48 வயதுனு சொன்னால் யாராலும் நம்ப முடியாது! 2வது மனைவிக்காக ரோல்ஸ்-ராய்ஸ் காரை கொண்டுவந்து நிறுத்திய நடிகர்
ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார்கள் ஒரு சில பணக்காரர்களுக்கு கூட வாங்குவது கனவாக இருந்து வருகிறது. பெயருக்காக, சொத்துக்களை விற்று ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கிய பணக்காரர்கள் கூட இருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில், இங்கு ஒருவர் தனது மனைவியை மகிழ்விக்க சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அவரது பெயர், சாஹில் கான் (Sahil Khan) ஆகும். யார் இந்த சாஹில் கான் என்பதையும், அவர் புதியதாக வாங்கியுள்ள ரோல்ஸ்-ராய்ஸ் காரை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பழமையான பிரிட்டிஷ் கார் நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸின் கார்களுக்கு உலகம் முழுக்க இருக்கும் வரவேற்பை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவுக்கு உலகின் ஒவ்வொருத்தரும் வாங்க துடிக்கும் ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் மிகவும் சிலரது கைகளுக்கு மட்டுமே கிடைப்பது அதன் சிறப்பாக பார்க்க முடிகிறது.

ஒவ்வொரு ரோல்ஸ்-ராய்ஸ் காரும் மிகவும் நுணுக்கமாக பார்த்து, பார்த்து உருவாக்கப்படுவதால், அவற்றின் விலைகளை இமாலய உயரத்துக்கு நிர்ணயிக்க வேண்டி உள்ளது. ரோல்ஸ்-ராய்ஸ் கார் வாங்குவதை கௌரவ விஷயமாக பார்க்கும் செல்வந்தர்கள், வீட்டில் ஏற்கனவே ஏகப்பட்ட சொகுசு கார்கள் இருப்பினும், எப்படியாவது ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் காரை புதியதாக வாங்க முயற்சிக்கின்றனர்.
அந்த வகையில்தான், சாஹில் கான் என்பவர் தனது மனைவிக்காக ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஒன்றை எந்தவொரு காரணமும் ஒன்றி, அவரது மகிழ்ச்சிக்காக வாங்கிக் கொடுத்துள்ளார். சாஹில் கார் ஓர் நடிகர் ஆவார். ஆனால், அவரை நம்மில் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில், சாஹில் கான் இந்தி மொழியை தாண்டி வேறெந்த மொழி திரைப்படங்களிலும் நடித்தது இல்லை.

இந்தி மொழியில் கூட மொத்தமாகவே 6 திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதுவும், சாஹில் கானின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் 2010ஆம் ஆண்டில் திரைக்குவந்தது. அதாவது கடந்த 15 வருடங்களாக எந்தவொரு படத்திலும் சாஹில் கான் நடிக்கவில்லை; திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை என சொல்லலாம். சிலர், இவரை விளம்பர படங்களில் பார்த்திருப்பீர்கள்.
சாஹில் கானுக்கு வயது 48 என சொல்கிறார்கள். ஆனால், அவரை இப்போதும் பார்த்தால் 20- 25 வயது இளைஞர் போலவே தோற்றமளிக்கிறார். இவரது 2வது மனைவி மெலினா அலெக்சாண்ட்ரா வயதளவிலும் மிகவும் இளையவர் ஆவார். நடிகர் சாஹில் கானின் 2வது திருமணம் கடந்த 2024ஆம் ஆண்டில்தான் அவரது 47வது வயதில் நடந்தது.

இந்த நிலையில்தான், மனைவி மெலினா அலெக்சாண்ட்ராவை மகிழ்விப்பதற்காக ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஒன்றை சாஹில் கான் வாங்கிக் கொடுத்துள்ளார். இதற்காக நடிகர் சாஹில் கான் வாங்கியிருப்பது, ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் (Cullinan) கார் ஆகும். ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் எஸ்யூவி (SUV) ரக காரான இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.6.95 கோடியாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு விலைமிக்க காரை வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு வருவாய் ஆனது சாஹில் கானுக்கு அவரது ஊட்டச்சத்து தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக கிடைக்கிறது. ஆதலால், இவரை நடிகர் என சொல்வதை காட்டிலும் பிஸ்னஸ்மேன் என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாகவே பிஸ்னஸ்மேன்கள் அவ்வப்போது தங்களது குடும்பத்தில் புது, புது சொகுசு கார்களை வாங்கி போடுவர் என்பதால், தற்போது சாஹில் கான் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரை வாங்கியிருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.


Click it and Unblock the Notifications









