பிஎம்டபிள்யூ பைக் ஷோரூமுக்கு விசிட் அடித்த நடிகர் சிம்பு!
பிஎம்டபிள்யூ பைக் ஷோரூமுக்கு நடிகர் சிம்பு விசிட் அடித்திருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ பைக் ஷோரூமிற்கு நடிகர் சிம்பு விசிட் அடித்தது குறித்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகர் சிம்புவுக்கு கார், பைக்குகள் மீது அதீத ஆர்வம் உண்டு. பிஎம்டபிள்யூ காதலரான சிம்பு ஏற்கனவே, தினசரி பயன்பாட்டிற்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்-6 எஸ்யூவி மாடலை பயன்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ ஷோரூமிற்கு அவர் திடீர் விசிட் அடித்துள்ளார். அந்த ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த பைக்குகளின் மீது அவர் ஆர்வமுடன் அமர்ந்து டிரைவிங் பொசிஷனை ஆய்வு செய்துள்ளார்.

பிஎம்டபிள்யூ ஆர் நைன் டீ மற்றும் பிஎம்டபிள்யூ ஆர் நைன்டீ ஸ்க்ராம்ப்ளர் ஆகிய பைக் மாடல்களில் அவர் அமர்ந்து பார்த்திருக்கிறார். இதனால், அவர் புதிய பிஎம்டபிள்யூ பைக்கை வாங்க திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இதற்காக அவர் ஷோரூம் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிம்பு அமர்ந்து பார்த்து பிஎம்டபிள்யூ ஆர் நைன் டீ பைக்குகள் ரூ.18 லட்சம் விலையில் இருந்து கிடைக்கிறது. ஆர் நைன்டீ ஸ்க்ராம்ப்ளர் ரூ.16 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது.

ஆர் நைன் டீ பைக் மெட்டாலிக் பிளாக் என்ற வண்ணத்திலும், ஆர் நைன் டீ ஸ்க்ராம்ப்ளர் பைக் மோனோலித் மெட்டாலிக் மேட் என்ற வண்ணத்தில் மட்டும் கிடைக்கின்றன.
இதர சுவாரஸ்யச் செய்திகள்:

இந்த இரண்டு பைக்குகளிலும் 1,170சிசி எஞ்சின்தான் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், ஆர் நைன்டீ பைக்கின் எஞ்சின் 110 பிஎச்பி பவரையும், ஆர் நைன்டீ ஸ்க்ராம்ப்ளர் எஞ்சின் அதிகபட்சமாக 107 பிஎச்பி பவரையும் வழங்க வல்லதாக இருக்கும்.

இந்த இரு பைக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு நுட்பமாகவும், ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆப்ஷனலாகவும் கிடைக்கிறது. போதிய பாதுகாப்பு வசதிகள் மட்டுமின்றி, இந்த பைக்குகளின் ஸ்டைல் சிம்புவை வெகுவாக கவர்ந்துவிட்டதாம்.

இந்த நிலையில், நடிகர் சிம்பு புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும், அப்போது அங்கு இருந்த இந்த பைக்குகளின் அழகு அவரை வெகுவாக ஈர்த்ததால், அதில் அமர்ந்து ரசித்து பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த பைக்குகளில் ஒன்றை அவர் முன்பதிவு செய்திருக்கலாம் என்ற கூற்றும் நிலவுகிறது. அதேநேரத்தில், அவர் பைக் வாங்க சென்றாரா அல்லது விளம்பர பட சூட்டிங்கின்போது இந்த படங்கள் எடுக்கப்பட்டனவா போன்ற கூற்றுகளும் நிலவுகிறது.

எனினும், அவர் ஆய்வு செய்த விதங்களை பார்க்கும்போது, அவர் நிச்சயம் புதிய பிஎம்டபிள்யூ பைக்கை வாங்கும் நோக்கில் இருப்பதாகவே தோன்றுவதுடன், முன்பதிவு செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எனவே, விரைவில் பிஎம்டபிள்யூ பைக்கை அவர் டெலிவிரி பெற்று சென்னை சாலைகளில் வலம் வருவார் என நம்பலாம்.
இதர சுவாரஸ்யச் செய்திகள்:


Click it and Unblock the Notifications








