ஹைவேயில் விலையுயர்ந்த பைக்கில் பறந்தவர் அந்த பிரபல நடிகரா!! நீங்க பார்க்குறது எல்லாமே ஃபேக்!

நடிகர் ஷாரூக்கான் (Shahrukh Khan) சுஸுகி ஹயபுஸா (Suzuki Hayabusa) மோட்டார்சைக்கிளை அதிவேகத்தில் ஓட்டுகிறாரா? என கேட்க தோன்றும் அளவிற்கு, வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பற்றியும், ஹயபுஸா பைக்கை பற்றியும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரபலமான பைக் மற்றும் காரை காப்பியடித்து உருவாக்கப்பட்ட பைக், கார்களை பற்றி பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். குறிப்பாக, சீனாவில் உருவாக்கப்பட்ட போலி பைக் & கார்கள் இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளன. ஆனால், நாம் இந்த செய்தியில் பார்க்க போவது அதற்கு ஒருபடி மேலான விஷயம் ஆகும்.

shahrukhkhan copycat riding fake hayabusa

அதாவது, இந்த செய்தியில் நாம் பார்க்க போவது உண்மையான சுஸுகி ஹயபுஸா பைக் கிடையாது. அதேபோல், அதனை ஓட்டுபவரும் நடிகர் ஷாரூக்கான் கிடையாது, பாலிவுட்டின் கிங் கான் என அழைக்கப்படும் நடிகர் ஷாரூக்கானை போன்று இருக்கும் வேறொரு நபர் ஆவார். இப்ராஹிம் காத்ரி என பெயர் கொண்ட இந்த நபரை பற்றி உங்களில் சிலர் ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

அச்சு அசல் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டிருப்பதால், நடிகர் ஷாரூக்கானின் பட பாடல்களையும், காட்சிகளையும் ரீ கிரியேட் செய்து இப்ராஹிம் காத்ரி அவ்வப்போது இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறார். அந்த வரிசையில், இப்ராஹிம் காத்ரியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிடப்பட்டு உள்ள வீடியோவில், அவர் சுஸுகி ஹயபுஸா பைக்கை ஓட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

shahrukhkhan copycat riding fake hayabusa

அதாவது, நடிகர் ஷாரூக்கான் விலையுயர்ந்த சுஸுகி ஹயபுஸா பைக்கை ஓட்டுவது போல் காட்டும் விதமாக இந்த வீடியோவை இப்ராஹிம் காத்ரி காட்சிப்படுத்தி பதிவிட்டுள்ளார். இதற்கு ஏற்றவாறு, பைக்கை ஓட்டும்போது இந்த நபர் ஹெல்மெட்டையும் அணிந்திருக்கவில்லை. ஆனால், இந்த வீடியோவில், எல்லாமே போலி ஆகும். இந்த நபர் நடிகர் ஷாரூக்கான் இல்லை என்பதை சில வினாடிகளில் கண்டுப்பிடித்து இருப்பீர்கள்.

ஆனால், அவர் ஓட்டுவதும் சுஸுகி ஹயபுஸா பைக் கிடையாது என்பதை பைக் மெக்கானிக்கால் கூட உடனடியாக கண்டுப்பிடிக்க முடியாது. வீடியோவில் பைக்கை நீங்கள் சற்று உற்று பார்த்தால், பைக்கின் ஸ்விங்கார்ம் சற்று வித்தியாசமாக இருப்பதை காணலாம். இது ஹீரோ கரீஸ்மா, பஜாஜ் பல்சர் அல்லது டோமினார் பைக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட போலி ஹயபுஸா பைக்காக இருக்கலாம்.

shahrukhkhan copycat riding fake hayabusa

பின்பக்க ஸ்விங்கார்ம் மட்டுமின்றி, பைக்கின் பின்பக்க சக்கரமும் தோற்றத்தில் சற்று வித்தியாசமாக உள்ளது. அதாவது, உண்மையான ஹயபுஸா பைக்கில் பின் சக்கரம் இன்னும் பெரியதாக இருக்கும். ஹயபுஸா பைக்கை போன்று பேனல்கள் கணக்கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, ரைடர் கால் வைக்கும் பகுதி, பாடி கௌல் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் உண்மையான ஹயபுஸாவில் இருப்பதை போன்று உள்ளன.

இருப்பினும், சக்கரங்களுக்கும் பைக்கின் பேனல்களுக்கும் இடையேயான இடைவெளி இது போலி ஹயபுஸா பைக் என சொல்லாமல் சொல்கிறது. இப்ராஹிம் காத்ரியின் வீடியோவில் காட்சி தருவது, பழைய ஜென்ரேஷன் ஹயபுஸா பைக்கின் போலி மாடல் ஆகும். ஏனெனில், தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஹயபுஸா பைக்குகளில் இவ்வாறான ஹெட்லைட் செட்-அப் வழங்கப்படுவதில்லை.

shahrukhkhan copycat riding fake hayabusa

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவர் நடிகர் ஷாரூக்கானின் போலி என்பதை உடனடியாக கண்டுப்பிடிக்க முடிந்த நம்மால், பைக் உண்மையான ஹயபுஸா என்பதை கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு மாடிஃபிகேஷன் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பின் சக்கரங்களை மட்டும் இன்னும் சரியாக வடிவமைத்து பொருத்தி இருந்தால் ஹயபுஸா பைக் உரிமையாளர்களால் கூட கண்டுப்பிடித்திருக்க முடியாது.

More from DriveSpark

Article Published On: Monday, February 5, 2024, 19:48 [IST]
English summary
Actor shahrukh khan copycat riding fake suzuki hayabusa check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X