வருங்கால மனைவி உடன் பளபளக்கும் பிராண்ட்-நியூ காரில் வந்து இறங்கியது இந்த நடிகரா? ஸ்கோடா அதிகம் விற்கும் கார்
சாய் கேதன் ராவ் (Sai Ketan Rao), மஹாராஷ்டிராவில் பிறந்த இளம் இந்தி நடிகர். திரைப்படங்கள், டிவி சீரியல்கள், குறும்படங்கள், இசை வீடியோக்கள் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர். சிறு வயதில் இருந்தே வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து வந்துள்ள சாய் கேதன் ராவ், தனது வாழ்வின் அடுத்த கட்டமாக ஸ்கோடா (Skoda) கார் ஒன்றை வாங்கியுள்ளார். காதலி உடன் புத்தம் புதிய ஸ்கோடா காருடன் சாய் கேதன் ராவ் காட்சியளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் கார்களுக்கு சமீப காலமாக இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு காரணம், ஸ்கோடாவில் இருந்து மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் அறிமுகங்களான குஷாக் மற்றும் கைலாக் போன்ற மாடர்ன் எஸ்யூவி கார்கள் ஆகும். இருப்பினும், தற்போதைக்கு ஸ்கோடாவில் இருந்து அதிகம் விற்பனையாகும் கார் ஸ்லாவியா (Slavia) ஆகும்.

ஸ்லாவியா ஆனது ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தாழ்வான செடான் (Sedan) ரக கார் ஆகும். இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே எஸ்யூவி கார்களுக்கு தான் அதிக டிமாண்ட் உள்ள நிலையிலும், ஸ்கோடா ஸ்லாவியா செடான் கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இத்தகைய காரை தான் இந்தி நடிகர் சாய் கேதன் ராவ் வாங்கியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் லோனாவாலாவில் பிறந்தவரான 30 வயதான சாய் கேதன் ராவ் 2016இல் தெலுங்கில் ஒரு குறும்படத்தில் நடித்தார். அதன் மூலம் ஓரளவிற்கு கவனத்தை ஈர்த்தவருக்கு 2017இல் தெலுங்கில் 'நானே ராஜூ நானே மந்திரி' என்கிற நடிகர் ரானாவின் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போதுவரையில் மொத்தம் 7 திரைப்படங்களில் சாய் கேதன் ராவ் நடித்துள்ளார்.

அவையாவும் தெலுங்கில் உருவானவை ஆகும். 8வது திரைப்படமாக முதல்முறையாக இந்தி மொழியில் 'பாகி 4' திரைப்படத்தில் நடித்துள்ளார். அது விரைவில் திரைக்குவர உள்ளது. இதற்கிடையில் தெலுங்கு மற்றும் இந்தி சீரியல்களிலும் நடித்து கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக, 2021இல் ஒளிப்பரப்பட்ட 'மெஹ்ந்தி ஹாய் ரச்னே வாலி' என்கிற இந்தி சீரியல் நடிகர் சாய் கேதன் ராவ்வை மேலும் பிரபலமாக்கியது.
இதன் மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சாய் கேதன் ராவ் புதியதாக வாங்கிய ஸ்கோடா ஸ்லாவியா காரில் காட்சி தந்துள்ளார். காதலி என கூறப்படும் சிவாங்கி என்பவர் உடன் சிவப்பு நிறத்திலான பிராண்ட்-நியூ ஸ்லாவியா காரில் சாய் கேதன் ராவ் வந்திறங்கும் வீடியோ ஒன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் விற்பனை செய்யப்படும் ஸ்லாவியா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.69 லட்சத்தில் இருந்து ரூ.18.69 லட்சம் வரையில் உள்ளன. இந்த காரை 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அல்லது 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கலாம். அதேபோல், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2025 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா கார், ஸ்லாவியா ஆகும். அவ்வாறு ஸ்லாவியா காரை வாங்கிய கஸ்டமர்களுள் நடிகர் சாய் கேதன் ராவ் ஒருவர் ஆவார். அவரது தோற்றத்தை போலவே, ஸ்லாவியா காரும் ஸ்டைலிஷான கார் ஆகும்.


Click it and Unblock the Notifications









