தீவிரவாத செயலுக்கு ஜெயலுக்கு போயிட்டு வந்து, தமிழ் சினிமாவை கலக்கிய நடிகரா இவர்? காஸ்ட்லி கார்ல போறாரு!
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் காஸ்ட்லியான கார் ஒன்றில் ஏறிச்சென்ற வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து தங்கள் கருத்தக்களை கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த காரில் என்ன இருக்கிறது? இவர் பயன்படுத்தும் இந்த காரை பல பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு என்ன காரணம்? இந்த காரில் உள்ள அம்சங்கள் என்ன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பாலிவுட்டில் பிரபலமாகி இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகர் சஞ்சய் தத். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கேஜிஎஃப் 2ம் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர். அப்பொழது இந்தியா முழுவதும் பிரபலமானார். கடந்தாண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் இவர் தமிழகத்திலும் பிரபலமான நடிகராக இருக்கிறார்.

இவர் இதற்கு முன்னர் இந்தியா முழுவதும் பிரபலமானதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் இவருக்க தொடர்பு இருப்பதாக கைது செய்ய்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட ஆண்டுகள் இவரது வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. பின்னர் இவர் தடா தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தடா தடுப்பு சட்டம் போடப்படும். இவர் மீது அந்த சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில் 2016ம் ஆண்டு இவர் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கஸ்ட்லியான கார் ஒன்றில் ஏறிச்சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பலரை ரசிக்க வைத்துள்ளது. இதனால் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அதில் இவர் ஏறிச்செல்லும் கார் குறித்து பலர் பேசி வருகின்றனர்.

இந்தவீடியோவின்படி நடிகர் சஞ்சய் தத் ஏறி சென்ற கார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் ஆட்டோ பயோகிராஃபி ரக கார் ஆகும். இந்த காரை பல பிரபலங்கள் பயன்படுத்து போல் நடிகர் சஞ்சய் தத்தும் பயன்படுத்தி வருகிறார். இந்த காரில் பிரபலங்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு வசதிகள் இருக்கிறது. பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த காரில் உள்ள அம்சங்களை பற்றி பார்ப்போம்.
லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி காரை பொருத்தவரை இந்தியாவில் அதிக விலையில் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கார் இந்திய மார்கெட்டில் ரூ2.83 கோடி முதல் ரூ5.73 கோடி வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 2 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் நடிகர் சஞ்சய் தத் பயன்படுத்துவது 3.0 லிட்டர் மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார் ஆகும். இது லாங் வீல் பேஸ் கெயாண்ட காராக இருக்கிறது. இந்த காரின் இன்ஜின் 394 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் சஞ்சய் தத் பயன்படுத்தும் இந்த கார் மக்கள் மத்தியில் பிரபலமான கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காரை பிரபலங்கள் பலர் விரும்பி வாங்கி வருகின்றனர். நடிகர் சஞ்சய் தத் போன்ற பெரிய அரசியல் தலைவர்கள் இந்த காரை பயன்படுத்துவது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் கிடையாது.


Click it and Unblock the Notifications









