12 வருஷமா ஒரே காரை பயன்படுத்தி வரும் பிரபல நடிகர்! இந்த கார்ல அப்படி என்னதான் இருக்குது தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக இருக்கும் நடிகர் சித்தார்த். 12 ஆண்டுகளாக ஒரே காரை பயன்படுத்தி வருவதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக செலிபிரிட்டிகள் அவ்வப்போது தங்கள் கார்களை மாற்றி வரும் நிலையில், இவர் 12 ஆண்டுகளாக ஒரே காரை பயன்படுத்தி வருவது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த் அதன் பிறகு இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். நீண்ட ஆண்டுகளாக சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் சமீபத்தில் நடிகை அதிதியை திருமணம் செய்தார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கடந்த 12 ஆண்டுகளாக ஒரே வாகனத்தை பயன்படுத்தி வருவதாகவும், அந்த வாகனம் அவரது மனதிற்கு பிடித்தமான வாகனமாக மாறிவிட்டதாகவும், பல்வேறு சூழ்நிலைகளிலும் அந்த வாகனத்தை அவர் விடாமல் பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்350 சிடிஐ 4மேட்டிக் வாகனம் தான். இந்த வாகனத்தை அவர் கடந்த 2011ம் ஆண்டு பதிவு செய்து வாங்கியுள்ள தொடர்ந்து இந்த வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் இவர் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார்.

அப்பொழுதும் இவர் குறிப்பிட்ட இந்த வாகனத்தை தான் பயன்படுத்தியுள்ளார். இதில் மழை வெள்ளத்தில் இவரது வாகனம் சிக்கி உள்ளது. இதில் அவரது வாகனத்தின் இன்ஜின் பழுதாகி உள்ளது. அந்த இன்ஜினையே மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோதும், அவர் வாகனத்தை மாற்றாமல் வெளிநாட்டிலிருந்து இன்ஜினை வாங்கி இறக்குமதி செய்து அந்த வாகனத்தை பொருத்தி பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த வாகனத்தை குறிப்பிடும் போது எல்லாம் அவர் அந்த வாகனத்திற்கு வைத்த செல்ல பெயரை பயன்படுத்திய குறிப்பிடுகிறார். அவர் அந்த வாகனத்திற்கு "பீஸ்ட்" என அழைக்கிறார். பொதுவாக வாகனம் வாங்கும் பலர் அந்த வாகனத்தின் மீது அதிக பிரியம் கொண்டு அதற்கு பெயர் வைப்பார்கள். அப்படித்தான் நடிகர் சித்தார்த்தும் இந்த வாகனத்திற்கு பெயர் வைத்து பயன்படுத்தி வருகிறார்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்த ஜிஎல் 350 சிடிஐ வாகனத்தை பொருத்தவரை தற்போது விற்பனையில் இல்லாத ஒரு வாகனமாக இருக்கிறது. இந்த வாகனம் கடைசியாக ரூபாய் 77.68 லட்சம் என்ற விலையில் விற்பனையானது. இந்த கார் 3 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வந்தது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் 350 சிடிஐ வாகனத்தை பொருத்தவரை 6 சிலிண்டர் வி ஷேப் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 258 பிஎஸ் பவரையும் 619 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இன்ஜின் வழக்கமாக பென்ஸ் கார்களில் பொருத்தப்படும் 7 ஸ்பீடு கியர் பாக்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கியர் பாக்ஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸாக உள்ளன. இதற்காக பெடல் ஸ்விஃப்டர் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடுகளும் இந்த காரில் இருந்தது. மேலும் இந்த இன்ஜின் டர்போ சார்ஜர் இன்ஜினாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக பிரபலங்கள் அடிக்கடி வாகனங்களை மாற்றுவதே ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அது வெகுசில பிரபலங்கள் மட்டுமே தங்கள் வாழ்நாளில் வாங்கிய வாகனத்தின் மீது அதிக அன்பு கொண்டு அதை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். அதன்படி நடிகர் சித்தார்த் நீண்ட ஆண்டுகளாக ஒரே வாகனத்தை பயன்படுத்தி வருகிறார். இது நிச்சயம் ஆச்சரியமான தகவல் தான்.


Click it and Unblock the Notifications








