இந்த படத்தில் இருப்பது அந்த பிரபல நடிகரா!! ஆள் அடையாளமே தெரியவில்லை - புகைப்படம் இணையத்தில் வைரல்!
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில், பெங்களூரில் அவர் பேருந்து நடத்துனராக பணியாற்றிய பகுதிக்கு சர்பிரைஸ் விசிட் கொடுத்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் பேருந்து நடத்துனராக பணியாற்றிக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தையும், நடிகர் ரஜினிகாந்த் நடத்துனராக பணியாற்றிய பேருந்து டிப்போ எது என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அறிமுகமே தேவையில்லை. சின்ன குழந்தைகளுக்கு கூட சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியும். 170க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் அனுபவம் வாய்ந்த நடிகராக விளங்கும் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

தமிழ் சினிமாவை ஆட்சி செய்தாலும், நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர். பின்னர் தன் இளம் வயதில் பெங்களூர் போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராக பணிக்கு சேர்ந்தார். பெங்களூர், ஜெயாநகர் பேருந்து டிப்போ இவர் பணியாற்றிய பகுதி ஆகும். இதனாலேயே, சமீபத்தில் பெங்களூருக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் ஜெயாநகர் பேருந்து டிப்போவிற்கும் சென்று தனது இளமை கால நினைவுகளை நினைத்து பார்த்துள்ளார்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அங்கு சென்றிருந்தாலும், ரஜினிகாந்தின் வருகையை அறிந்த பின்னர் பெரிய கூட்டம் ஜெயாநகர் டிப்போவை சுற்றிலும் கூடிவிட்டது. பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸார் கூட ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் அந்த சமயத்தில் இணையத்தில் வைரலாகின.

இந்த நிலையில், பெங்களூர் ஜெயாநகர் டிப்போவில் பேருந்து நடத்துனராக நடிகர் ரஜினிகாந்த் பணியாற்றிய போது எடுக்கப்பட்ட அரிய பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. பிளாக் & ஒயிட்டில் இருக்கும் இந்த பழமையான புகைப்படத்தில், பேருந்து நடத்துனருக்கான உடையில் தொப்பி அணிந்துக் கொண்டு சக பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுடன் ரஜினி நிற்கிறார்.
இது நடிகர் ரஜினிகாந்த் என செய்திகள் வெளியாகினாலும், தொப்பி அணிந்திருப்பதாலும், புகைப்படம் மிகவும் பழையது என்பதாலும் இது நடிகர் ரஜினிகாந்த் தானா என நமக்கு சந்தேகம் எழாமல் இல்லை. இந்த புகைப்படத்தில், ரஜினிகாந்துடன் சேர்த்து மொத்தம் 4 பேர் உள்ளனர். அவர்களுக்கு பின்னால், மாலை, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்து நிற்கிறது.

எனவே, இந்த புகைப்படம் ஏதேனும் ஆயுத பூஜை அல்லது புதிய பேருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்த போது எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் சுருக்கமாக BMTC என அழைக்கப்படுகிறது. அதுவே, ரஜினிகாந்த் பணியாற்றிய சமயத்தில் BTS என அழைக்கப்பட்டு வந்தது. பெங்களூர் போக்குவரத்து கழகத்தில் ஜெயாநகர் பகுதி டிப்போ 4வது இடத்தை வகிக்கிறது.
பேருந்து நடத்துனராக பணியாற்றிய சமயத்தில் ரஜினிகாந்த் பேருந்துக்குள் ஏறுவதும், இறங்குவதும், விசிலடிப்பதும் மிக ஸ்டைலாக இருக்கும் என சிலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். சினிமா துறையை சேர்ந்தவர்கள் கூட ரஜினியின் இந்த ஸ்டைலை நேரில் கண்டுள்ளனர். அதன்பின் நடிகர் ரஜினிகாந்த் அடைந்திருக்கும் உயரம் மிக பெரியது. ஆனால் இதுவரையில், லம்போர்கினி உருஸ் என்ற ஒரேயொரு சூப்பர் லக்சரி காரில் மட்டுமே ரஜினிகாந்த் காட்சி தந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா...
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படத்தில் இருப்பது நடிகர் ரஜினியா என்பது ரஜினிக்கும், அவருக்கு மிக நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே தெரியும். ஒருவேளை ரஜினி தான் என்றால், இந்த புகைப்படத்தை பார்க்கும்போது நடிகர் ரஜினிகாந்த் மிகவும் மகிழ்ச்சி அடைவார். ஏனெனில் இவ்வாறான இளமை கால நினைவுகளை கிளப்பிவிடும் புகைப்படம் கிடைத்தால் யாருக்குத்தாங்க சந்தோஷம் இல்லாமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications
