சாதாரண மக்களை போல் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கிய பிரபலம்... இவர் யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க!

திரைப்பட நடிகர் ஒருவர் யூஸ்டு காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாதாரண மக்களை போல் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கிய பிரபலம்... இவர் யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்தியாவை சேர்ந்த பல்வேறு நடிகர்கள் மற்றும் பிரபலங்களிடம் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. பெரும்பாலும் புத்தம் புதிய சொகுசு கார்களை வாங்குவதைதான் பிரபலங்கள் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் செகண்ட் ஹேண்ட் சொகுசு கார்களை வாங்கும் பிரபலங்களும் இருக்கவே செய்கின்றனர்.

சாதாரண மக்களை போல் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கிய பிரபலம்... இவர் யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் யூஸ்டு ஆடி க்யூ7 (Audi Q7) காரை வாங்கியுள்ளார். இது சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நடிகர் ராகேஷ் பாபட்தான் (Raqesh Bapat), செகண்ட் ஹேண்ட் ஆடி க்யூ7 காரை தற்போது சொந்தமாக்கியுள்ளார். இவர் பல்வேறு தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சாதாரண மக்களை போல் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கிய பிரபலம்... இவர் யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்தியாவில் நிறைய பிரபலங்களிடம் ஆடி க்யூ7 கார் உள்ளது. தற்போது ராகேஷ் பாபட் வாங்கியிருப்பது முந்தைய தலைமுறையை சேர்ந்த ஆடி க்யூ7 கார் ஆகும். இது உருவத்தில் மிகப்பெரிய கார் என்பதுடன், ஏராளமான சொகுசு வசதிகளுடனும் வருகிறது. பாலிவுட் நடிகர், நடிகைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் ஆகும்.

சாதாரண மக்களை போல் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கிய பிரபலம்... இவர் யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்தியாவில் தற்போது யூஸ்டு கார் சந்தை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. புதிய கார்களை காட்டிலும் யூஸ்டு கார்களின் விலை குறைவு. எனவேதான் யூஸ்டு கார்களை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு நடிகர்கள் போன்ற பிரபலங்களும் விதிவிலக்கு அல்ல. இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூட கடந்த காலங்களில் யூஸ்டு கார்களை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண மக்களை போல் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கிய பிரபலம்... இவர் யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க!

நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்கள் எல்லாம் யூஸ்டு கார்களை வாங்க மாட்டார்கள் என நீங்கள் இதுவரை நினைத்து கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. ஆனால் பெரும்பாலும் அவர்கள் வாங்கும் யூஸ்டு கார்கள், சொகுசு ரகத்தை சேர்ந்ததாக இருக்கும். நன்கு பராமரிக்கப்பட்ட சொகுசு கார்கள் தற்போது மிகவும் குறைவான விலையில் கிடைக்கின்றன.

சாதாரண மக்களை போல் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கிய பிரபலம்... இவர் யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க!

எனவேதான் நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் யூஸ்டு கார்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஒரு யூஸ்டு சொகுசு காரை, பாதி விலையில் வாங்கி விட முடியும். உதாரணத்திற்கு 1 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட சொகுசு காரை, யூஸ்டு கார் சந்தையில், வெறும் 50 லட்சத்திற்கே வாங்கி விடலாம். இதனால் சாதாரண மக்களும் யூஸ்டு சொகுசு கார்களை வாங்குவதற்கு தற்போது ஆர்வம் காட்டுகின்றனர்.

சாதாரண மக்களை போல் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கிய பிரபலம்... இவர் யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க!

நடிகர் ராகேஷ் பாபட் பழைய தலைமுறை ஆடி க்யூ7 காரை வாங்கியிருப்பதற்கு, விலை குறைவு என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் பழைய தலைமுறை ஆடி க்யூ7 காரை அவர் மிகவும் விரும்பியிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆடி நிறுவனம் க்யூ7 காரை விற்பனையில் இருந்து விலக்கியது.

சாதாரண மக்களை போல் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கிய பிரபலம்... இவர் யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளே இதற்கு காரணம். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் வெகு சமீபத்தில்தான் புதிய ஆடி க்யூ7 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு விதங்களில் மேம்படுத்தப்பட்டுள்ள 2022 ஆடி க்யூ7 காரை இந்திய பிரபலங்கள் பலரும் தற்போது ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.

சாதாரண மக்களை போல் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கிய பிரபலம்... இவர் யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஆடி க்யூ7 காரின் முந்தைய வெர்ஷன் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளுடனும் கிடைத்தது. ஆனால் தற்போதைய வெர்ஷனில் அது மாறி விட்டது. ஆம், 2022 ஆடி க்யூ7 கார் பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் மட்டுமே கிடைக்கிறது. 2022 ஆடி க்யூ7 காரில், 3.0 லிட்டர் வி6 டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

சாதாரண மக்களை போல் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கிய பிரபலம்... இவர் யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 335 பிஹெச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் Quattro AWD சிஸ்டம் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. மேலும் புதிய க்யூ7 காரில், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் ஆடி நிறுவனம் வழங்குகிறது.

சாதாரண மக்களை போல் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கிய பிரபலம்... இவர் யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க!

2022 ஆடி க்யூ7 காரின் ஆரம்ப விலை 79.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 88.33 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் நடிகர் ராகேஷ் பாபட் வாங்கியிருப்பது யூஸ்டு ஆடி க்யூ7 கார் என்பதால், அவர் என்ன விலைக்கு வாங்கினார்? என்பது உறுதியாக தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, February 19, 2022, 12:30 [IST]
English summary
Actor raqesh bapat s new ride is a used audi q7
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+