தங்கை மகளுக்கு ஜீப் காம்பஸ் வாங்கி பரிசளித்த நடிகர் சுதீப்!!

ஆடி கார்கள் பக்கம் அடுக்கடையாக கிடந்த சினிமா நட்சத்திரங்கள் இப்போது ஜீப் காம்பஸ் பக்கம் வரிசை கட்டி நிற்கிறது. ஆம். இப்போது சினிமா நட்சத்திரங்களின் கவனம் ஜீப் காம்பஸ் எஸ்யூவி மீது திரும்பி இருக்கிறது.

By Saravana Rajan

தங்கை மகளுக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த நடிகர் சுதீப்!

அக்ஷய் குமார், ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்களை தொடர்ந்து, தற்போது நான் ஈ படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த கிச்சா சுதீப் ஜீப் காம்பஸ் வாங்கி இருக்கிறார்.

தங்கை மகளுக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த நடிகர் சுதீப்!

தனது தங்கை மகளுக்காக இந்த புதிய காரை வாங்கி பிறந்தநாள் பரிசாக வழங்கி இருக்கிறார். கருப்பு வண்ண ஜீப் காம்பஸ் எஸ்யூவியை அவர் முன்பதிவு செய்து பெற்றுள்ளார். ஏற்கனவே ஷோரூமிலிருந்து டெலிவிரி எடுத்தபோது படங்கள் வெளியான நிலையில், தற்போது வீட்டில் அந்த காருடன் போஸ் கொடுத்த படங்கள் வெளியாகி இருக்கின்றன.

தங்கை மகளுக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த நடிகர் சுதீப்!

ஜீப் காம்பஸ் எஸ்யூவி இப்போது திரை நட்சத்திரங்கள் மட்டுமின்றி, இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் கனவு மாடலாக மாறி இருக்கிறது. அசத்தலான டிசைன், சக்திவாய்ந்த எஞ்சின், வசதிகளுடன் கவர்ந்து வருகிறது.

தங்கை மகளுக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த நடிகர் சுதீப்!

குறிப்பாக, மிரட்டலான முகப்பு, நேர்த்தியான டிசைன் என்பதுடன் பாரம்பரியம் மிக்க ஜீப் எஸ்யூவி நிறுவனத்தின் விலை குறைவான மாடலாக விற்பனையாவதும் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து இழுத்து வருகிறது.

தங்கை மகளுக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த நடிகர் சுதீப்!

இந்த கார் ரூ.15.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது. தற்போது ஜீப் காம்பஸ் எஸ்யூவி 160 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும், 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

தங்கை மகளுக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த நடிகர் சுதீப்!

பெட்ரோல், டீசல் மாடல்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கொடுக்கப்படுகிறது. டீசல் மாடலில் மட்டுமே 4 வீல் டிரைவ் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது.

தங்கை மகளுக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த நடிகர் சுதீப்!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி ரஞ்சன்கவுன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை 25,000க்கும் மேற்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தங்கை மகளுக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த நடிகர் சுதீப்!

ஜீப் நிறுவனத்தின் வர்த்தகத்தை மாற்றி எழுதிய பெருமைக்குரிய காம்பஸ் எஸ்யூவியின் டிசைன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இதன்மூலமாக உணர முடிகிறது. மேலும், பல பிரபலங்கள் ஜீப் காம்பஸ் குடும்பத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Article Published On: Wednesday, April 25, 2018, 11:27 [IST]
English summary
Actor Sudeep's Surprise Birthday Gift Jeep Compass to His Niece.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+