நடிகராக இருந்தாலும், பல மாதங்கள் காக்க வைத்த போர்ஷே - மனைவி உடன் ஒருவழியா காரை டெலிவிரி எடுத்துட்டாரு!!

நடிகராக இருந்தாலே அவ்வப்போது புது, புது கார்களை வாங்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. ஏனெனில், அப்போதுதான் அப்டேட்டாக இருக்கிறார் என ரசிகர்கள் எண்ணுவார்கள் என நிறைய நடிகர்கள் நினைக்கின்றனர். குறிப்பாக, மலையாள நடிகர்களுக்கு தனிப்பட்ட முறையில் லக்சரி கார்கள் என்றாலே கூடுதல் பிரியம் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். சமீபத்தில் கூட முன்னணி மலையாள நடிகர் டோவினோ தாமஸ் புதியதாக பிஎம்டபிள்யூ எக்ஸ்.எம் என்கிற ஹைப்ரீட் காரை வாங்கி இருந்ததை பற்றி நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இந்த வரிசையில், பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் புதியதாக போர்ஷே 911 ஜிடி3 என்கிற விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார்.

கேரள சினிமாவில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் விளங்கும் பிரித்விராஜ் சுகுமாறன், தமிழிலும் மொழி, இராவணன், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். பிரபல மலையாள நடிகர் மோகன் லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி ஹிட் கொடுத்ததன் மூலம் இயக்குனராகவும் பிரித்விராஜ் பணியாற்றி வருகிறார்.

prithviraj buys porsche 911 gt3

நடிகர் பிரித்விராஜுக்கு சினிமா எந்த அளவிற்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு கார்களும் பிடித்தமான ஒன்றாகும். கேரள சினிமாவில் பலர் பிரித்விராஜிடம் கேட்ட பின்னரே நிறைய பேர் தங்களது புதிய காரை வாங்குவதாக கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாக, பிரித்விராஜ் அவ்வப்போது புது, புது கார்களை வாங்குவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த வரிசையில் புதியதாக விலையுயர்ந்த போர்ஷே 911 ஜிடி3 காரை நடிகர் பிரித்விராஜ் வாங்கியுள்ளார்.

பொதுவாகவே, போர்ஷே நிறுவனத்தின் கார்கள் செயல்திறன்மிக்கவையாக பார்க்கப்படுகின்றன. அதிலிலும் இது, ஜிடி வெர்சன் ஆகும். ஆதலால், நடிகர் பிரித்விராஜ் வாங்கியிருக்கும் கார் ஆனது மற்ற போர்ஷே கார்களிலேயே மிகவும் செயல்திறன்மிக்கது ஆகும். இந்தியாவில் போர்ஷே 911 ஜிடி3 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.3.49 கோடியாக உள்ளது.

prithviraj buys porsche 911 gt3

நடிகர் பிரித்விராஜ் புதியதாக போர்ஷே 911 ஜிடி3 கார் ஒன்றை புக் செய்துள்ளதாகவும், அந்த காரை இவர் உடனே டெலிவிரி பெற்றுவிட்டதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், போர்ஷே 911 ஜிடி3 காரை இப்போதுதான் பிரித்விராஜ் டெலிவிரி பெற்றுள்ளார். பிரித்விராஜின் வீட்டிற்கு வந்து இந்த போர்ஷே கார் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. அந்த சமயத்தில், பிரித்விராஜ் உடன் அவரது மனைவி சுப்ரியாவும் இருந்தார்.

911 ஜிடி3 காரை பிரித்விராஜுக்கு டெலிவிரி செய்திருப்பதை போர்ஷே இந்தியா நிறுவனம் அதன் சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ உடன் தெரிவித்துள்ளது. இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. ஜெர்மனியில் உற்பத்தி செய்யப்பட்டு நேரடியாக அங்கிருந்து இந்தியாவில் டெலிவிரி செய்யப்பட்டு உள்ளது. இதனால், வழக்கத்தை காட்டிலும் காரின் விலை அதிகமாக இருக்கும்.

prithviraj buys porsche 911 gt3

நடிகர் பிரித்விராஜிடம் ஏற்கனவே போர்ஷே 911 கேப்ரியோலெட் கன்வெர்டபிள் கார் இருந்தது. அதனை மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இவர் வைத்திருந்தார். தற்போது அதேபோல், புதிய போர்ஷே 911 ஜிடி3 காரையும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வாங்கியுள்ளார். போர்ஷே 911 ஜிடி3 பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றுள், 911 ஜிடி3 டூரிங் வேரியண்ட்டை பிரித்விராஜ் வாங்கியுள்ளார்.

எந்த வேரியண்ட்டில் வாங்கியிருந்தாலும், நிச்சயமாக தனது விருப்பத்திற்கு ஏற்ப காரை பிரித்விராஜ் கஸ்டமைஸ் செய்துக் கொண்டிருப்பார். இந்த போர்ஷே காரை சொந்தமாக்குவதில் உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால், இதனை புக் செய்பவர்கள் ஜெர்மனியில் இருந்து காரை கொண்டுவரும் வரையில் நீண்ட மாதங்களுக்கு காத்திருக்க வேண்டி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் பிரித்விராஜிடம் லம்போர்கினி உருஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்கள் உள்ளன. மேலும், ஏற்கனவே கூறியதுபோல், போர்ஷே 911 கேப்ரியோலெட் கன்வெர்டபிள் காரையும் இவர் வைத்துள்ளார். போர்ஷே கார்கள் இரண்டையும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு பதிலாக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வாங்கியதில் இருந்து நடிகர் பிரித்விராஜ் ஓர் சிறந்த கார் டிரைவர் என்பதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 24, 2024, 19:00 [IST]
English summary
Actor prithviraj sukumaran buys porsche 911 gt3 check price features all details
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X