்தை தனது காருக்காக எர்ணாகுளம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கட்டியுள்ளார்.

லம்போர்கினி காருக்கு ரூ.7 லட்சத்தில் பேன்ஸி எண் வாங்கிய நடிகர் பிருத்விராஜ்!

இந்த காரில் சக்திவாய்ந்த 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 640 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

லம்போர்கினி காருக்கு ரூ.7 லட்சத்தில் பேன்ஸி எண் வாங்கிய நடிகர் பிருத்விராஜ்!

இந்த காரில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை வாய்ந்தது. மணிக்கு 320 கிமீ வேகம் வரை தொடும்.

லம்போர்கினி காருக்கு ரூ.7 லட்சத்தில் பேன்ஸி எண் வாங்கிய நடிகர் பிருத்விராஜ்!

நடிகர் பிருத்விராஜ் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கியிருப்பது மாலிவுட் சினிமா உலகத்தில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது. இதில், அவர் கேரளாவிலேயே பதிவு செய்து வரி கட்டி இருப்பதையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Actor Prithviraj pays Rs 7 lakh for this number to tag his new super car.
Story first published: Saturday, March 10, 2018, 14:06 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark