ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குவதற்கு நடிகர் சந்தானம் தீவிரம்

By Saravana

ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்குவதற்கு சிரிப்பு நடிகர் சந்தானாம் தீவிரமாக முயன்று வருகிறாராம். கோலிவுட்டில் இன்று மிக பிஸியான சிரிப்பு நடிகர் சந்தானாம். வடிவேலு விட்ட கேப்பில் சிந்து பாடி வரும் சந்தானாம், மணிக்கு இத்தனை லட்சம் என்ற ரேஞ்சில் சம்பளம் வாங்குகிறார்.

கிடுகிடுவென உச்சத்தை தொட்ட சந்தானத்திற்கு இப்போது ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குவதே கனவாக நெருக்கமானவர்களிடம் குறிப்பிடுகின்றாராம். அதற்காக, அவர் ஒற்றைக் காலில் நின்று வருகிறாராம்.

முன்பதிவு

முன்பதிவு

ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்க சந்தானம் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தாராம். ஆனால், இவரது முன்பதிவு நிராகரிக்கப்பட்டுவிட்டுதாக கூறப்படுகிறது.

மறுப்பு ஏன்?

மறுப்பு ஏன்?

வாடிக்கையாளர்களின் பின்னணி குறித்து ஓர் சர்வே எடுத்த பின்பே காரை விற்பது குறித்து ரோல்ஸ்ராய்ஸ் முடிவு செய்யும். பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு கார் கிடையாது என்று ரோல்ஸ்ராய்ஸ் மறுத்தது குறித்தும் தெரிவித்திருந்தோம். இதே பாணியில்தான் சந்தானத்தின் முன்பதிவும் நிராகரிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணும்

பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணும்

ஆனாலும், ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கியே தீருவேன் என்று சந்தானம் ஒற்றைக் காலில் நிற்கிறாராம். ரோல்ஸ்ராய்ஸ் காரை முன்பதிவு செய்வதற்கு தற்போது தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளாராம்.

ரோல்ஸ்ராய்ஸ் குடும்பம்

ரோல்ஸ்ராய்ஸ் குடும்பம்

இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரைத் தொடர்ந்து ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் இணைவதற்கு சந்தானம் துடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கனவு நனவாகுமா?

கனவு நனவாகுமா?

இரண்டாவது முறையாக ரோல்ஸ்ராய்ஸ் காரை முன்பதிவு செய்யும் முயற்சி தோல்வியடையக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளில் சந்தானம் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் கிடைக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும் என்று கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவோக்

எவோக்

இதற்கு முன்னர் ரூ.80 லட்சம் மதிப்புடைய லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவியை நடிகர் சந்தானம் வாங்கியது நினைவிருக்கலாம்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

நடிகர் சந்தானத்தின் ரோல்ஸ்ராய்ஸ் கார் கனவு நனவாக எமது வாழ்த்துக்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 26, 2013, 12:34 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+