இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா கார் பரிசளித்த நடிகர் சூர்யா!

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு புதிய டொயோட்டா காரை பரிசாக வழங்கி இருக்கிறார் நடிகர் சூர்யா. இந்த காரின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

பாலிவுட் சினிமா உலகில் திரைப்படம் வெற்றி பெற்றால், தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கு கார் பரிசளிக்கும் கலாச்சாரம் உள்ளது. இதனை கோலிவுட்டில் பின்பற்றி வருபவர் நடிகர் சூர்யா. சிங்கம் பட இயக்குனர் ஹரிக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த சூர்யா இப்போது தானா சேர்ந்த கூட்டம் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கார் பரிசளித்துள்ளார்.

 இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா கார் பரிசளித்த நடிகர் சூர்யா!

அண்மையில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வர்த்தக ரீதியிலும் வெற்றிப்படமாக அமைந்தது. இதற்காக, படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டூரிங் ஸ்போர்ட் மாடலை பரிசாக வழங்கி இருக்கிறார் நடிகர் சூர்யா.

 இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா கார் பரிசளித்த நடிகர் சூர்யா!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் மிகவும் விலை உயர்ந்த மாடல்தான் டூரிங் ஸ்போர்ட். சாதாரண இன்னோவா க்ரிஸ்ட்டா கார் மாடலைவிட இந்த டூரிங் ஸ்போர்ட் மாடல் மிக அதிக சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

 இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா கார் பரிசளித்த நடிகர் சூர்யா!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட் காரில் கவர்ச்சிக்காக பல கூடுதல் ஆக்சஸெரீகளும், சிறப்பு வேலைப்பாடுகளும் இடம்பெற்று இருக்கின்றன. எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

 இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா கார் பரிசளித்த நடிகர் சூர்யா!

முகப்பு க்ரில் அமை்பு, அலாய் சக்கரங்கள் கருப்பு வண்ணத்தில் இருப்பதுடன்,பிளாஸ்டிங் கிளாடிங் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. க்ரோம் பூச்சுடன் கூடிய கைப்பிடிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

 இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா கார் பரிசளித்த நடிகர் சூர்யா!

இந்த காரில் 17 அங்குல அலாய் சக்கரங்கள் காரின் பிரம்மாண்டத்தை கூட்டுகிறது. இந்த காரின் முகப்பு வசீகரத்தை கூட்டுவதற்கு க்ரோம் ஆக்சஸெரீகள் அதிக அளவில் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா கார் பரிசளித்த நடிகர் சூர்யா!

ரியர் வியூ மிரர்கள் மற்றும் பி மற்றும் சி பில்லர்கள் கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. உட்புறத்திலும் கருப்பு வண்ண பாகங்களே பயன்படுத்தப்பட்டு இருப்பதும் பிரிமியமாக இருக்கிறது.

 இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா கார் பரிசளித்த நடிகர் சூர்யா!

இந்த காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை, தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது நேவிகேஷன் வசதியையும் அளிக்கிறது. அத்துடன், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா கார் பரிசளித்த நடிகர் சூர்யா!

ஸ்டார்ட்/ ஸ்டாப் தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் கார் நகராமல் நிற்கும்போது எஞ்சின் தானாக ஆஃப் ஆகிவிடும். க்ளட்ச் பெடலை மிதித்தால் மீண்டும் உயிர் பெற்றுவிடும். இதன்மூலமாக, கூடுதல் எரிபொருள் சிக்கனம் பெற வழி கிடைக்கும்.

 இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா கார் பரிசளித்த நடிகர் சூர்யா!

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமரா, அதிக தரைப்பிடிப்பை வழங்கும் ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், மலைப்பாதைகளில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் ஹில் அசிஸ்ட் வசதி, அதிக நிலைத்தன்மையுடன் கார் செல்வதற்கு ஏற்ப எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

 இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா கார் பரிசளித்த நடிகர் சூர்யா!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டூரிங் ஸ்போர்ட் மாடலானது 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 2.4 லிட்டர் டீசல்ல எஞ்சின் மற்றும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் டாப் வேரியண்ட் மாடலாக விற்பனைக்கு கிடைக்கிறது.

 இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா கார் பரிசளித்த நடிகர் சூர்யா!

2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் விற்பனை செய்யப்படுகிறது.

 இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா கார் பரிசளித்த நடிகர் சூர்யா!

இந்த தேர்வில் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் ஆட்டோமேட்டிக் மாடலையே இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் சூர்யா பரிசாக அளித்திருப்பதாக தெரிகிறது. இந்த மாடல் சென்னையில் ரூ.27.12 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

 இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா கார் பரிசளித்த நடிகர் சூர்யா!

இயக்குனர்கள் ஹரி மற்றும் விக்னேஷ் சிவனை தொடர்ந்து, அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. எனவே, செல்வராகவனுக்கு என்ன கார் பரிசாக கிடைக்கும் என்ற ஆராய்ச்சியில் ரசிகர்கள் மூழ்கி இருக்கின்றனர். சரி எல்லோருக்கும் கார் பரிசளிக்கும் சூர்யாவிடம் என்னென்ன கார், பைக்குகள் இருக்கிறது தெரியுமா?.


