மஹிந்திரா காரை வாங்கிய பிரபல நடிகர்... சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

ஹூண்டாய் மீது இந்தியர்கள் அதிருப்தியடைந்துள்ள நிலையில், பிரபல நடிகர் ஒருவர் புதிய மஹிந்திரா காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா காரை வாங்கிய பிரபல நடிகர்... சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் சொகுசு கார்கள்தான் பாலிவுட் திரையுலகை சேர்ந்தவர்களின் முதன்மையான விருப்பமாக உள்ளது.

மஹிந்திரா காரை வாங்கிய பிரபல நடிகர்... சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இந்த சூழலில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவர் இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி700 காரை தற்போது வாங்கியுள்ளார். சமூக வலை தள பதிவு வாயிலாக அவர் இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த பதிவில் அவர் பயன்படுத்தியுள்ள 'ஹேஷ்டேக்' அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மஹிந்திரா காரை வாங்கிய பிரபல நடிகர்... சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

பாலிவுட் நடிகர் ரன்வீர் ஷோரேதான் (Ranvir Shorey) தற்போது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வாங்கியுள்ளார். ரன்வீர் ஷோரே வாங்கியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய காருடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் ரன்வீர் ஷோரே சமூக வலை தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மஹிந்திரா காரை வாங்கிய பிரபல நடிகர்... சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இந்த பதிவில், #buyindian எனவும் ரன்வீர் ஷோரே குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்பதை அவர் ஊக்குவிப்பதை போல் தெரிகிறது. குறிப்பாக ஹூண்டாய் நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலை தளங்களில் தற்போது குரல்கள் எழுந்து வரும் நிலையில், #buyindian என்ற இந்த ஹேஷ்டேக் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மஹிந்திரா காரை வாங்கிய பிரபல நடிகர்... சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் பாகிஸ்தான் பிரிவு சமீபத்தில் சமூக வலை தளங்களில் பகிர்ந்த பதிவு ஒன்று இந்தியாவில் அந்நிறுவனத்திற்கு எதிரான மன நிலையை உருவாக்கியுள்ளது. இந்த பதிவு, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்ததுதான் இதற்கு காரணம்.

மஹிந்திரா காரை வாங்கிய பிரபல நடிகர்... சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இந்தியாவில் தற்போது #boycotthyundai என்ற ஹேஷ்டேக் சமூக வலை தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஹூண்டாய் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் கார்களை வாங்குவதற்கு பதிலாக டாடா போன்ற இந்திய நிறுவனங்களின் கார்களை வாங்க வேண்டும் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மஹிந்திரா காரை வாங்கிய பிரபல நடிகர்... சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

இப்படிப்பட்ட ஒரு சூழலில் #buyindian என்ற இந்திய தயாரிப்புகளை வாங்குவதற்கான ஹேஷ்டேக்குடன் புத்தம் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வாங்கியிருப்பது தொடர்பாக பாலிவுட் நடிகர் ரன்வீர் ஷோரே பதிவிட்டுள்ள சமூக வலை தள பதிவு அவரது ரசிகர்களை மட்டுமல்லாது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மஹிந்திரா காரை வாங்கிய பிரபல நடிகர்... சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

புதிய காரை வாங்கியதற்காக, அதுவும் இந்திய தயாரிப்பை வாங்கியதற்காக, ரன்வீர் ஷோரேவுக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு இந்திய சந்தையில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

மஹிந்திரா காரை வாங்கிய பிரபல நடிகர்... சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

கவர்ச்சிகரமான டிசைன், சக்தி வாய்ந்த இன்ஜின் தேர்வுகள், மிக சவாலான விலை என காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். அத்துடன் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருப்பதும், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பிற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா காரை வாங்கிய பிரபல நடிகர்... சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

தற்போதைய நிலையில் 5 'மேட் இன் இந்தியா' கார்கள் மட்டுமே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரும் ஒன்று. (டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ், டாடா பன்ச் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகியவை எஞ்சிய 4 கார்கள்)

மஹிந்திரா காரை வாங்கிய பிரபல நடிகர்... சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!

நிறைய பேர் முன்பதிவு செய்துள்ளதால், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு காத்திருப்பு காலம் (Waiting Period) அதிகமாக உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்துள்ள பலரும், எப்போது டெலிவரி கிடைக்கும்? என்ற ஆசையுடன் காத்து கொண்டுள்ளனர். இந்த நிலையில்தான் ரன்வீர் ஷோரே புத்தம் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை டெலிவரி பெற்றுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 8, 2022, 17:26 [IST]
English summary
Actor ranvir shorey buys mahindra xuv700 check details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+