சிங்கத்தை பார்க்க குகைக்கு வந்த பிரபல நடிகர்!! கொண்டுவந்த லேண்ட் ரோவர் காரின் ஹைலைட்ஸை பற்றி தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனியை அவரது இல்லத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் சந்தித்து பேசியுள்ளார். இதில், தோனி வீட்டிற்கு நடிகர் ராம் சரண் கொண்டுவந்த லேண்ட் ரோவர் கார் தான் ஹைலைட்டே. அப்படி என்ன லேண்ட் ரோவர் காரில் ராம் சரண் வந்தார்? என்பதை வாருங்கள் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

2023 உலகக் கோப்பை 50-ஓவர் கிரிக்கெட் தொடர் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் துவங்கியுள்ள நிலையில், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலக கோப்பையை பெற்று தந்தவருமான மஹேந்திர சிங் தோனி புது ஹேர் ஸ்டைலில் இணையத்தில் கலக்குகிறார். புது ஹேர் ஸ்டைலில் தோனி இருக்கும் புகைப்படங்கள் சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

ram charan spotted in defender

இந்த நிலையில், எம்.எஸ் தோனியின் புதியதொரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் தோனி மட்டுமில்லை, தெலுங்கு நடிகர் ராம் சரணும் உள்ளார். தெலுங்கு நடிகர் ராம் சரணை பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். சமீபத்தில் கூட இவரது நடிப்பில் வெளியான "ஆர்.ஆர்.ஆர்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

டோலிவுட் நடிகரான ராம் சரண் மும்பையில் உள்ள மஹேந்திர சிங் தோனியின் வீட்டிற்கு சமீபத்தில் வருகை தந்துள்ளார். வீட்டிற்குள் தோனியுடன் சில நிமிடங்கள் பேசிய அவர் பின்னர் அங்கிருந்து விடைப்பெற்று சென்றுள்ளார். இதனை இருவரும் புகைப்படத்துடன் இணையத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக யூடியுப்பில் வெளியாகியுள்ள வீடியோவை கீழே செய்தியின் இறுதியில் காணலாம்.

ram charan spotted in defender

இந்த பயணத்திற்கு, நடிகர் ராம் சரண் தனது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை கொண்டுவந்துள்ளார். ராம் சரணின் இந்த டிஃபெண்டர் கார் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டது என்பது கூடுதல் தகவல். லேண்ட் ரோவர் டிஃபண்டர் கார்களுக்கு உலகளவில் ஃபேமஸ் உள்ளது. சொல்லப்போனால், இந்தியாவில் தான் சற்று குறைவு. இந்தியாவில் டிஃபெண்டர் கார்களின் விற்பனை சில ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டது.

அதன்பின், டிஃபெண்டர் கார்களின் விற்பனை இந்தியாவில் துவங்கப்பட்ட நிலையில், சினிமா நட்சத்திரங்கள் அதிகளவில் வாங்கி குவிக்கின்றனர். பெட்டக வடிவில், கம்பீரமான தோற்றம் கொண்ட டிஃபெண்டர் கார்கள் சினிமா நடிகர்களிடம் மட்டுமின்றி, நடிகைகள் பலரிடமும் உள்ளது. டிஃபெண்டர் கார்களின் சிறப்பம்சமே, அவற்றின் சொகுசான பயணமும், அதேநேரம் ஆஃப்-ரோடிலும் இயங்கும் திறன் ஆகும்.

ram charan spotted in defender

அதாவது, இவ்வாறான முக்கிய சந்திப்புகளுக்கும் டிஃபெண்டர் கார்களை எடுத்து செல்லலாம், அதேநேரம் அட்வென்ச்சரான காட்டு வழி பயணங்களுக்கும் பயன்படுத்தலாம். சமீப காலமாக இந்த கார்களின் விற்பனை அதிகரிப்பதை உணர்ந்த லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் டிஃபெண்டர் கார்களில் புதிய என்ஜின் ஆப்ஷன்களை இந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரிட்டிஷ் கார் நிறுவனமான லேண்ட் ரோவர் ஒரு காலத்தில் தனது டிஃபெண்டர் கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாமல் தவித்தது. ஆனால், இன்று டிஃபெண்டர் கார்களை வைத்திருப்பது ஓர் கௌரவமாக பார்க்கும் அளவிற்கு விஐபிகள் மத்தியில் பிம்பம் உருவாகியுள்ளது. தோனியை சந்திக்க ராம் சரண் வந்தது டிஃபெண்டரின் 90 வெர்சனிலா அல்லது 110 வெர்சனிலா என்பது தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, October 9, 2023, 16:05 [IST]
English summary
Actor ram charan spotted in his land rover defender at dhoni house
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X