சல்மான்கானையே மச்சான் என கூப்பிடும் உரிமை இவருக்குதான் இருக்கு! வாங்கும் கார் எல்லாம் விசித்திரமா இருக்கே!!

சல்மான் கான் (Salman Khan), இவருக்கு இந்தியாவில் அறிமுகமே தேவையிருக்காது. அந்த அளவிற்கு பிரபலமான ஹிந்தி நடிகரான இவருக்கு நம் தமிழ்நாட்டிலும் கணிசமான எண்ணிக்கையிலான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் சல்மான்கான் தொடர்ந்து புல்லட்-ப்ரூஃப் கார்களாக வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், தற்போது புதியதாக விலையுயர்ந்த காரை வாங்கியிருப்பவர், சல்மான் கான் கிடையாது. அவரது மச்சான் நடிகர் ஆயுஷ் சர்மா ஆவார். பாலிவுட் சினிமா வட்டாரத்தில் யாரிடமும் இல்லாத புதுமையான காரை ஆயுஷ் சர்மா வாங்கியுள்ளார். அப்படி என்ன மாதிரியான காரை இவர் வாங்கியுள்ளார் என்பதை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு 2 தம்பிகள், 2 தங்கைகள் உள்ளனர். இதில் தம்பிகள் அர்பாஸ் கான் மற்றும் சோஹைல் கான் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உள்ளனர். 2 தங்கைகளுள் அல்விரா கான் அக்னிஹோத்ரி மட்டுமே சல்மான் கானுடன் பிறந்தவர் ஆவார். மற்றொரு தங்கையான அர்பிதா கானை சல்மான் கானின் தந்தை சலீம் கான் தத்தெடுத்து வளர்க்கிறார்.

aayush sharma buys maserati grecale

அர்பிதா கானுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் தான், ஆயுஷ் சர்மா ஆவார். அர்பிதா கானை விட ஒரு வயது சிறியவரான ஆயுஷ் சர்மாவும் பாலிவுட்டில் பிரபலமான நடிகராக விளங்குகிறார். நடிகர் சல்மான் கானுடன் 2, 3 படங்களில் நடித்துள்ளார். இதன் மூலமாக இந்தி திரைப்பட ரசிகர்கள் இடையே பிரபலமானவராக விளங்கும் ஆயுஷ் ஷர்மாவின் நடிப்பில் கடைசியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ருஸ்லான் என்கிற திரைப்படம் திரைக்கு வந்தது.

25 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட ருஸ்லான் திரைப்படம், செலவு செய்யப்பட்டதில் வெறும் 10% வசூலை மட்டுமே ஈட்டி மிக பெரும் தோல்வியை தழுவியது. இருப்பினும், நடிகர் ஆயுஷ் சர்மா ஜாலியாக தான் உள்ளார். ரூ.1.5 கோடி மதிப்பிலான புத்தம் புதிய மஸராட்டி கார் ஒன்றை ஆயுஷ் சர்மா தற்போது வாங்கியுள்ளார். முற்றிலும் கருப்பு நிறத்திலான புதிய மஸராட்டி காரை டெலிவிரி பெறும் படங்களை ஆயுஷ் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

aayush sharma buys maserati grecale

நடிகர் ஆயுஷ் சர்மாவின் வீட்டிற்கே வந்து கார் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. இவர் வாங்கியிருப்பது மஸராட்டி கிரேகேல் (Maserati Grecale) கார் ஆகும். பாலிவுட் சினிமா வட்டாரத்தில் யாரிடமும் இல்லாத மஸராட்டி காராக கிரேகேல் விளங்குகிறது. இதனால், இந்த மஸராட்டி காரை வாங்கிய முதல் பாலிவுட் நடிகர் ஆயுஷ் சர்மா ஆவார். வேறு எந்த இந்திய மொழி நடிகர், நடிகைகளிடம் கூட மஸராட்டி கிரேகேல் கார் இருப்பதுபோல் தெரியவில்லை.

நடிகர் ஆயுஷ் சர்மா தனது விலையுயர்ந்த கார்களை முற்றிலும் கருப்பு நிறத்தில் வாங்குவதை விரும்புகிறார். இதற்கு முன்னர் மெர்சிடிஸ்-மேபக் இ.க்யூ.எஸ் என்கிற லக்சரி எஸ்யூவி காரை கருப்பு நிறத்தில் வாங்கியிருந்தார். அந்த மேபக் காரையும் தற்போது ஆயுஷ் சர்மா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் படங்களில் காணலாம். இதில் ஒரு படத்தில் காரின் உட்பக்கத்தை ஆயுஷ் சர்மா காட்டுகிறார்.

aayush sharma buys maserati grecale

இந்த மஸராட்டி காரின் வெளிப்பக்கம் மட்டுமின்றி, உட்பக்கமும் முழுவதுமாக கருப்பு நிறத்தில் உள்ளதை அதில் பார்க்க முடிகிறது. இத்தாலியன் லக்சரி கார் நிறுவனமான மஸராட்டி இந்தியாவில் அதன் புத்தம் புதிய கிரேகேல் காரை கடந்த ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்தது. அதற்குள் நடிகர் ஆயுஷ் சர்மாவுக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது என்றால், கார் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்திலேயே இவர் புக் செய்திருப்பார்.

ஜிடி, மோடேனா மற்றும் டிரோஃபியோ என 3 விதமான வேரியண்ட்களில் மஸராட்டி கிரேகேல் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.31 கோடியில் இருந்து ரூ.2.05 கோடி வரையில் உள்ளன. இதில் எந்த வேரியண்ட்டை ஆயுஷ் சர்மா வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு வேரியண்ட்டிலும் ஒவ்வொரு விதமான என்ஜின் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் முழுவதையும் கருப்பு நிறத்தில் வாங்குவதையும் ஒரு சில விஐபி-கள் மிகவும் விரும்புகின்றனர். அவர்களுள் நடிகர் ஆயுஷ் சர்மாவும் ஒருவராக இருக்கிறார். இத்தகைய பளபளப்பான கருப்பு நிறத்திலான கார்கள் பார்க்க மிகவும் அழகாக இருந்தாலும், அவற்றை பராமரிப்பது கடினம். அதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டவர்கள் தாராளமாக இவ்வாறான கார்களை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, December 6, 2024, 11:53 [IST]
English summary
Actor salman khans brother in law aayush sharma buys maserati grecale check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X