ஒரே குடும்பத்தில் அப்பா, மகளுக்கு வேற வேற இரசனை... கோடிகளில் மிதக்கும் சினிமா நட்சத்திர குடும்பம்!!

சயிப் அலிகான் (Saif Ali Khan), இந்திய சினிமா துறையில் பிரபலமான நடிகர்களுள் ஒருவர். பிரபல நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துக் கொண்ட பிறகு இந்தியா முழுவதும் சயிப் அலிகானின் பெயர் பரவியது. இந்த நட்சத்திர தம்பதிக்கு சாரா அலிகான் என்கிற மகளும், இப்ராஹிம் அலிகான் என ஒரு மகனும் உள்ளனர். இதில் சாரா அலிகான் நடிகையாகவும், இப்ராஹிம் அலிகான் நடிகர் மற்றும் உதவி இயக்குனராகவும் பாலிவுட்டில் பணியாற்றி வருகின்றனர். இந்த நட்சத்திர குடும்பத்தில் பல்வேறு லக்சரி கார்கள் உள்ளன. அவற்றுள் விலையுயர்ந்த சிலவற்றை மட்டும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5): நடிகர் சயிப் அலிகானின் மகன் இப்ராஹிம் அலிகான் வாங்கிய முதல் எஸ்யூவி கார் இதுவாகும். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் இந்த பிஎம்டபிள்யூ கார் கிடைக்கிறது. இதில் எந்த என்ஜின் உடன் எக்ஸ்5 காரை இப்ராஹிம் அலிகான் வைத்துள்ளார் என்பது தெரியவில்லை. இது ஒரு ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தை கொண்ட பிஎம்டபிள்யூ கார் ஆகும்.

saif ali khan car collections

பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ் (BMW iX): பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லக்சரி எலக்ட்ரிக் எஸ்யூவி காரான இதில் இப்ராஹிம் அலிகான் அவரது பெண் தோழியான பலாக் திவாரி உடன் காட்சி தந்துள்ளார். இந்த எலக்ட்ரிக் பிஎம்டபிள்யூ காரை சினிமா பிரபலங்கள் பலர் வைத்துள்ளனர். தற்சமயம் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் காரில் 111.5kWh பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 575கிமீ-இல் இருந்து 635கிமீ தொலைவிற்கு காரை இயக்கி செல்லலாம்.

ரேஞ்ச் ரோவர் (Range Rover): சயிப் அலிகான் - கரீனா கபூர் தம்பதியிடம் 2009இல் உருவாக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் கார் ஒன்று உள்ளது. இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.36 கோடியில் இருந்து ரூ.2.60 கோடி வரையில் உள்ளன. ரேஞ்ச் ரோவரில் 3 லிட்டர் மைல்ட்-ஹைப்ரீட் டீசல் என்ஜின் மற்றும் 3 லிட்டர் மைல்ட்-ஹைப்ரீட் டர்போ-பெட்ரோல் என்ஜின் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

saif ali khan car collections

ஜீப் வ்ராங்க்லர் அன்லிமிடெட் (Jeep Wrangler Unlimited): ஜீப் வ்ராங்க்லரின் பெட்ரோல் வேரியண்ட் வ்ராங்க்லர் அன்லிமிடெட் ஆகும். இந்தியாவில் இந்த வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.67.65 லட்சமாக உள்ளது. பெட்ரோல் என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே வ்ராங்க்லர் அன்லிமிடெட் விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் 5 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த ஜீப் வாகனம் கிடைக்கிறது.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender): ரேஞ்ச் ரோவர் மட்டுமின்றி, லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபெண்டர் காரும் சயிப் அலிகானின் குடும்பத்தில் உள்ளது. இந்தியாவில் 90, 110 மற்றும் 130 என மொத்தம் 3 விதமான வெர்சன்களில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த வெர்சனில் டிஃபெண்டரை சயிப் அலிகானின் குடும்பம் வைத்துள்ளது என்பது தெரியவில்லை.

saif ali khan car collections

ஃபோர்டு மஸ்டங் ஷெல்பி ஜிடி (Ford Mustang Shelby GT): உலகளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார்களுள் ஒன்று ஃபோர்டு மஸ்டங் ஆகும். அத்தகைய காரின் ஷெல்பி ஜிடி வெர்சனை இந்த பாலிவுட் ஸ்டார் குடும்பம் வைத்துள்ளது. இந்தியாவில் மஸ்டங் காரை சாலையில் காண்பதே அரிது. அப்படியிருக்கையில், மஸ்டங் ஷெல்பி ஜிடி காரை காண்பது இன்னும் கஷ்டம் ஆகும். இந்த அரிதான காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.80 கோடியாக உள்ளது.

saif ali khan car collections

மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்350 (Mercedes-Benz S350): மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் லக்சரி காரின் டீசல் வேரியண்ட்டாக எஸ்350 விளங்குகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.77 கோடியாக உள்ளது. இந்த காரில் 2.9 லிட்டர், இன்லைன் 6-சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் உடன் டார்க்-கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மொத்தம் 5 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் எஸ்-கிளாஸ் எஸ்350 வேரியண்ட் கிடைக்கிறது.

saif ali khan car collections

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஒரு நட்சத்திர குடும்பத்தில் இத்தனை லக்சரி கார்கள் கூட இல்லையென்றால் தான் ஆச்சிரியம். அதிலிலும், பாலிவுட் நடிகர், நடிகையினர் மாதத்திற்கு ஒரு சொகுசு காரை வாங்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இருப்பினும், சயிப் அலிகானின் மகளும் பாலிவுட்டின் வளர்ந்துவரும் நடிகையுமான சாரா அலிகான் பெரும்பாலும் வெள்ளை நிறத்திலான மாருதி சுஸுகி ஆல்டோ காரையே பயன்படுத்தி வருவது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 25, 2024, 22:22 [IST]
English summary
Actor saif ali khan and kareena kapoor luxury car collections
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X