ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கியும் ஆசை அடங்கவில்லை... கோடி ரூபாய் கார்களில் விளையாடும் பிரபல நடிகர்!!

பாலிவுட் நடிகர், நடிகைகள் என்றாலே அவ்வப்போது புதுசு, புதுசாக சொகுசு கார்களை வாங்குவார்கள் என்பது தெரிந்த விஷயம். ஆனால், இங்கு ஒரு தெலுங்கு டோலிவுட் நடிகர் ஒருவர் சமீபத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கியிருந்த நிலையில், தற்போது விலைமிக்க லெக்ஸஸ் காரை சொந்தமாக்கி உள்ளார். இதுதான் தற்போதைக்கு சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. யார் அந்த தெலுங்கு நடிகர் என்பதையும், அவர் வாங்கியுள்ள லெக்ஸஸ் காரை பற்றியும் விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டாவின் லக்சரி கார் பிராண்ட் தான் லெக்ஸஸ் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும். இந்தியாவில் லெக்ஸஸ் கார்கள் அதிகளவில் விற்பனையாகுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதிகமான விலையை இதற்கு முக்கிய காரணமாக சொல்லலாம். இருப்பினும் சில சமயங்களில், ரோல்ஸ்-ராய்ஸ் கார் அளவிற்கு கூட லெக்ஸஸ் கார்கள் விற்பனையாகுவதில்லை.

ram charan in lexus lm

இப்படிப்பட்ட சூழலில், இங்கு ஒரு தெலுங்கு நடிகர் ரோல்ஸ்-ராய்ஸ் காரை தொடர்ந்து லெக்ஸஸ் கார் ஒன்றை வாங்கி அசத்தி உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் ஆவார். ராம் சரண் வாங்கியிருப்பது விலையுயர்ந்த லெக்ஸஸ் எல்.எம் என்கிற லக்சரி எம்பிவி கார் ஆகும். இந்த கார் சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், அதற்குள் இந்திய பிரபலங்கள் மத்தியில் லெக்ஸஸ் எல்.எம் பிரபலமாக ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் கூட, இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா புத்தம் புதிய லெக்ஸஸ் எல்.எம் காரில் வந்ததை பார்த்திருந்தோம். அதேபோன்று, தெலுங்கு நடிகர் ராம் சரண் அவரது புத்தம் புதிய லெக்ஸஸ் எல்.எம் காரில் ஹைதராபாத் விமான நிலையத்திற்குள் செல்லும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

ram charan in lexus lm

காருக்குள் ராம் சரண் செல்கிறார் என்பது மட்டுமே கூறப்பட்டு உள்ளதே தவிர்த்து, ராம் சரணின் முகத்தை பார்க்க முடியவில்லை. ஏனெனில், வீடியோவில் கார் நிற்காமல் சென்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, காரின் ஜன்னல் கண்ணாடிகள் முற்றிலுமாக கருப்பு நிற டிண்ட் செய்யப்பட்டுள்ளன. நடிகர் ராம் சரணின் கார் என கூறப்படும் இந்த லெக்ஸஸ் எல்.எம் கார் சோனிக் அகாடே நிறத்தில் உள்ளது.

இந்தியாவில் மொத்தம் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் லெக்ஸஸ் எல்.எம் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் இரு ட்யூயல்-டோன் கலர் ஆப்ஷன்கள் அடங்குகின்றன. அதேபோல், காரின் உட்புற கேபினையும் கருப்பு மற்றும் சோலிஸ் வெள்ளை என்ற இரு நிறங்களுள் ஒன்றில் பெறலாம். வீடியோவில் கார் கண்ணாடி டிண்ட் செய்யப்பட்டுள்ளதால், காரின் உட்புற கேபினை ராம் சரண் எந்த கலர் ஆப்ஷனில் தேர்வு செய்துள்ளார் என்பதை அறிய முடியவில்லை.

ram charan in lexus lm

லெக்ஸஸ் எல்.எம் காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடி வரையில் உள்ளன. மொத்தம் 2 விதமான வேரியண்ட்களில் இந்த விலைமிக்க லெக்ஸஸ் கார் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. நடிகர் ராம் சரண் அவற்றுள் 350எச் 4-சீட்டர் அல்ட்ரா லக்சரி வேரியண்ட்டை வாங்கியுள்ளது போல் தெரிகிறது. இது விலைமிக்க டாப் வேரியண்ட் ஆகும். அதாவது, இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தான் ரூ.2.5 கோடி ஆகும்.

இந்த வேரியண்ட்டில் 2வது வரிசை இருக்கைகள் சூப்பரான கம்ஃபர்ட் வசதிகள் உடன் 48-இன்ச் திரை மற்றும் 23-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டத்தை கொண்டுள்ளன. இந்த இருக்கைகள் தேவைக்கேற்ப மடக்கிக் கொள்ளும் வசதியை கொண்டுள்ளதால், தியேட்டர் உணர்வை இந்த லெக்ஸஸ் காரினுள் பெறலாம். இதற்கேற்ப காரின் இயக்கம் மிகவும் மென்மையானதாக இருக்கும் என்பதை வீடியோவில் காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வீடியோவில், லெக்ஸஸ் எல்.எம் காரினுள் நடிகர் ராம் சரண் சென்றாரா என்பது உறுதியாக தெரியவில்லை. கார் விமான நிலையத்திற்கு வந்து சென்றுள்ளதால், ராம் சரண் அதில் பயணம் செய்து இருப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது. அதேபோல், காரினுள் ராம் சரண் 2வது இருக்கை வரிசையில் அமர்ந்து பயணித்திருக்கவே வாய்ப்புள்ளது. ஏனெனில், அங்குதான் அசத்தலான வசதிகளுடன் கேப்டன் இருக்கைகளை பெற முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 21, 2024, 8:00 [IST]
English summary
Actor ram charan spotted with his new lexus lm luxury car check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X