'நல்லவேளையா என் மனைவி உயிரோட இருக்கா'.. பிரபல நடிகர் சோனு சூட் வெளியிட்ட வீடியோ.. காருல போறவங்க கவனத்துக்கு!

கார்களில் பயணிப்பவர்களின் கவனத்திற்காக பிரபல நடிகர் சோனு சூட் ஓர் விழிப்புணர்வை வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். அதில், காரில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி இருக்கின்றார். இதை அவர் அறிவுறுத்த ஓர் காரணம் இருக்கின்றது. சமீபத்தில் சோனு சூட்-இன் மனைவி புதிதாக வாங்கப்பட்ட விண்ட்ஸர் இவி (Windsor EV) எலெக்ட்ரிக் காரில் தனிப்பட்ட காரணத்திற்காக வெளியேச் சென்றிருக்கின்றார். அப்போது அவர் சென்ற அந்த எலெக்ட்ரிக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தைச் சந்திக்க நேரிட்டிருக்கின்றது.

மிகவும் மோசமான விபத்து என அதை நடிகர் சோனு சூட் குறிப்பிடுகின்றார். இருப்பினும், அந்த மோசமான விபத்தில் இருந்து தன் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டதாகவும் அவர் கூறியிருக்கின்றார். விபத்தின் போது அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததே இதற்கு காரணம் ஆகும்.

Sonu sood discusses safety feature after crash

இந்த காரணத்தினால்தான் ஒவ்வொருத்தரும் காரில் பயணிக்கும்போது கட்டாயம் சீல்ட் பெல்ட் அணியுங்கள் என வில்லன் ரோல்களில் அதிகம் நடித்து வரும் சோனு சூத் கூறி உள்ளார். ஓர் வீடியோவாகவே இதனை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கின்றார். கார் எவ்வளவு பாதுகாப்பானதாக இருந்தாலும், ஓர் மோசமான விபத்து யாரும் எதிர்பார்த்திராத பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

இதற்கு சான்றாக பல்வேறு விபத்து சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. இதனால்தான் பொதுநல ஆர்வலர்களும், போக்குவரத்து விதிகளும் சீட் பெல்ட் அணிவதைக் காட்டாயப்படுத்துகின்றன. விபத்தின்போது சோனு சூட்-இன் மனைவி மட்டுமல்ல அவருடைய சகோதரி மற்றும் மருமகனும் உடன் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இவர்கள் அனைவரும் இப்போது நலமாக இருக்கின்றனர்.

இதற்கு காரில் இருந்த ஏர் பேக், சீட் பெல்ட் மட்டுமல்ல எம்ஜி விண்ட்ஸர் இவி காரின் பாதுகாப்பு திறனும் ஓர் முக்கிய காரணாக உள்ளது என்பதை நாம் இங்கே கவனத்தில் கொண்டே ஆக வேண்டும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றே இந்த விண்ட்ஸர் இவி.

இது ஓர் சியூவி (CUV) ரக இ-கார் மாடல் ஆகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் மற்றும் ஒரே சியூவி ரக கார் மாடல் இது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் விண்ட்ஸர் இவி ஒரே ஒரு பேட்டரி பேக் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதன் ஆரம்ப விலை ரூ. 13.5 லட்சம் ஆகும். அதேவேளையில், 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (Battery As A Service) திட்டத்தின்கீழ் இந்த காரை ரூ. 9.9 லட்சத்திற்கு வாங்கிக் கொள்ள முடியும். இதன்கீழ் காரை வாங்கும்போது ஒவ்வொரு கிமீ பயணத்திற்கும் 3 ரூபாய் 50 காசுகள் வரை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.

38 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் ஆப்ஷனே விண்ட்ஸர் இவி காரில் வழங்கப்படுகின்றது. இது ஓர் முழு சார்ஜில் 331 கிமீ ரேஞ்சை தரும். இந்த பேட்டரி பேக்குடன் சேர்த்து விரைவில் பெரிய பேட்டரி பேக் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ வார்த்தைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபத்திய விபத்து சம்பவத்தின் வாயிலாக தானும் ஓர் பாதுகாப்பான கார் என்பதை உறுதிச் செய்திருக்கின்றது, எம்ஜி விண்ட்ஸர் இவி. நிஜ உலகில் இதுபோன்று மிக மோசமான விபத்துகளில் இருந்து உயிர்களைக் காப்பதில் டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் தயாரிப்புகள் முன்னணியில் உள்ளன. இவர்களின் வரிசையிலேயே எம்ஜியின் இந்த அதிகம் விற்பனையாகும் கார் மாடலும் ஒருவராக இணைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 9, 2025, 22:21 [IST]
English summary
Actor sonu sood highlights critical safety feature that saved his wife in serious car crash
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+