மகளுக்கு காஸ்ட்லி திருமண பரிசு வழங்கிய நடிகர் சிவராஜ்குமார்!!

Written By:

கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் மகள் டாக்டர் நிருபமா- டாக்டர் திலீப் ஆகியோரின் திருமணம் பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நேற்று தடபுடலாக நடந்தது. மிகவும் ஆடம்பரமாக நடந்த இந்த திருமண விழாவிற்கு ரூ. 15 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ்குமாரின் இல்ல மண விழா என்பதால், அரசியல் பிரமுகர்களும், தென்னிந்திய சினிமா பிரபலங்களும் இந்த திருமணத்தில் அதிகளவில் பங்குகொண்டனர். மேலும், அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

இந்தநிலையில், தனது மகளுக்கு திருமண பரிசாக பிஎம்டபிள்யூ காரை சிவராஜ்குமார் வழங்கினார். அவர் ஏன் இந்த காரை தேர்வு செய்து வாங்கினால் என்பதற்கு, இந்த காரில் இருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

 கார் மாடல் விபரம்

கார் மாடல் விபரம்

சிவராஜ்குமார் தனது மகளுக்கு திருமண பரிசாக பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார். இந்த கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 6ம் தலைமுறை 3 சீரிஸ் கார். மேலும், அந்த நிறுவனத்தின் குறைவான விலை கொண்ட சொகுசு செடான் கார் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இடவசதி

இடவசதி

குறிப்பாக, நகர்ப்புறங்களில் இயக்குவதற்கு ஏதுவான வடிவத்தை கொண்டது. அடக்கமான வகை செடான் கார் என்பதால், ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும். அதேநேரத்தில், முன் இருக்கைகளும், பின் இருக்கைகளும் மிகச் சிறப்பான இடவசதி, சொகுசையும் வழங்கும். இந்த காரில் 5 பேர் வரை தாராளமாக அமர்ந்து செல்ல முடியும்.

 வண்ணம்

வண்ணம்

இந்தியாவில் 12 விதமான வண்ணங்களில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் கிடைக்கிறது. அதில், இம்பீரியல் புளூ என்ற அடர் நீல வண்ணத்திலான காரை தனது மகளுக்காக வாங்கி பரிசளித்துள்ளார் சிவராஜ் குமார். இந்த வண்ணம் சினிமா பிரபலங்களின் மனம் கவர்ந்த வண்ணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஞ்சின்

எஞ்சின்

சிவராஜ்குமார் பரிசாக வழங்கியிருக்கும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரில் 1,995சிசி 4 சிலிண்டர் டர்போ டீசல் எஞ்சின் கொண்டது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

எஞ்சின் பவர்

எஞ்சின் பவர்

இந்த காரின் எஞ்சின் அதிகபட்சமாக 184 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க்கையும் வழங்கும். எஞ்சின் ஆற்றல் பின்புற சக்கரங்களுக்கு செலுத்தும், ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. லிட்டருக்கு 18.88 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

வசதிகள்

நேவிகேஷன் உள்பட சில பட்டன்களின் மூலமாக பல வசதிகளை இயக்கும் வசதியை அளிக்கும் பிஎம்டபிள்யூ ஐ- ட்ரைவ் சிஸ்டம் உள்ளதும், இந்த காரின் கூடுதல் மதிப்பாக கூறலாம். பிஎம்டபிள்யூ மொபைல்போன் அப்ளிகேஷன், நேவிகேஷன், புளுடூத் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை வழங்கும் இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம் உள்ளது.

 பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

ஸ்பீடோமீட்டர், நேவிகேஷன் சாதனம் உள்பட பல தகவல்களை முன்பக்க வின்ட் ஷீல்டு கண்ணாடியில் காண்பிக்கும் பிஎம்டபிள்யூ ஹெட் அப் டிஸ்ப்ளே, உறுதியான உடல் கட்டமைப்பு, பஞ்சரானாலும் காரை தொடர்ந்து 50 கிமீ வேகம் வரை இயக்கும் வசதி கொண்ட ரன் ப்ளாட் டயர்கள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், உயிர் காக்கும் காற்றுப் பைகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை கொண்டது.

விலை

விலை

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் டாப் வேரியண்ட்டை, ரூ.51 லட்சம் ஆன்ரோடு விலையில் இந்த காரை அவர் வாங்கி பரிசளித்திருக்கிறார். மேலும், இந்த காரை தானே ஓட்டி வந்து திருஷ்டி பூஜைகளையும் நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Kannada actor Shivarajkumar Daughter Gets Costly Marriage Gift.
Story first published: Tuesday, September 1, 2015, 11:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark