வரிசையா வாங்கி குவிக்கறாரு... மேலும் ஒரு விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிருத்விராஜ்... எவ்ளோனு தெரியுமா?

நடிகர் பிருத்விராஜ் மேலும் ஒரு விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வரிசையா வாங்கி குவிக்கறாரு... மேலும் ஒரு விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிருத்விராஜ்... எவ்ளோனு தெரியுமா?

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் பிருத்விராஜ். இவர் கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். பிருத்விராஜிடம் நிறைய விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. அதுகுறித்த செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.

வரிசையா வாங்கி குவிக்கறாரு... மேலும் ஒரு விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிருத்விராஜ்... எவ்ளோனு தெரியுமா?

இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு காரை பிருத்விராஜ் வாங்கியுள்ளார். மினி கூப்பர் ஜேசிடபிள்யூதான் (Mini Cooper JCW) அவர் புதிதாக வாங்கியுள்ள கார். ரெகுலர் மினி கூப்பர் காரின் அதிக செயல்திறன் மிக்க வெர்ஷன்தான் ஜேசிடபிள்யூ. ஜான் கூப்பர் ஒர்க்ஸ் (John Cooper Works) என்பதைதான் சுருக்கமான ஜேசிடபிள்யூ என அழைக்கின்றனர்.

வரிசையா வாங்கி குவிக்கறாரு... மேலும் ஒரு விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிருத்விராஜ்... எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் உள்ள பிரபலங்கள் மத்தியில் மினி கூப்பர் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் ரெகுலர் வெர்ஷன் உடன் ஒப்பிடுகையில் பிருத்விராஜ் வாங்கியுள்ள வெர்ஷன் வித்தியாசமானது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி இது மினி கூப்பர் காரின் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷன் ஆகும்.

வரிசையா வாங்கி குவிக்கறாரு... மேலும் ஒரு விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிருத்விராஜ்... எவ்ளோனு தெரியுமா?

எனவே ரெகுலர் வெர்ஷன் உடன் ஒப்பிடுகையில், இயந்திர ரீதியாக சில மாறுதல்களை ஜேசிடபிள்யூ வெர்ஷன் பெற்றுள்ளது. அத்துடன் தோற்றத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மினி கூப்பர் காரின் ஜேசிடபிள்யூ வெர்ஷன் இந்திய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஜேசிபி டபிள்யூ வெர்ஷனின் டெயில்கேட்டில் ஜேசிடபிள்யூ பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

வரிசையா வாங்கி குவிக்கறாரு... மேலும் ஒரு விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிருத்விராஜ்... எவ்ளோனு தெரியுமா?

இதன் மூலம் ரெகுலர் மினி கூப்பர் காரில் இருந்து ஜேசிடபிள்யூ வெர்ஷன் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. ரெகுலர் மினி கூப்பர் காரில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின்தான் ஜேசிடபிள்யூ வெர்ஷனிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் ரெகுலர் வெர்ஷனை காட்டிலும், ஜேசிடபிள்யூ வெர்ஷனில் இந்த இன்ஜின் அதிக சக்தியை வெளிப்படுத்தும்.

வரிசையா வாங்கி குவிக்கறாரு... மேலும் ஒரு விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிருத்விராஜ்... எவ்ளோனு தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 234 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 6.1 வினாடிகளில் எட்டி விடும். எனவே செயல்திறனில் இந்த கார் அசத்தும்.

வரிசையா வாங்கி குவிக்கறாரு... மேலும் ஒரு விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிருத்விராஜ்... எவ்ளோனு தெரியுமா?

அதே நேரத்தில் வசதிகளை பொறுத்தவரை மினி கூப்பர் ஜேசிடபிள்யூ காரில், ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் 8.8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஹார்மன் மற்றும் கார்டன் ஸ்பீக்கர் சிஸ்டம், ஜேசிடபிள்யூ ஸ்போர்ட் இருக்கைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மினி கூப்பர் ஜேசிடபிள்யூ காரின் விலை 45.50 லட்ச ரூபாய் ஆகும்.

வரிசையா வாங்கி குவிக்கறாரு... மேலும் ஒரு விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிருத்விராஜ்... எவ்ளோனு தெரியுமா?

இது எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. ஆன் ரோடு விலை இன்னும் ஒரு சில லட்சங்கள் கூடுதலாக வரும். நாங்கள் ஏற்கனவே கூறியபடி பிருத்விராஜ் கார்களை மிகவும் விரும்ப கூடியவர். அவரிடம் உள்ள கார்களில் லம்போர்கினி ஹூராகேன் மிகவும் குறிப்பிடத்தக்கது. இது விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.

வரிசையா வாங்கி குவிக்கறாரு... மேலும் ஒரு விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிருத்விராஜ்... எவ்ளோனு தெரியுமா?

மேலும் ரேஞ்ச் ரோவர் வோக் மற்றும் போர்ஷே கேயென்னே உள்ளிட்ட கார்களையும் பிருத்விராஜ் சொந்தமாக வைத்துள்ளார். அத்துடன் பிருத்விராஜ் குடும்பத்தினரிடம் புத்தம் புதிய டாடா சஃபாரி கார் ஒன்றும் இருக்கிறது. இதன் மூலம் பிருத்விராஜ் கார்களை எவ்வளவு நேசிக்க கூடியவர்? என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

வரிசையா வாங்கி குவிக்கறாரு... மேலும் ஒரு விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிருத்விராஜ்... எவ்ளோனு தெரியுமா?

பொதுவாக நடிகர், நடிகைகள் என்றாலே விலை உயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகளை அதிகம் வாங்க கூடியவர்கள்தான். அதற்கு பிருத்விராஜூம் விதிவிலக்கு அல்ல. பொதுவாக கேரள மக்கள் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது அதிக ரசனை மிக்கவர்களாக அறியப்படுகிறார்கள். எனவே பிருத்விராஜ் கார்களின் மீது அதிக ஈடுபாட்டுடன் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

வரிசையா வாங்கி குவிக்கறாரு... மேலும் ஒரு விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிருத்விராஜ்... எவ்ளோனு தெரியுமா?

பிருத்விராஜ் புதிய மினி கூப்பர் ஜேசிடபிள்யூ காரை டெலிவரி எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அவரது ரசிகர்கள் இந்த புகைப்படங்களை ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த காருடன் பிருத்விராஜை சாலையில் பார்க்க வேண்டும் என அவரது ரசிகர்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor prithviraj sukumaran buys mini cooper jcw here are all the details
Story first published: Wednesday, September 29, 2021, 16:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X