சிங்கம்லே சூர்யாவின் மோட்டார் உலகம்

முதல் டிரைவிங்...

முதல் டிரைவிங்...

கோயம்புத்தூரில் நடிகர் சூர்யா முதன்முறையாக மோட்டார்சைக்கிள் ஓட்ட பழகினார்.

மாமாவின் பைக்

மாமாவின் பைக்

தனது மாமா வைத்திருந்த யெஸ்டி பைக்கில்தான் முதன்முறையாக ஓட்டுவதற்கு பழகியிருக்கிறார்.

கல்லூரி காலம்

கல்லூரி காலம்

கல்லூரியில் படிக்கும்போது யமஹா ஆர்எக்ஸ்-100 பைக்கில் சுற்றியிருக்கிறார். ஆனால், அந்த பைக்.... தம்பியினுடையதாம்.

கார்த்திக்கின் பைக்...

கார்த்திக்கின் பைக்...

தனது தம்பி கார்த்திக் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக வாங்கிக் கொடுத்த யமஹா ஆர்எக்ஸ்-100 பைக்கைதான் அவர் கல்லூரி நாட்களில் பயன்படுத்தியுள்ளார்.

முதல் பைக்

முதல் பைக்

தனது சம்பளத்தில் சொந்தமாக வாங்கிய முதல் பைக் டிவிஎஸ் ஸ்டார்.

ஸ்டாராக்கிய ஸ்டார்

ஸ்டாராக்கிய ஸ்டார்

ஸ்டார் பைக் வாங்கியது மட்டுமல்ல, நடிகரான பின்பு அந்த பைக்குக்கான விளம்பர படத்திலும் நடித்திருக்கிறார் சூர்யா என்பது நினைவுகூறத்தக்கது.

டிவிஎஸ் அப்பாச்சி

டிவிஎஸ் அப்பாச்சி

இளைஞர்களின் கனவு பைக்குகளில் ஒன்றான டிவிஎஸ் அப்பாச்சியும் சூர்யாவை கவர்ந்துவிட்டது. இரண்டாவதாக, டிவிஎஸ் அப்பாச்சி பைக்கைத்தான் வாங்கியுள்ளார்.

சினிமாவிலும் அப்பாச்சி

சினிமாவிலும் அப்பாச்சி

சினிமாவிலும் அப்பாச்சி பைக்கை சூர்யா பயன்படுத்தியிருக்கிறார். அயன் படத்தில் அவர் டிவிஎஸ் அப்பாச்சியைத்தான் ஓட்டுவார்.

டுகாட்டிக்கு தாவிய சூர்யா

டுகாட்டிக்கு தாவிய சூர்யா

டிவிஎஸ் பைக்குகளின் தீராத காதலரான சூர்யாவுக்கு சூப்பர் பைக்குகள் மீது நீண்ட நாட்களாக ஒரு கண் இருந்தது. தனது தாகத்தை தீர்த்துக் கொள்ளும் விதமாக சூப்பர் பைக்குகளை தேர்வு செய்ய துவங்கினார். அதில், அவரது தேர்வில் இறுதி இடம் டுகாட்டி மான்ஸ்ட்டருக்குத்தான் கிடைத்தது.

டுகாட்டியில் பயணம்

டுகாட்டியில் பயணம்

சூட்டிங் இல்லாத நேரங்களில் தனது பிள்ளைகள் தியா, தேவ் இந்த பைக்கில் வைத்து ரவுண்டு அடிப்பது வழக்கம். மேலும், பள்ளிக்கூடத்திற்கும் தியாவை இந்த பைக்கில் கொண்டு சென்றுவிடுகிறார். கிழக்கு கடற்கரை சாலையிலும் இந்த பைக்கில் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால், மிதமான வேகத்தில்தான் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

ஹூண்டாய் டெரக்கன்

ஹூண்டாய் டெரக்கன்

எஸ்யூவி கார்கள் மீது சூர்யாவுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. முன்னர், ஹூண்டாய் டெரக்கன் எஸ்யூவியை பயன்படுத்தியுள்ளார்.

ஆடி க்யூ7

ஆடி க்யூ7

சினிமாவில் முன்னணி நட்சத்திரமான பின்பு ஆடி க்யூ7 காரை வாங்கி வைத்திருந்தார்.

ஆடி ஏ7

ஆடி ஏ7

நட்சத்திரங்களை போற்றி கொண்டாடி வரும் ஆடி கார் பிராண்டு கடந்த ஆண்டு 80 லட்ச ரூபாய் மதிப்புடைய ஏ7 ஸ்போர்ட்பேக் காரை பரிசாக வழங்கியது.

காட்சி மாறியது

காட்சி மாறியது

கல்லூரி நாட்களில் தம்பியின் பைக்கை பயன்படுத்திய சூர்யா, தனக்கு ஆடி ஏ7 கார் பரிசாக கிடைத்ததையடுத்து, தனது க்யூ7 காரை தம்பியும், நடிகருமான கார்த்திக்கிடம் கொடுத்துவிட்டார்.

Article Published On: Friday, March 16, 2018, 10:35 [IST]
English summary
Actor Suriya Gifts Toyota Innova Car To Director Vignesh Shivan.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+