மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் பரிசு... நடிகர் சோனு சூட் பற்றி பரவிய தகவல் உண்மையா?

மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு காரை, சோனு சூட் பரிசாக வழங்கியதாக பரவிய தகவல் உண்மையா? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் பரிசு... நடிகர் சோனு சூட் பற்றி பரவிய தகவல் உண்மையா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்ட பின்னர், திரைப்பட நடிகர் சோனு சூட் மக்கள் மனதில் உண்மையான ஹீரோவாக உருவெடுத்து விட்டார். வெளி மாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல உதவி செய்தது, கோவிட்-19 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வசதியை ஏற்படுத்தி கொடுத்தது என சோனு சூட் செய்த உதவிகள் ஏராளம்.

மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் பரிசு... நடிகர் சோனு சூட் பற்றி பரவிய தகவல் உண்மையா?

இப்படிப்பட்ட ஒரு மனிதரை பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவியது. சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 எஸ்யூவி காருடன் சோனு சூட் இருப்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. இந்த விலை உயர்ந்த காரை சோனு சூட் தனது மகனுக்கு பரிசளித்திருப்பதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் பரிசு... நடிகர் சோனு சூட் பற்றி பரவிய தகவல் உண்மையா?

இது தொடர்பான செய்திகள் இணையம் முழுக்க காட்டு தீ போல பரவியது. ஆனால் இந்த விஷயம் உண்மை கிடையாது என சோனு சூட் தற்போது விளக்கம் அளித்துள்ளார். ஆம், சோனு சூட் இந்த காரை வாங்கவே இல்லை. ஆனால் சோனு சூட் அந்த காரை வாங்கியதாக இணையத்தில் தவறான தகவல் பரவி விட்டது. உண்மையில் இந்த கார் சோனு சூட்டின் வீட்டிற்கு சோதனைக்காக வந்தது.

மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் பரிசு... நடிகர் சோனு சூட் பற்றி பரவிய தகவல் உண்மையா?

டெஸ்ட் டிரைவிற்காகதான் சோனு சூட் அந்த காரை தனது வீட்டிற்கு வரவழைத்திருந்தார். வைரலாக பரவிய வீடியோவில் பதிவு செய்யப்படாத கருப்பு நிற மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 எஸ்யூவி கார் ஒன்று சோனு சூட்டின் வீட்டின் முன்பு நின்று கொண்டிருப்பதை காண முடிந்தது. அத்துடன் டீலர்ஷிப் ஊழியர் ஒருவர், காரில் இடம்பெற்றுள்ள வசதிகளை விளக்கி கொண்டிருந்தார்.

மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் பரிசு... நடிகர் சோனு சூட் பற்றி பரவிய தகவல் உண்மையா?

ஆனால் சோனு சூட் அந்த காரை வாங்கி விட்டதாக தவறான தகவல்கள் பரவி விட்டன. அத்துடன் சோனு சூட் தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது மகனுக்கு அந்த காரை பரிசாக வழங்கியதாகவும் கூட செய்திகள் பரவின. ஆனால் இதில் உண்மை இல்லை. இந்த விஷயத்தில் தந்தையர் தினம் எங்கிருந்து வந்தது? என்று சோனு சூட் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் பரிசு... நடிகர் சோனு சூட் பற்றி பரவிய தகவல் உண்மையா?

தந்தையர் தினத்தில் நான் ஏன் எனது மகனுக்கு கார் பரிசளிக்க வேண்டும்? அவர் அல்லவா எனக்கு ஏதாவது வழங்க வேண்டும்? என சோனு சூட் கேள்வி எழுப்பியுள்ளார். சரி, இனி சோனு சூட் வாங்கியதாக கூறப்பட்ட மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 எஸ்யூவி காருக்கு வருவோம். முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது.

மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் பரிசு... நடிகர் சோனு சூட் பற்றி பரவிய தகவல் உண்மையா?

ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே இந்த கார் கிடைக்கும். இந்திய சந்தையில் மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 எஸ்யூவி காரின் விலை 2.43 கோடி ரூபாயில் இருந்து தொடங்குகிறது. கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப பல்வேறு சொகுசு வசதிகளை மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 எஸ்யூவி கார் பெற்றுள்ளது. அதே சமயத்தில் இந்த காரில், 4.0 லிட்டர் வி8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

மகனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் பரிசு... நடிகர் சோனு சூட் பற்றி பரவிய தகவல் உண்மையா?

இதனுடன் 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த காரில், 8 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஏபிஎஸ் மற்றும் இபிடி என்று பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இந்த எஸ்யூவி கார் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor Sonu Sood Denies Gifting Mercedes-Maybach GLS 600 Luxury SUV To Son. Read in Tamil
Story first published: Tuesday, June 22, 2021, 0:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X