சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்... கார் சன்ரூஃப் வழியா எட்டி பார்ப்பாருனு நினைச்சே பார்க்கல!!

சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நகரும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரின் சன்ரூஃப் வழியாக கூடியிருந்த ரசிகர்களுக்கு காட்சி தந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவையும், இந்தியாவில் இவ்வாறு சன்ரூஃப் வழியாக எட்டி பார்ப்பது சட்டத்திற்குள்ளானதா என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.

சன்ரூஃப் உடன் ஏகப்பட்ட கார்கள் இன்றைய காலக்கட்டத்தில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன. இதில் சிறப்பு என்னவென்றால், சன்ரூஃப் உடன் காரை வாங்க கோடி கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்றில்லை, சில லட்சங்களை செலவழித்தாலே போதுமானது. ஹூண்டாய் க்ரெட்டா இதற்கு மிக சிறந்த உதாரணம்.

rajinikanth stands out of car sunroof

ஆனால் அத்தகைய கார்களில் சன்ரூஃப்-ஐ பயன்படுத்துவதற்கு சில பல கட்டுப்பாடுகள் உள்ளன. மோட்டார் வாகன சட்டம் என்ன சொல்கிறது என்றால், இயங்கும் காரில் சன்ரூஃப் வழியாக எட்டிப் பார்ப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இந்த குற்றத்திற்காக அபராதம் விதிக்கும் போலீஸார் மிகவும் குறைவே. ஆக்ரோஷமாக காரை இயக்கியவாறு, சன்ரூஃப் வழியாக நின்றுக்கொண்டு பயணம் செய்தால் மட்டுமே போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர்.

ஓய்வு நிலையில் இருக்கும்போதோ அல்லது குறைந்த வேகத்தில் இயங்கும் காரில் இருந்தோ சன்ரூஃப் வழியாக எட்டிப் பார்த்தால் போலீஸார் கண்டுக்கொள்வது இல்லை. இவ்வாறு கார் சன்ரூஃப்-ஐ பற்றி குழப்பமான சட்ட விதிமுறைகள் உள்ள நிலையில், சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தனது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரில் சன்ரூஃப் வழியாக வெளியே வந்து கூடியிருந்த ரசிகர்களுக்கு காட்சி தந்துள்ளார்.

போலீஸாரின் பாதுகாப்புடன் மெதுவாக ரஜினிகாந்தின் லேண்ட் க்ரூஸர் கார் வர, அதில் இருந்து வெளியே தனது மார்பு பகுதி வரையில் தெரியும் அளவிற்கு நின்றவாறு, கூடியிருந்த ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறு சூப்பர்ஸ்டார் காட்சித்தந்தார். இந்த நிகழ்வை ரஜினி ரசிகர் ஒருவர் தனது மொபைலில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட, அது தற்போது வைரலாகி வருகிறது.

rajinikanth stands out of car sunroof

மெதுவாக இயங்கிய காரில் இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் நடந்துக்கொண்டதால் இது சர்ச்சையாகவில்லை. அதுவே வேகமாக இயங்கும் காரில் இவ்வாறு செய்திருந்தால், அது மிகுந்த விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும். மெதுவாக இயங்கும் காரில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தவாறு பல்வேறு அரசியல் தலைவர்கள் பொதுமக்களுக்கு காட்சி தந்துள்ளதை பலமுறை பார்த்துள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி கூட இவ்வாறு செய்துள்ளார்.

குறிப்பாக, தேர்தல் பிரச்சாரங்களின் போது பொதுமக்களுக்கு தனது முகம் நன்கு பதிய வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகள் இவ்வாறு செய்வது வழக்கம். ரஜினிகாந்த் போன்ற நடிகர்களும் இவ்வாறு செய்துள்ளனர். முக்கியமாக, பாலிவுட்டில் பல நடிகர்கள் இவ்வாறு சன்ரூஃப் வழியாக ரசிகர்களுக்கு தனது முகத்தை காட்டியதை பார்த்திருக்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: காரில் சன்ரூஃப் எந்த அளவிற்கு அட்டகாசமான வசதியோ, அதே அளவிற்கு ஆபத்தான வசதியும் கூட. வேகமாக சென்று கொண்டிருக்கும் காரில் சன்ரூஃப் வழியாக எட்டிப்பார்த்து கொண்டிருக்கையில், திடீர் பிரேக் அடித்தால் அந்த பயணி காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்படவும் வாய்ப்புள்ளது. இதனால், வேகமாக பிரபலமாகி வரும் கார் சன்ரூஃப் விஷயத்தில் போலீசார் ஓர் நிலையான சட்டத்தை கொண்டுவர வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 3, 2023, 11:32 [IST]
English summary
Actor rajinikanth stands out of toyota land cruiser sunroof
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+