புது, புது மெர்சிடிஸ் கார்களை வாங்கி குவிப்பது பிரபல நடிகர் இவரா? கோடிகளில் இருக்கு ஒவ்வொன்றின் விலையும்!!
சினிமா நடிகர், நடிகைகள் புது, புது லக்சரி கார்களை அவ்வப்போது வாங்குவதை தொடர்ந்து பார்த்து வருகின்றோம். குறிப்பாக, பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் மாதத்திற்கு ஒரு விலையுயர்ந்த காரை வாங்கி குவிக்கின்றனர். இந்த வகையில், தற்போது ஒரு பிரபல இந்தி நடிகர் விலைமிக்க மெர்சிடிஸ் காரை சொந்தமாக்கி உள்ளார். யார் அந்த பிரபல இந்தி நடிகர்? எந்த மாதிரியான மெர்சிடிஸ் காரை அவர் வாங்கி உள்ளார்? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பாலிவுட்டில் வேகமாக வளர்ந்துவரும் பிரபல நடிகர் ஷாகித் கபூர் (Shahid Kapoor). தற்சமயம் வட இந்தியாவில் அதிக இளம் ரசிகர்களை கொண்ட நடிகர்கள் என்று பார்த்தால், அதில் ஷாகித் கபூரும் ஒருவராக இருப்பார். வட இந்தியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய அளவிலும் பலருக்கு பரீட்சையமான நடிகரான இவருக்கு இளம் ரசிகைகளும் ஏராளம்.

பாலிவுட் நட்சத்திர பங்கஜ் கபூர் மற்றும் நீலிமா அசீம் தம்பதியின் மகனான ஷாகித் கபூர் 3 ஃப்லிம்ஃபேர் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இந்த நிலையில், ஷாகித் கபூர் தனது புத்தம் புதிய மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 காரில் காட்சி தந்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், வெள்ளை நிறத்திலான மேபக் எஸ்580 காரில் ஷாகித் கபூர் வந்திறங்குவதை காணலாம்.
இந்த புதிய மெர்சிடிஸ்-மேபக் காருக்கு 0700 என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட்டை நடிகர் ஷாகித் கபூர் வாங்கி பொருத்தியுள்ளார். ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மெர்சிடிஸ் கார்களிலேயே மேபக் கார்கள் சொகுசு வசதிகள் உடன் விலையுயர்ந்தவை ஆகும். ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை போன்று, மேபக் கார்களையும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அலங்கரிப்புகளை மெர்சிடிஸ் நிறுவனம் செய்து கொடுக்கிறது.

இதனால், மேபக் கார்களின் உட்பக்கத்தில் அல்ட்ரா-மாடர்ன் தரத்தில் கேபின் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் நடிகர் ஷாகித் கபூரின் மேபக் எஸ்580 காரிலும் பிளஷ் அப்ஹோல்ஸ்டரி, எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கைகள், கட்டிங்-எட்ஜ் கனெக்ட்டிவிட்டி செயல்பாடுகள், பயணிகளின் பொழுதுப்போக்கிற்கு திரைகள், ஹை-எண்ட் பர்ம்ஸ்டர் 4டி சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இவற்றுடன், மென்மையாக மூடக்கூடிய கதவுகள், மல்டி-ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், லேட்டஸ்ட் மெர்சிடிஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் போன்றவையும் இந்த காரில் வழங்கப்படுகின்றன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 காரில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 503 எச்பி மற்றும் 700 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

மெர்சிடிஸின் 4மேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக என்ஜினின் இயக்க ஆற்றல்கள் அனைத்தும் காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்கிறது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த மேபக் காரின் டாப்-ஸ்பீடு 250kmph ஆகும். நடிகர் ஷாகித் கபூர் வாங்கியுள்ள மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 காரின் மும்பை ஆன்-ரோடு விலை ஆனது ஏறக்குறைய ரூ.3.2 கோடி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரிடம் இதுமட்டுமின்றி மெர்சிடிஸ் மேபக் ஜி.எல்.எஸ்600 காரும் உள்ளது. இதில் இருந்து நடிகர் ஷாகித் கபூருக்கு மேபக் கார்கள் என்றாலே தனி பிரியம் என்பது தெரிய வருகிறது. சொகுசு வசதிகள் மிகுந்த மேபக் கார்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications









