சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் இவ்வளவு சிம்பிளான கார்ல வராரே! ரஜினி வந்த காரை பற்றி தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் காரில் செல்லும் வழியில் திடீரென காரை நிறுத்தி சாலையோர கோவிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ அவர் வந்திறங்கிய கார் தற்போது சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. அவரிடம் பல காஸ்ட்லியான கார்கள் இருக்கும் நிலையில் அவர் எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் பிளஸ் காரை பயன்படுத்தியது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் உச்ச சினிமா பிரபலங்களில் ஒருவராக இருப்பவர் ரஜினி காந்த் தற்போது இவர் ஜெயிலர் 2, கூலி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் காரில் செல்லும் போது வழியில் உள்ள கோவிலில் காரை நிறுத்தி சாமி தரிசனம் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த கோவிலுக்கு அவர் காரில் சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Rajinikanth Spotted in MG Hector Plus

நடிகர் ரஜினி காந்த் இந்த கோவிலுக்கு எம்னி ஹெக்டர் பிளஸ் காரில் தான் பயணம் செய்து சென்றார். இந்த காரிலிருந்து இவர் இறங்கி செல்லும் வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த கார் இந்திய மார்கெட்டில் ரூ20.78 லட்சம் முதல் ரூ27.63 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 31 விதமான வேரியன்ட்களில் வறி்பனையாகி வருகிறது. பல்வேறு சொகு அம்சங்கள் இ்நத காரில் இருக்கிறது.

எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் காரை பொருத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் மார்கெட்டில் கிடைக்கிறது. இந்த காிரன் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்ப்டடுள்ளது. இது மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது. அது மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

Rajinikanth Spotted in MG Hector Plus

இந்த காரில் உள்ள சிறப்பம்சம் என்றால் அதிக உட்புற இடவசதி இந்த காரில் இருக்கிறது. இதனால் வசதியாக பயணிக்க முடியும். நீண்ட தூரம் பயணிக்க இந்த கார் ஏற்றதாக இருக்கிறது. இந்த காரின் 3வது வரிசை சீட்டில் 3 பெரியவர்கள் தாராளமாக அமர்ந்து கொள்ளவும் இடவசதி இருக்கிறது. இந்த காரின் இன்ஜினும் வெகு சிறப்பாக இருக்கிறது. இதனால் பிரபலங்கள் பலர் கூட இந்த காரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த காரில் டூயல் பேன் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. இது போக சீட்டுகள் எல்லாம் வசதியாக அமர்ந்து செல்லும் வகையில் பெரிய சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையில் டிரைவர் சீட்டும், 4 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய அளவில் முன்பக்க பயணிகள் சீட்டும் வழங்கப்பட்டுள்ளன.

Rajinikanth Spotted in MG Hector Plus

மேலும் இந்த காரில் உட்புறம் 14 இன்ச் கொண்ட போர்ட்ரைட் அளவிலான எச்டி இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளுது. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேவை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பூட் வசதி 155 லிட்டராக இருக்கிறது. இதுவே பின்புற சீட்களை மடக்கிவிட்டால் 530 லிட்டர்கொண்ட பூட் வசதியாக இதை மாற்றிக்கொள்ள முடியும். இந்த காரில் பாதுகாப்பிற்காக லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பம் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ரஜினிகாந்திடம் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட பல காஸ்ட்லியான சொகுசு கார்கள் எல்லாம் இருக்கிறது. இருந்தாலும் இவர் இந்த சிம்பிளான காரை எனது பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் அவர் எவ்வளவு சிம்பிளான நபர் என்பது தெரிகிறது. வழக்கமாக நடிகர்கள் தங்கள் சமூக அந்தஸ்திற்காக காஸ்ட்லியான கார்களை பயன்படுத்துவார்கள். ஆனால் ரஜினி தமது தேவையை அறிந்து கார்களை பயன்படுத்துவது நிச்சயம் ஆச்சரியமான விஷயம் தான்.

More from DriveSpark

Article Published On: Friday, April 25, 2025, 18:45 [IST]
English summary
Actor rajinikanth spotted in mg hector plus
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X