நடிகரின் சொகுசு வாழ்க்கை!! ரூ.4 கோடி மதிப்பிலான சொகுசு காரில் வந்து இறங்கியது இந்த பிரபல நடிகரா!!

நடிகர் ரன்பீர் கபூர் புதியதாக ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரை வாங்கியுள்ளார். இந்த நிலையில், தனது புதிய ரேஞ்ச் ரோவர் காரில் இருந்து ரன்பீர் கபூர் இறங்கி, வெளியே வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவையும், நடிகர் ரன்பீர் கபூரின் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரை பற்றியும் இனி விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் அவ்வப்போது புதியது புதியதாக லக்சரி கார்களை வாங்குவர் என்பது நமக்கு தெரிந்த விஷயமே. மார்க்கெட்டில் புதியதாக சொகுசு கார் எப்போது விற்பனைக்கு வரும் என காத்திருந்ததுபோல், விற்பனைக்கு அறிமுகமான உடனேயே காரை பாலிவுட் திரைத் துறையினர் டெலிவிரி எடுத்து விடுகின்றனர். நம் கோலிவுட், டோலிவுட்டில் கூட சொகுசு கார்களை அடிக்கடி வாங்குவோர் இருக்கின்றனர்.

ranbir kapoor buys range rover

ஆனால் பாலிவுட்டில் அத்தகையவர்கள் சற்று அதிகமாக உள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். மெர்சிடிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் தான் அதிகளவில் சினிமாக்காரர்களால் வாங்கப்படுகின்றன. அதேபோல், சினிமா நட்சத்திரங்கள் அனைவரிடத்திலும் குறைந்தது ஒரு ரேஞ்ச் ரோவர் கார் ஆவது உள்ளது. இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் புதியதாக ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரை வாங்கியுள்ளார்.

ரன்பீர் கபூரின் ரேஞ்ச் ரோவர் கார் பெல்கிராவியா பச்சை நிறத்தில் உள்ளது. அதேநேரம், காரை சுற்றிலும் சில்வர் நிற க்ரோம் கார்னிஷ்கள் உள்ளன. இந்த ரேஞ்ச் ரோவர் காரை மிக சமீபத்தில் தான் ரன்பீர் டெலிவிரி எடுத்துள்ளார். ஏனெனில், டெலிவிரி எடுத்த போது காருக்கு அணிவிக்கப்பட்ட மாலை இன்னமும் உள்ளதை கீழே பதிவிடப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் காணலாம். மும்பையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.38 கோடியாக உள்ளது. ஆனால் ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ் எல்லாவற்றையும் சேர்த்தால், ஆன்-ரோடு விலை இன்னும் ரூ.1 கோடி கூடுதலாக வரும். அதேபோல், ரேஞ்ச் ரோவரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டை வாங்கினால் ஆன்-ரோடு விலை ரூ.4 கோடியை தாண்டிவிடும். ஏனெனில் ரேஞ்ச் ரோவர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆனது ரூ.3.43 கோடி வரையில் உள்ளன.

இதைதான், மேலே பதிவிடப்பட்டுள்ள இன்ஸ்டா வீடியோவிலும், 'ரூ.4 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் காரில் ரன்பீர் கபூர்' என குறிப்பிட்டுள்ளனர். நடிகர் ரன்பீர் கபூர் வாங்கியிருப்பது 5ஆம் தலைமுறை ரேஞ்ச் ரோவர் கார் ஆகும். இதனை இந்தியாவில் லேண்ட் ரோவர் நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டின் ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த ரேஞ்ச் ரோவர் கார் லேண்ட் ரோவரின் எம்.எல்.ஏ-ஃப்ளெக்ஸ் பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

ranbir kapoor buys range rover

2022 ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரேஞ்ச் ரோவர் காரின் முக்கிய சிறப்பம்சம் அதன் தன்னிச்சையாக செயல்படக்கூடிய ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் மற்றும் ஆல்-வீல் ஸ்டேரிங் சக்கரம் ஆகும். இந்தியாவில், 4.4 லிட்டர் ட்வின்-டர்போ வி8 பெட்ரோல் என்ஜின், 3 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 3 லிட்டர் 6-சிலிண்டர் பெட்ரோல்-மைல்ட் ஹைப்ரீட் என்ஜின் என மொத்தம் 3 விதமான என்ஜின் தேர்வுகளில் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது.

இதில் எந்த என்ஜின் உடன் நடிகர் ரன்பீர் கபூர் தனது ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரின் உட்பக்கத்தில் டேஸ்போர்டில் 13.1-இன்ச்சில் வளைவான ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 13.7-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அத்துடன், பின் இருக்கை பயணிகளுக்காகவும் 11.4-இன்ச் பொழுதுப்போக்கு திரை கொடுக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: நடிகர் ரன்பீர் கபூர் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் இருந்து வாங்கியுள்ள 3வது கார் இதுவாகும். ஏற்கனவே, ரன்பீரிடம் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ், ஆடி ஏ8எல், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி-63 என பல்வேறு லக்சரி கார்கள் உள்ளன.

Article Published On: Thursday, August 17, 2023, 15:30 [IST]
English summary
Actor ranbir kapoor buys new range rover suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+