கார் டெலிவிரி எப்போது ஸ்டார்ட் பண்ணுவாங்கனு காத்துக்கிட்டு இருந்தார் போல! குடும்பத்துடன் ஷோரூமில் நடிகர்!
பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் கீழ் செயல்படும் மற்றொரு சொகுசு கார் நிறுவனம் மினி (MINI) ஆகும். பெயருக்கேற்ப மினி கார்கள் அளவில் சிறியவைகளாக உருவாக்கப்படுகின்றன. ஆனால், அதேநேரம் மினி கார்கள் ஒவ்வொன்றின் விலைகளும் பல இலட்ச ரூபாய்களில் உள்ளன. இதனாலேயே, ஏற்கனவே வீட்டில் ஒன்றுக்கு இரண்டு சொகுசு கார்களை வைத்திருக்கும் பணக்காரர்கள் தான் பெரும்பாலும் மினி கார்களை வாங்குகின்றனர். குறிப்பாக, கேரளாவை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் மினி கார்களை பயன்படுத்துகின்றனர்.
கேரளாவை சேர்ந்த மலையாள திரைத்துறையினர் பலரிடத்திலும் மினி கார்கள் உள்ளன. மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மம்முட்டியில் இருந்து, அவரது மகன் துல்கர் சல்மான், நடிகர் பிரித்விராஜ் என பலரிடம் மினி கார்கள் உள்ளன. அந்த வரிசையில், பிரபல மலையாள நடிகர் ஒருவர் தற்போது பிராண்ட்-நியூ மினி கார் ஒன்றை வாங்கி உள்ளார். இவரது பெயர், சௌபின் சாகிர் (Soubin Shahir).

இந்த பெயரை கேள்விப்படாதவர்கள் சிலர் இருக்கலாம். ஆனால் இவரது முகத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு தென்னிந்தியா முழுவதுமே பரீட்சையமான நடிகராக சௌபின் சாகிர் விளங்குகிறார். குறிப்பாக, இந்திய அளவில் கவனத்தை பெற்ற 'மஞ்சுமேல் பாய்ஸ்' (Manjummel Buys) திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தது, சௌபின் சாகிரை மேலும் பிரபலப்படுத்தியது.
ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக சினிமாவிற்குள் வந்தவர், சமீப காலமாக குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி கொண்டிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக 1992இல் இருந்து மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தாலும், சௌபின் சாகிருக்கு 2013க்கு பிறகே திரைப்படங்களில் ஓரளவிற்கு அங்கீகாரம் கிடைக்க துவங்கியது. கிடைத்த சில வாய்ப்புகளையும் நன்கு வலுவாக பிடித்துக் கொண்ட சௌபின் சாகிர் தற்போது மலையாள சினிமா உலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்குகிறார்.

சௌபின் சாகிர் சினிமா துறையில் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளார் என்பதற்கு தற்போது அவர் வாங்கியிருக்கும் விலையுயர்ந்த கார் தான் சாட்சியாகும். நடிகர் சௌபின் சாகிர் தற்போது வாங்கியிருப்பது, மினி நிறுவனத்தின் கூப்பர் எஸ் ஜே.சி.டபிள்யூ (Cooper S JCW) கார் ஆகும். மனைவி மற்றும் குடும்பத்தாருடன் நேரில் ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ மினி கூப்பர் எஸ் ஜேசிடபிள்யூ காரை நடிகர் சௌபின் சாகிர் டெலிவிரி பெற்றுள்ளார்.
இதனை சம்பந்தப்பட்ட கார் ஷோரூமே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் படங்கள் உடன் வெளியிட்டுள்ளது. மினி கூப்பர் எஸ் ஜேசிடபிள்யூ காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த காரின் பெயரில் உள்ள ஜேசிடபிள்யூ ஆனது உலகளவில் பிரபலமான மினி கூப்பர் காரை உருவாக்கிய ஜான் கூப்பர் (John Cooper)ஐ குறிக்கிறது.
ஜான் கூப்பர் வொர்க்ஸ் என்பது ஜே.சி.டபிள்யூவின் முழு விரிவாக்கம் ஆகும். இந்தியாவில் கூப்பர் கார்களை தான் அதிக மாடல்களில் மினி நிறுவனம் விற்பனை செய்கிறது. கூப்பர் எஸ்.இ என்கிற எலக்ட்ரிக் காரும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. கூப்பர் கார்கள் இல்லாமல், கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் காரையும் மினி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்கிறது.
மினி கூப்பர் எஸ் காரின் வேரியண்ட்களுள் ஒன்றுதான், கூப்பர் எஸ் ஜே.எஸ்,டபிள்யூ ஆகும். மேலும், கூப்பர் எஸ் கார்களிலேயே விலையுயர்ந்ததாக கூப்பர் எஸ் ஜே.எஸ்.டபிள்யூ விற்பனை செய்யப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.55.90 லட்சமாக உள்ளது. இந்த காரை புக் செய்த கஸ்டமர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் துவங்கப்பட்டன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மினி கார், கூப்பர் எஸ் ஜே.எஸ்.டபிள்யூ ஆகும். இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட போதே, நிச்சயமாக இதனை மலையாள திரையுலகை சேர்ந்தவர்களுள் யாராவது வாங்குவர் என எதிர்பார்த்தோம். அதேபோல், டெலிவிரி துவங்கப்பட்ட சில வாரங்களிலேயே நடிகர் சௌபின் சாகிர் வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications








