ரூ.5 கோடியில் புதுசா வாங்கிய காரில் குடும்பத்துடன் நடிகரின் பயணம்!! மனைவியான நடிகை செம்ம ஹாப்பி...

ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), பிரபல பாலிவுட் நடிகர் என்பது நம் எல்லாருக்குமே தெரியும். பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் என்றாலே அவ்வப்போது புதியது புதியதாக சொகுசு கார்களை வாங்குவர் என்பதும் நமக்கு தெரிந்த விஷயமே. குறிப்பாக, தங்களது பிறந்தநாளுக்கு நிச்சயமாக புதியதாக ஒரு காரை வாங்குவார்கள் என்பதை உறுதியாக சொல்லலாம். அந்த வகையில், நடிகர் ரன்பீர் கபூர் சமீபத்தில் சென்ற தனது 42வது பிறந்தநாளுக்காக புதியதாக விலையுயர்ந்த பெண்ட்லீ (Bentley) கார் ஒன்றை வாங்கினார். இந்த நிலையில், அந்த புதிய பெண்ட்லீ காரில் குடும்பத்துடன் ஜாலியாக ஒரு ரவுண்ட் சென்று வந்துள்ளார்.

மிகவும் விலையுயர்ந்த மற்றும் அரிதாகவே சாலையில் தென்படக்கூடிய கார்கள் என்று ரோல்ஸ்-ராய்ஸ் மற்றும் பெண்ட்லீ கார்களை சொல்வார்கள். ஏனெனில், அந்த அளவிற்கு விலைமிக்கதாக உள்ளதால், இந்த கார்களை மிகுந்த செல்வந்தர்கள் மட்டுமே வாங்குகின்றனர். இன்னும் சொல்லப்போனால், ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை கூட அரிதாக பார்த்துவிடலாம், ஆனால் பெண்ட்லீ காரை காண்பது இன்னும் அரிதானது.

ranbir kapoor family car ride

ஏனெனில், பெண்ட்லீயில் இருந்து இந்தியாவில் குறைவான கார்களே விற்பனை செய்யப்படுகின்றன. அத்தகைய கார்களுள் ஒன்றை தான் பிரபல இந்தி நடிகரும், நடிகை ஆலியா பட்டின் கணவருமான ரன்பீர் கபூர் தனது 42வது பிறந்த நாளை முன்னிட்டு வாங்கியுள்ளார். ரன்பீர் கபூரின் பிறந்த நாள் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சென்றது.

அப்போது, நடிகர் ரன்பீர் கபூர் தனது வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார். அதன் பின்னர், புதியதாக வாங்கிய பெண்ட்லீ காரில் மனைவி ஆலியா பட் மற்றும் மகள் ராஹா உடன் ஜாலியாக மும்பையின் பிசியான சாலைகளில் ஒரு சிறிய ரவுண்ட் சென்றுவந்தனர். இதுதொடர்பான வீடியோ கார்ஸ் ஃபார் யு என்கிற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

ranbir kapoor family car ride

வீடியோவில், காரை ரன்பீர் கபூர் ஓட்டுகிறார். அவருக்கு அருகில் நடிகை ஆலியா பட் மடியில் குழந்தை உடன் உள்ளார். அதாவது, குழந்தைக்கான பிரத்யேகமாக இருக்கை எதுவும் இல்லை. இந்த நட்சத்திர தம்பதி மட்டுமில்லாமல், இந்தியாவில் பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுக்கென பிரத்யேகமான குழந்தை இருக்கையை காரில் வாங்கி பொருத்துவதில்லை என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரன்பீர் கபூர் புதியதாக வாங்கியிருப்பது பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி (Continental GT) கார் ஆகும். பிறந்த நாளுக்காக வாங்கினார் என்றாலும், இந்த பெண்ட்லீ காரை சில மாதங்களுக்கு முன்னரே ரன்பீர் கபூர் டெலிவிரி பெற்றுவிட்டார். அதன்பின், சிலமுறை இந்த புதிய பெண்ட்லீ காரில் நடிகர் ரன்பீர் கபூர் தனது குடும்பத்துடன் காட்சி தந்துள்ளார்.

ranbir kapoor family car ride

ரன்பீர் கபூர் வைத்திருப்பது பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி காரின் வி8 வெர்சன் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.22 கோடியாக உள்ளது. 2 கதவுகளை மட்டுமே கொண்ட 4-இருக்கை ஸ்போர்ட்ஸ் கூபே காரான இது, கண்ணை கவரக்கூடிய வகையில் அடர் நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. காண்டினெண்டல் ஜிடி வி8 காரில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 542 பிஎச்பி மற்றும் 770 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் மூலமாக என்ஜினின் ஆற்றல் ஆனது காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்கிறது. இந்த புதிய பெண்ட்லீ கார் மட்டுமின்றி, ரன்பீர் கபூர்- ஆலியா பட் தம்பதியிடம் நியூ ஜென்ரேஷன் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார்களும் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புத்தம் புதிய பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி காரில் ரன்பீரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, குடும்பமாக ஏதேனும் உணவகத்திற்கு சென்றிருப்பர் என நினைக்கிறோம். சிறிய தூர பயணமாக இருப்பினும் குழந்தைக்கான இருக்கைகளில் அவர்களை அமர வைப்பது அவசியமாகும். சமீபத்தில் கூட, அம்மாவின் மடியில் அமர வைக்கப்பட்டு இருந்த 2 வயது குழந்தை விபத்தின்போது விரிவடைந்த ஏர்பேக்கினால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 2, 2024, 17:21 [IST]
English summary
Actor ranbir kapoor family ride in bentley continental gt luxury car check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X