மணிக்கு 175கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த போர்ஷே கார்! உள்ளே இருந்தவரை பார்த்ததும் முகம் சுளித்த நெட்டிசன்கள்!
பாலிவுட் நடிகர் சன்னி தியோல் (Bollywood Actor Sunny Deol), பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர். பல ஆண்டுகளாக இவரிடம் பல கவர்ச்சிகரமான கார்கள் இருந்துள்ளன. சமீபத்தில் இவர் வாங்கிய புதிய லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆக்டா (Land Rover Defender Octa) காரை, பாலிவுட்டில் வாங்கிய முதல் நடிகர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதனை தொடர்ந்து மிகவும் சமீபத்தில் கடந்த செப்டம்பரில், நடிகர் சன்னி தியோல் வாங்கிய புதிய போர்ஷே 911 டர்போ 50 இயர்ஸ் எடிஷன் (Porsche 911 Turbo 50 Years Edition) கார் பற்றிய தகவல்கள் வெளியாகின. உலகளவில் பிரபலமான போர்ஷே 911 காரின் லிமிடெட் எடிஷனான இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.3.7 கோடியாகும்.

தியோல் இந்த இரண்டு சொகுசு கார்களையும் தனது புதிய படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூருக்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெய்ப்பூரில் தனது புதிய 911 டர்போ 50 காரில் 170+ கி.மீ வேகத்தில் சன்னி தியோல் பயணிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரால் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஜெய்ப்பூர்-டெல்லி விரைவுச்சாலையில் கார் அதிவேகமாகச் செல்வதைக் காண முடிகிறது. நடிகர் ஜெய்ப்பூரில் உள்ள படப்பிடிப்பு தளத்திலிருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தார். போர்ஷே கார் சாலையின் அதிவேகப் பாதையில் மூன்று இலக்க வேகத்தில் பயணித்தது.

இதற்காகவே பயணத்தின்போது அவ்வப்போது ஸ்பீடோமீட்டரை ஒரு சில நொடிகளுக்கு காட்டியுள்ளனர். மங்கலாக தெரிந்தாலும், ஸ்பீடோமீட்டர் ஊசியின் நிலையைப் பார்க்கும்போது, கார் சுமார் 170-180 கி.மீ வேகத்தில் சென்றிருக்கலாம். அதிகமாக 175 கி.மீ வேகத்தில் சென்றதாகத் தெரிகிறது. தியோல் இந்த அதிவேக பயணத்தை ரசித்து, தொடர்ந்து வேகத்தை அதிகரித்தார்.
"நான் டெல்லிக்குச் செல்கிறேன்" என்று கேமராவைப் பார்த்துச் சொல்லும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில் ஒரு பெரிய குறைபாடு உள்ளது. பொது சாலையில் 170+ கி.மீ வேகத்தில் வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பானது ஆகும். ஆயிரக்கணக்கில் ரசிகர்களை கொண்ட ஒரு பிரபலத்தின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாவது, பலரை இது போன்ற செயலை செய்ய வைக்கும்.

அவர் பலருக்கும் ஒரு தவறான முன்னுதாரணமாகி விட்டார். மேலும், தியோல் சீட் பெல்ட் (Seat Belt) அணியவில்லை என்றும் சிலர் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது ஒரு தவறான கருத்து. அவரது உடைகள் சீட் பெல்ட்டை மறைக்கின்றன. உற்றுப் பார்த்தால், அது பொருத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
மற்றப்படி, இந்த சம்பவத்தில் நடிகர் சன்னி தியோல் பயன்படுத்தி உள்ள போர்ஷே காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், 2024இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, 911 டர்போ 50 எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.4.05 கோடி. தற்போது இது ரூ.3.77 கோடியாகக் குறைந்துள்ளது. 1974 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 911 டர்போ காரின் 50 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், இது ஒரு லிமிடெட் எடிஷன் மாடலாகும். இந்த காரின் மொத்தம் 1,974 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன.
இந்த காரின் முக்கிய வெளிப்புற அம்சங்களில் சிறப்பு வினாயில் கிராபிக்ஸ், ரெட்ரோ டிகால்கள் மற்றும் 'டர்போ 50' பேட்ஜ்கள் ஆகியவை அடங்கும். அவென்டூரின் கிரீன் நிறத்தில் நடிகர் சன்னி தியோல் தனது காரை தேர்ந்தெடுத்துள்ளார். 911 டர்போ 50 காரின் உள்ளே மெக்கன்சி டார்டன் அப்ஹோல்ஸ்டரி உள்ளது. முன்புறத்தில் 20-இன்ச் அலாய் வீல்களும், பின்புறத்தில் 21-இன்ச் அலாய் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளன. கேபினில் மெமரி வசதிகளுடன் எலக்ட்ரிக் மூலமாக 18-விதங்களாக சரிசெய்யக்கூடிய இருக்கைகளும் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: "பெரிய அதிகாரத்திற்கு செல்ல செல்ல பெரிய பொறுப்பும் வரும்" என்று சொல்வார்கள். ஆனால், நீண்ட கால அனுபவமிக்க நடிகர் சன்னி தியோல் செய்திருக்கும் காரியம் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. மக்கள் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களைப் பின்பற்றி, சில சமயங்களில் அவர்களைப் போலவே செயல்பட முயற்சிப்பார்கள். தியோல் தனது புதிய 911 டர்போ காரில் 170+ கி.மீ வேகத்தில் சென்றிருக்கலாம். ஆனால், இதை நகலெடுக்க முயற்சிக்கும் பலர் தங்களது சாதாரணமான வாகனங்களில் மேற்கொண்டு விபத்தில் சிக்கக் கூடும்.


Click it and Unblock the Notifications









