பிரபல நடிகையின் முன்னாள் காதலர் தானே இவர்? பிறந்த நாளுக்கு 4 கோடி ரூபாயில் புதிய கார்!!

நடிகை சுஸ்மிதா சென் (Sushmita Sen) பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். 1994 பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டவரான நடிகை சுஷ்மிதா சென் 1990 மற்றும் 2000ஆம் காலக்கட்டங்களில் இந்தியில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இத்தகைய நடிகையை காதலித்தன் மூலம் பாலிவுட் சினிமாவில் பிரபலமாகியவர் நடிகர் ரந்தீப் ஹூடா (Randeep Hooda). அதன்பின் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதெல்லாம் வேற விஷயம். இந்த நிலையில், நடிகர் ரந்தீப் ஹூடா புதிய ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை தனது பிறந்தநாளை முன்னிட்டு வாங்கியுள்ளார்.

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் கார்கள் குறிப்பாக பாலிவுட் சினிமா ஸ்டார்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் அனைவரிடத்திலும் லேண்ட் ரோவர் கார்கள் உள்ளன என சொல்லும் அளவிற்கு இந்த நிறுவனத்தின் கார்கள் பெரும்பாலானோரிடத்தில் உள்ளது.

randeep hooda buys range rover

அந்த வரிசையில், பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா புதியதாக லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார். ரந்தீப்பின் 48வது பிறந்தநாள் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி சென்றது. பிறந்தநாளை முன்னிட்டு ரேஞ்ச் ரோவர் காரை ரந்தீப் ஹூடா வாங்கியுள்ளார். நடிகர் ரந்தீப் ஹூடா நடிப்பில் பல படங்கள் திரைக்கு வந்துள்ளன. ஆனால், 2010ஆம் ஆண்டில் வெளிவந்த 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மும்பை' திரைப்படம் ரந்தீப்பின் வாழ்வை புரட்டி போட்டது.

அதன்மூலம் பிவி, கேங்க்ஸ்டர், ஹைவே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் ரந்தீப் ஹூடா பாலிவுட்டில் கண்டுக்கொள்ளப்படாத திறமையான நடிகராகவே கருதப்படுகிறார். திரைப்படங்களில் நடிப்பதுடன் சமீபத்தில் திரைக்குவந்த வீர் சாவார்க்கரின் வாழ்க்கை திரைப்படத்தை இயக்கி அனைவரையும் ஆச்சிரியப்படுத்தி இருந்தார். இத்தகைய பன்முக திறன் கொண்ட நடிகரிடம் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்350 சிடிஐ மற்றும் வால்வோ வி90 போன்ற லக்சரி கார்கள் உள்ளன.

randeep hooda buys range rover

அந்த கார்களுடன் நடிகர் ரந்தீப் ஹூடாவின் கார் கேரேஜில் ரேஞ்ச் ரோவர் கார் ஒன்று புதியதாக இணைந்துள்ளது. இந்த காரை மும்பையில் செயல்படும் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டீலர்ஷிப் மையமான நவ்நீத் மோட்டார்ஸ் மூலமாக ரந்தீப் வாங்கியுள்ளார். இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் கார்கள் பல்வேறு விதமான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ரேஞ்ச் ரோவர் கார்களின் விலைகள் தற்சமயம் ரூ.2.50 கோடியில் இருந்து ரூ.4.80 கோடி வரையில் உள்ளன.

விலைக்கேற்ப பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் ரேஞ்ச் ரோவர் கார் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றுள், 4.4 லிட்டர் ட்வின் சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் ரேஞ்ச் ரோவர் காரை நடிகர் ரந்தீப் ஹூடா வாங்கியுள்ளார். அதிகப்பட்சமாக 523 பிஎச்பி மற்றும் 750 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

randeep hooda buys range rover

இவ்வாறான என்ஜின் & கியர்பாக்ஸ் உடன் ரேஞ்ச் ரோவர் காரின் விலை ஏறக்குறைய ரூ.4 கோடி வரும். அதாவது, 4 கோடி ரூபாயில் ரேஞ்ச் ரோவர் காரை நடிகர் ரந்தீப் ஹூடா வாங்கியுள்ளார். இந்த காரை கருப்பு நிறத்தில் இவர் வாங்கியுள்ளார். ரேஞ்ச் ரோவர் காரின் டேஸ்போர்டில் 13.1-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு 13.1-இன்ச்சில் பொழுதுப்போக்கு திரை வழங்கப்படுகிறது.

இவற்றுடன், 24 விதமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹீட்டட் & கூல்டு பின் இருக்கைகள்ன், சூப்பர் பிரிமியம் தரத்திலான மெரிடியன் 3டி சவுண்ட் சிஸ்டம், மல்டி-ஃபங்க்சன் ஸ்டேரிங் சக்கரம், பிரீமியம் தரத்திலான லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவற்றை இந்த கார் பெறுகிறது. ரேஞ்ச் ரோவர் கார்களில் எலக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஷன் பொருத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிறந்த நாள் போன்ற நல்ல நாட்களில் புது வாகனங்களை வாங்கும் பழக்கம் சினிமா நடிகர், நடிகைகள் மத்தியில் இருப்பது வாடிக்கையான ஒன்றே. இருப்பினும், ரூ.4 கோடியில் கார் என்பது கொஞ்சம் ஓவர் தான். ரூ.80 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு கொண்ட நடிகருக்கு ரூ.4 கோடியில் கார் எல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 21, 2024, 15:42 [IST]
English summary
Actor randeep hooda buys land rover range rover check price all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X