முன்னணி ஹீரோ சூர்யாவின் மோட்டார் உலகம்

சூட்டிங் முடிந்தால் சூர்யாவுக்கு ரிலாக்ஸ் கொடுப்பது அவரது குடும்பம் மட்டுமல்ல, அவருக்கு பிரியமான மோட்டார் உலகமும்தான். சூர்யாவுக்கு கார், பைக்குகள் மீது அலாதி பிரியமுண்டு. சினிமா அளவுக்கு ஆட்டோமொபைல் துறையிலும் அவருக்கு ஏழாம் அறிவு உள்ளது.

அவரது மோட்டார் உலகம் பற்றிய சிறப்பு தொகுப்பை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். யெஸ்டி பைக்கில் ஆரம்பித்து அவரிடம் இருக்கும் டுகாட்டி வரையிலான பைக்குள் பற்றியும், அவரிடம் இருந்த, இருக்கும் கார்களின் விபரங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

முதல் டிரைவிங்

முதல் டிரைவிங்

கோயம்புத்தூரில் நடிகர் சூர்யா முதன்முறையாக மோட்டார்சைக்கிள் ஓட்ட பழகினார்.

மாமாவின் பைக்

மாமாவின் பைக்

தனது மாமா வைத்திருந்த யெஸ்டி பைக்கில்தான் முதன்முறையாக ஓட்டுவதற்கு பழகியிருக்கிறார்.

 கல்லூரி காலம்

கல்லூரி காலம்

கல்லூரியில் படிக்கும்போது யமஹா ஆர்எக்ஸ்-100 பைக்கில் சுற்றியிருக்கிறார். ஆனால், அந்த பைக்.... தம்பியினுடையதாம்.

கார்த்திக்கின் பைக்

கார்த்திக்கின் பைக்

தனது தம்பி கார்த்திக் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக வாங்கிக் கொடுத்த யமஹா ஆர்எக்ஸ்-100 பைக்கைதான் அவர் கல்லூரி நாட்களில் பயன்படுத்தியுள்ளார்.

முதல் பைக்

முதல் பைக்

தனது சம்பளத்தில் சொந்தமாக வாங்கிய முதல் பைக் டிவிஎஸ் ஸ்டார்.

ஸ்டாராக்கிய ஸ்டார்

ஸ்டாராக்கிய ஸ்டார்

ஸ்டார் பைக் வாங்கியது மட்டுமல்ல அந்த பைக்குக்கான விளம்பர படத்திலும் நடித்திருக்கிறார் சூர்யா என்பது நினைவுகூறத்தக்கது.

டிவிஎஸ் அப்பாச்சி

டிவிஎஸ் அப்பாச்சி

இளைஞர்களின் கனவு பைக்குகளில் ஒன்றான டிவிஎஸ் அப்பாச்சியும் சூர்யாவை கவர்ந்துவிட்டது. இரண்டாவதாக, டிவிஎஸ் அப்பாச்சி பைக்கைத்தான் வாங்கியுள்ளார்.

Trending On DriveSpark Tamil:

சினிமாவிலும் அப்பாச்சி

சினிமாவிலும் அப்பாச்சி

சினிமாவிலும் அப்பாச்சி பைக்கை சூர்யா பயன்படுத்தியிருக்கிறார். அயன் படத்தில் அவர் டிவிஎஸ் அப்பாச்சியைத்தான் ஓட்டுவார்.

டுகாட்டிக்கு தாவிய சூர்யா

டுகாட்டிக்கு தாவிய சூர்யா

டிவிஎஸ் பைக்குகளின் தீராத காதலரான சூர்யாவுக்கு சூப்பர் பைக்குகள் மீது நீண்ட நாட்களாக ஒரு கண் இருந்தது. தனது தாகத்தை தீர்த்துக் கொள்ளும் விதமாக சூப்பர் பைக்குகளை தேர்வு செய்ய துவங்கினார். அதில், அவரது தேர்வில் இறுதி இடம் டுகாட்டி மான்ஸ்ட்டருக்குத்தான் கிடைத்தது.

டுகாட்டியில் பயணம்

டுகாட்டியில் பயணம்

சூட்டிங் இல்லாத நேரங்களில் தனது குழந்தை தியா, தேவ் இந்த பைக்கில் வைத்து ரவுண்டு அடிப்பது வழக்கம். மேலும், பள்ளிக்கூடத்திற்கும் தியாவை இந்த பைக்கில் கொண்டு சென்றுவிடுகிறார். கிழக்கு கடற்கரை சாலையிலும் இந்த பைக்கில் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால், மிதமான வேகத்தில்தான் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

 ஹூண்டாய் டெரக்கன்

ஹூண்டாய் டெரக்கன்

எஸ்யூவி கார்கள் மீது சூர்யாவுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. முன்னர், ஹூண்டாய் டெரக்கன் எஸ்யூவியை பயன்படுத்தியுள்ளார்.

ஆடி க்யூ7

ஆடி க்யூ7

சினிமாவில் முன்னணி நட்சத்திரமான பின்பு ஆடி க்யூ7 காரை வாங்கி வைத்திருந்தார்.

ஆடி ஏ7

ஆடி ஏ7

நட்சத்திரங்களை போற்றி கொண்டாடி வரும் ஆடி கார் பிராண்டு கடந்த ஆண்டு 80 லட்ச ரூபாய் மதிப்புடைய ஏ7 ஸ்போர்ட்பேக் காரை பரிசாக வழங்கியது.

காட்சி மாறியது

காட்சி மாறியது

கல்லூரி நாட்களில் தம்பியின் பைக்கை பயன்படுத்திய சூர்யா, தனக்கு ஆடி ஏ7 கார் பரிசாக கிடைத்ததையடுத்து, தனது க்யூ7 காரை தம்பியும், நடிகருமான கார்த்திக்கிடம் கொடுத்துவிட்டார்.

Trending On DriveSpark Tamil:

More from DriveSpark

Article Published On: Tuesday, April 23, 2013, 13:25 [IST]
English summary
சூட்டிங் முடிந்தால் சூர்யாவுக்கு ரிலாக்ஸ் கொடுப்பது அவரது குடும்பம் மட்டுமல்ல, அவருக்கு பிரியமான மோட்டார் உலகமும்தான். சூர்யாவுக்கு கார், பைக்குகள் மீது அலாதி பிரியமுண்டு. சினிமா அளவுக்கு ஆட்டோமொபைல் துறையிலும் அவருக்கு ஏழாம் அறிவு உள்ளது.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+