மொத்தமா 10 டிராக்டர்களை வாங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்.. எல்லாமே ஏழை விவசாயிகளுக்காம்! 1டிராக்டர் விலையே இவ்ளோவா

எந்த கட்சியில் சேரலாம் அல்லது எந்த கட்சியைத் தொடங்கலாம் என தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் சிலர் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில், ஓர் நடிகர் அவர் மீது எந்தவொரு அரசியல் வாடையும் வீசாத நிலையில், அவர் மக்கள் நல பணிகளை மிக சிறப்பாக மேற்கொண்டு வருகின்றார்.

ஆமாங்க நடிகர் ராகவா லாரன்-ஸைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கின்றோம். சமீபத்தில் ஏழை பெண் ஒருவருக்கு இவர் ஆட்டோவை வாங்கி பரிசாக வழங்கினார். அதுதவிர, ஓர் ஏழைப் பெண்ணுக்கு பரிசாக டிவிஎஸ் ஸ்கூட்டர் ஒன்றையும் வழங்கினார். இதுமட்டுமல்ல, சமீபத்தில் ஓர் கலை குழுவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர்கள் அனைவருக்கும் டிவிஎஸ் ஜெஸ்ட் ஸ்கூட்டரை வாங்கி பரிசாக வழங்கினார்.

Tractor to poor farmers

மாற்ற திறனாளி இளைஞர்கள் அனைவரையும் சிறப்பிக்கும் விதமாக அவர் ஸ்கூட்டரை வாங்கி பரிசாக வழங்கினார். அந்த வாகனங்கள் அனைத்தும் அவர்களுக்கு ஏற்ப மாடிஃபிகேஷன் செய்து வழங்கினார். இந்த நிலையிலேயே தன்னுடைய இந்த மக்கள் நல பணியை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் விதமாக நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை விவசாயிகளுக்கு உதவ முன் வந்திருக்கின்றார்.

ஏழை விவசாயிகள் சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு ஏர் உழுவ உதவும் டிராக்டர்களை பரிசாக வழங்க இருக்கின்றார், நடிகர் ராகவா லாரன்ஸ். இதற்காக அவர் தற்போது 10 புதிய டிராக்டர்களை வாங்கி இருக்கின்றார். இந்த டிராக்டர்கள் அனைத்தும் ஏழை விவசாயிகள் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்து இருக்கின்றார்.

Raghava lawrence gifted tractor to poor farmers

இதுகுறித்த வீடியோவையே அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். மாற்றம் என்கிற பெயரிலேயே இந்த சேவையை அவர் 'உழைப்பாளர் தினம்' ஆன 'மே1' அன்று அறிவித்தார். மிக சிறந்த நடன கலைஞரும், திரைப்பட நடிகரும் மற்றும் இயக்குநருமான நடிகர் ராகவா லாரன்ஸ் 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் இறப்பிற்கு பின்னர், அவரது நினைவாக ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கினார்.

இதைத்தொடர்ந்து, அந்த அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடியையும் அவர் வழங்கினார். இந்த அறக்கட்டளையின் பேரிலும், தன்னுடைய மக்கள் நல திட்டங்களின் பெயரிலும் அவர் பல்வேறு சேவையை மக்களுக்கு ஆற்றி வருகின்றார். இந்த நிலையிலேயே அவர் மொத்தமாக 10 டிராக்டர்களை வாங்கி இருக்கின்றார்.

மஹிந்திரா 575 டிஐ (Mahindra 575 DI) டிராக்டரே ஏழை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ராகவா லாரன்ஸ் வாங்கி இருக்கின்றார். நிலத்தை ஒழுங்குப்படுத்துதல், விளைச்சலுக்கு ஏற்றவாறு நிலத்தை தோண்டிவிடுதல் போன்ற பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டதே இந்த டிராக்டர் ஆகும்.

இதையே விவசாயிகளுக்காக வழங்குவதற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் வாங்கி இருக்கின்றார். ஏற்கனவே விழுப்புரத்தைச் சேர்ந்த ஓர் ஏழை விவசாயிக்கு டிராக்டரை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இதேபோல், அடுத்தடுத்த டிராக்டர்களையும் அவரே விவசாயிகளைத் தேடி சென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Raghava lawrence tractor

மஹிந்திரா 575 டிஐ டிராக்டர் இந்தியாவில் ரூ. 6.80 லட்சம் தொடங்கி ரூ. 7.10 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. 8 விதமான முன்னோக்கி நகர்வதற்கான கியர்களும், இரண்டு விதமான ரிவர்ஸ் செய்வதற்கான கியர்களும் இந்த டிராக்டரில் வழங்கப்பட்டு இருக்கும். இத்துடன், இதில் 2730 சிசி திறனை வெளியேற்றும் 4 சிலிண்டர் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ராகவா லாரன்ஸ் சின்னத்திரை நடிகர் பாலாவுடன் இணைந்து உதவிகளை வழங்கி வந்த நிலையில், இப்போது அவர் தனியாளாக மக்கள் நல பணிகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கின்றார். இவரின் சேவையை அடுத்து வரும் நாட்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 2, 2024, 23:27 [IST]
English summary
Actor raghava lawrence purchased 10 tractors to support poor farmers
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X