பனியன், ஜட்டி விளம்பரத்தில் நடித்து ரூ4 கோடிக்கு கார் வாங்கினாரா காமெடி நடிகர் சதீஷ்? வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் காமெடியன்களில் ஒருவராக இருப்பவர் சதீஷ், இவர் சமீபத்தில் சுடர்மணி நிறுவனத்தின் விளம்பரங்களில் அதிகம் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சுடர்மணி நிறுவனத்தின் உரிமையாளர் தனக்கு கார் பரிசு வழங்கியதாக வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அவரது காரை வைத்து இவர் இந்த வீடியோவில் காமெடி செய்துள்ளார். இதை பலரும் ரசித்து பகிர்ந்து வருகின்றனர். இந்த கார் குறித்து பலர் தேடி வரும் நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து தமிழ்சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் சதீஷ், சமீபத்தில் இவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சுடர்மணி நிறுவனத்தின் விளம்பரங்களில் தற்போது இவர் தான் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சுடர்மணி நிறுவனத்தின் உரிமையாளர் லிங்கா சாமியுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலை்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Actor Sathish Lamborghini Urus

இந்த வீடியோவில் நடிகர் சதீஷ் ஒரு வெள்ளை நிற லாம்போர்கினி உரூஸ் கார் முன்னே நின்று சுடர்மணி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிட்டராக தான் இருப்பதாகவும் அதன் உரிமையாளர் தனக்கு லாம்போர்கினி உருஸ் காரை வாங்கி பரிசளித்துள்ளதாகவும் பேசுகிறார். அப்பொழுது அங்கு சுடர் மணி நிறுவனத்தின் உரிமையாளர் லிங்கா சாமி வருகிறார்.

அப்பொழுது அவர் தான் சதீஷ் இடம் கார் சாவியை வைத்திருக்கும்படி தான் சொன்னதாக கூறி கார் சாவியை வாங்கி காரில் ஏறி செல்கிறார். இந்த வீடியோ காமெடியாக எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கிறது. முதலில் சிரீயஸாக இதை பார்த்தாலும் பின்னர் இது காமெடி வீடியோ என நமக்கு தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோவில் இருக்கும் லாம்போர்கினி உரூஸ் கார் இந்தியாவில் விற்பனையாகும் காஸ்ட்லியான கார்களில் ஒன்றாக இருக்கிறது.

Actor Sathish Lamborghini Urus

இந்த கார் இரண்டு விதமான இன்ஜின் வேரியன்களில் விற்பனையாகிறது. இந்த கார் எஸ் மற்றும் ட்வின் டர்போ ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலையை பொருத்தவரை முறையே ரூ4.77 கோடி மற்றும் ரூ4.86 கோடி என்ற விலையில் விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது இந்த காரின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது புதிதாக இந்த காரை வாங்க முடியாது செகண்ட் ஹேண்ட் மார்கெட்டி்ல மட்டும் தான் வாங்க முடியும்.

4.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் டிசிடி கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்ப்டடுள்ளது. இந்த இன்ஜின் 657 பிஎச்பி பவரையும் 850 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஆல் வீல் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.3 நொடியில் பிக்கப் செய்துவிடும். அதிகப்டசமாக 306 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Actor Sathish Lamborghini Urus

இந்த கார் லிட்டருக்கு 7.8 கி.மீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டள்ளது. இது சான்றளிக்கப்பட்ட மைலேஜ் திறன் ஆகும். இந்த கார் அவர் பவர்ஃபுல்லான திறன், சிறப்பான வெயிட் மேனேஜ்மென்ட், லோவான அமரும் இடம் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இந்த காரில் ரேலி மோட், ட்வீக் செய்யப்பட்ட பிரேக்குகள், க்ரிஸ்பான ஸ்டிரயரிங் வீல் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. இதனால் பலர் இதை விரும்பி வாங்கி வந்தனர். பலர் விரும்பும் காராக இந்த கார் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் சதீஷ் இந்த கார் முன்பு நின்று எடுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவரது காமெடியை பலர் ரசித்து வரும் நிலையில் இந்த கார் குறித்தும் பலர் தேடி வருகிறார்கள். அவர்களுக்கு இது நிச்சயம் மிக முக்கியமான தகவலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் நடிகர் சதீஷ் வீடியோவில் சொன்னது போல கனவு காராக இருக்கிறது. ஆனால் இந்த காரின் தயாரிப்பு தற்போது நிறுத்தப்பட்டு விட்டது!

More from DriveSpark

Article Published On: Wednesday, April 16, 2025, 13:45 [IST]
English summary
Actor sathish make fun with lamborghini urus know about the car
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X