25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் வில்லன் கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் சோனு ஷூட். ஆனால் தற்போது தமிழில் அவ்வளவாக பட வாய்ப்புகள் வராததினால் இந்தி & தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...

இவருக்கு அமையும் கேரக்டர்கள் தான் வில்லன் கதாபாத்திரங்களே தவிர, உண்மையில் சோனு ஷூட்டிற்கு குழந்தை மனம். கொரோனா பரவல் அதிகமாக இருந்த சமயத்தில் பல ஏழைகளுக்கு உண்ண உணவும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி இணையத்தில் ஹீரோவானவர்.

25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...

இப்போதும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை தன்னால் முடிந்த அளவிற்கு சோனு ஷூட் செய்து வருகிறார். அதேநேரம் படப்பிடிப்புகளிலும் தவறாது கலந்து கொள்கிறார். இவரது நடிப்பில் தெலுங்கில் ஆச்சார்யா என்ற படம் உருவாகி வருகிறது.

25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...

இதற்காக ஹைதராபாத்தில் தங்கி இருக்கும் சோனு ஷூட் கடந்த புதன்கிழமை இந்த தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சுமார் 25கிமீ தூரத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...

சோனு ஷூட் அதிகாலை சைக்கிளிங், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவர். அதிலும் அழகான ஹைதராபாத் நகரத்தில், மழை நின்ற அதிகாலை வேளையில் சைக்கிளிங் செல்வதற்கு யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்.

25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...

காரை பயன்படுத்தாமல் சைக்கிளேயே படப்பிடிப்பு தளத்திற்கு சென்றது குறித்து சோனு ஷூட் கருத்து தெரிவிக்கையில், நான் சைக்கிளில் எனது படப்பிடிப்பு தளத்திற்கு செல்லவே எப்போதும் விரும்புவேன். மும்பையில் பல முறை சைக்கிளில் சென்றுள்ளேன்.

25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...

இந்த வகையில் தான் ஹைதராபாத்திலும் ஆச்சார்யா படப்பிடிப்பிற்கு சென்றேன். சிறு சிறு தூரல் போட்டு கொண்டிருந்த அதிகாலை வேளையில் ஹைதராபாத்தே அழகாக தெரிந்தது. இது ஒரு இனிமையான பயணமாக இருந்தது என்றார்.

ஹைதராபாத்தில் சைக்கிளிங் சென்ற வீடியோக்களை சோனு ஷூட்டும் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் ‘நமது மாணவர்களுக்காக ஒரு பயணம்' என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார்.

25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...

ஆச்சார்யா படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். இவர் உடன் நடிகர் ராம் சரண், நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்கள். கோரடலா சிவா இயக்குகிறார்.

25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...

கிட்டத்தட்ட 140 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படம் அடுத்த மே மாதத்தில் திரைக்கு வரவுள்ளது. தற்சமயம் சோனு ஷூட்டிற்கு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டேவிற்கும் இடையேயான காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...

ஹீரோக்கள் சைக்கிளில் வெளியே வருவது இப்போதெல்லாம் சாதாரணமாகி விட்டது. ரசிகர்களும் அதையே தான் விரும்புகின்றனர். சமீபத்தில் கூட தளபதி விஜய் தனது ஓட்டை பதிவு செய்வதற்காக வீட்டில் இருந்து வாக்கு பதிவு மையத்திற்கு சைக்கிளில் வந்தது மிகுந்த வைரலானது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Sonu Sood pedals 25 km to Acharya sets. Read Full Details In Tamil.
Story first published: Friday, April 16, 2021, 16:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X