பிரதமர் முன்னிலையில் நடந்த பிரபல நடிகர் மகளின் திருமணம்!! வந்தவங்க எல்லாரும் இந்த பேருந்தை பற்றிதான் பேச்சு!
சுரேஷ் கோபி (Suresh Gopi), பிரபல மலையாள நடிகர். இவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில், புதியதாக கேரவன் பேருந்து ஒன்றை சுரேஷ் கோபி வாங்கி உள்ளார். இணையத்தில் வெளியாகியுள்ள சுரேஷ் கோபியின் கேரவன் பேருந்தின் படங்களை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.
கேரள மக்கள் ஆட்டோமொபைல் வாகனங்களின் மீது கூடுதல் ஆர்வமாக இருப்பார்கள் என்பதை பல்வேறு நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். இந்தியாவில் கார், பைக்குகள் அதிகளவில் மாடிஃபிகேஷன் செய்யப்படும் மாநிலங்களுள் கேரளாவும் ஒன்றாகும். அதேபோல், மலையாள சினிமா துறையை சேர்ந்தவர்கள் புது, புது லக்சரி வாகனங்களை அவ்வப்போது வாங்குகின்றனர்.

லக்சரி கார், பைக்குகள் மட்டுமில்லாமல், கேரவன் பேருந்துகளை புதியது, புதியதாக வாங்கும் பழக்கமும் மலையாள சினிமா பிரபலங்கள் இடையே உள்ளது. பொதுவாக, கேரவனை சினிமா நட்சத்திரங்கள் தான் வாங்குவர் என்பது நமக்கு தெரியும். ஆனால், கேரளாவில் சினிமா துறையை சேராதவர்களும் சுற்றுலா பயணங்களுக்காக கேரவனை வாங்குகின்றனர்.
இந்த வரிசையில், பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி புதியதாக வெள்ளை நிறத்தில் கேரவன் பேருந்தை வாங்கியுள்ளார். சினிமாவில் இருந்து சற்று விலகி, அரசியலில் ஈடுப்பட்டுவரும் சுரேஷ் கோபியின் மகள் பாக்யாவின் திருமணம் கேரளாவில், குருவாயூரில் சமீபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூட நேரில் கலந்துக்கொண்டு திருமண மக்களை வாழ்த்தினார்.

மேலும், இந்த திருமணத்தில் கேரளா திரையுலகின் மெகா ஸ்டார் மம்முட்டியும் கலந்துக் கொண்டார். இந்த திருமணத்தின் போது சுரேஷ் கோபி, தான் புதியதாக வாங்கியுள்ள கேரவனை திருமண மண்டபத்திற்கு கொண்டுவந்தார். திருமணத்திற்கு வந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் புதிய கேரவனில் ஓய்வெடுத்தனர்.
சுரேஷ் கோபி வாங்கியிருக்கும் இந்த கேரவன் ஆனது பாரத் பென்ஸ் 1017 சேசிஸை கொண்டுள்ளது. இந்த சேசிஸில் இவ்வாறான கேரவனை கேரளாவின் முன்னணி கேரவன் தயாரிப்பு நிறுவனமான கோதாமங்கலத்தை சேர்ந்த ஓஜாஸ் ஆட்டோமொபைல்ஸ் உருவாக்கி உள்ளது. கேரவன் முழுவதும் உருவாக்கப்பட்ட பின் அது நேரடியாக குருவாயூரில் உள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒஜாஸ் நிறுவனத்தின் ஸ்டேட்ஸ்மேன் டிசைனில் சுரேஷ் கோபியின் இந்த கேரவன் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு கேரவனுக்கும் ஒவ்வொரு விதமான டிசைன்கள் பின்பற்றப்படும். அதுமட்டுமின்றி, ஆர்டர் கொடுக்கும் உரிமையாளர்கள் கேரவனை அப்படியே வாங்குவது இல்லை. தங்களுக்கு பிடித்தப்படி சில மாற்றங்களை செய்துக் கொள்வர். நடிகர் சுரேஷ் கோபியும் இந்த கேரவனின் வடிவமைப்பில் தனது விருப்பங்களை தெரிவித்துள்ளார்.
இந்த கேரவனில் ஒரு படுக்கை அறை, ஒரு மேக்-அப் ரூம், ஒரு மீட்டிங் ரூம் மற்றும் ஒரு கழிவறை உள்ளது. இவை இல்லாமல், டிரைவர் கேபின் தனியாக உள்ளது. ரோல்ஸ்-ராய்ஸ் கார்களில் இருப்பதை போன்று ஸ்டார் மூட் லைட் செட்-அப்கள் இந்த கேரவனில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வாகனத்தில் புரோஜெக்டர் திரை உடன் மினி-தியேட்டர் செட்-அப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு வழக்கமான பேருந்தை காட்டிலும் இவ்வாறான கேரவன்கள் விலைமிக்கவை ஆக இருக்கும். பேருந்துதான் இவ்வாறு கேரவனாக மாற்றப்படுவதால், முதலில் ஒரு பேருந்தை வாங்க வேண்டிய கட்டாயம் உரிமையாளருக்கு ஏற்படுகிறது. ஆனால், இந்த செலவு எல்லாம் சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்துள்ள சுரேஷ் கோபி போன்ற விவிஐபி-க்கு பெரியதாக இருக்காது.
Source: Manoramaonline


Click it and Unblock the Notifications









