தொடர்கதையான அதிவேக கார் விபத்துக்கள்... சென்னை மக்கள் அச்சம்!
நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா ஓட்டிச் சென்ற கார் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் காயமடைந்தார். இதுபோன்ற சம்பவங்கள் சென்னை மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ஓட்டி வந்த கார் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில், அந்த ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த மணி என்பவர் காயமடைந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் கூட்டமும் கூடியது.

தகவல் அறிந்த நடிகர் தனுஷ் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கிருந்தவர்களிடம் சமரசம் பேசி, இந்த பிரச்னையை முடித்து வைத்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சவுந்தர்யா ஓட்டி வந்த ஹூண்டாய் க்ரெட்டா கார் அதிவேகத்தில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ ரிக்ஷா மீது மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இதுபோன்ற விபத்துக்கள் சென்னையில் அடிக்கடி நடந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொண்டு விட்டு திரும்பும் பிரபலங்கள்தான் இதுபோன்ற விபத்துக்களில் சிக்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நடிகர் அருண் விஜய் போலீஸ் வாகனத்தின் மீது காரை மோதி விபத்துக்குள்ளான சம்பவமும், ஆடி கார் ஐஸ்வர்யா போன்ற சம்பவங்களும் சென்னை சாலைகளில் இரவு வேளைகளில் பயணிப்போரின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற விபத்துக்களை தடுக்க, போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் சமரசம் செய்யப்பட்டாலும், அது போலீசாரின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
Photo Source: India Today

இதுபோன்ற விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக போலீசார் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பது தெரியவில்லை. விசாரித்து வருவதாக வழக்கம்போல் சம்பிரதாயமான பதிலை மட்டும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரவு வேளைகளில் கண்காணிப்பையும், வாகன தணிக்கையையும் போலீசார் அதிகப்படுத்துவது இதுபோன்ற விபத்துக்களை குறைக்க வழிவகுக்கும். மேலும், விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள் மீது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுத்தால் பிறருக்கு அது பாடமாக அமையும்.

எதிர்பாராமல் நிகழ்வதுதான் விபத்து என்பதை மறப்பதற்கில்லை. ஆனால், விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து போலீசார் உரிய நடவடிக்கை என்பதே எதிர்பார்ப்பு.
புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் படங்கள்!
புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








