பிரபல நடிகரின் கேரேஜில் புதியதொரு பிஎம்டபிள்யூ கார்!! விலை இவ்வளவுதான் - நாம கூட ஒன்னு வாங்கி போடலாம் போலயே!

பாலிவுட்டில் வளர்ந்துவரும் இளம் நடிகரான டைகர் ஷெராஃப் விலைமிக்க பிஎம்டபிள்யூ காரை புதியதாக வாங்கியுள்ளார். ஏற்கனவே ஏகப்பட்ட சொகுசு கார்களுக்கு சொந்தகாரரான டைகர் ஷெராஃப் புதியதாக வாங்கி இருப்பது விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கிரான் லிமௌசைன் கார் ஆகும். நடிகர் ஒருவர் விரும்பி வாங்கக்கூடிய அளவிற்கு இந்த பிஎம்டபிள்யூ காரில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை இனி பார்க்கலாம்.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராஃப்பின் மகனாக அறிமுகமாகிய டைகர் ஷெராஃப் அதிரடி கலந்த ஆக்‌ஷன் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளார். மற்ற சினிமா நடிகர், நடிகைகளை போன்று டைகர் ஷெராஃப்க்கும் ஆட்டோமொபைல் வாகனங்கள் மீது ஆர்வம் அதிகம். இதனாலேயே ஷெராஃப் குடும்பத்தில் ஏகப்பட்ட சொகுசு கார்கள் நிற்கின்றன.

tiger shroff buys bmw 3-series

குறிப்பாக, பிஎம்டபிள்யூ கார்கள் என்றால் டைகர் ஷெராஃப்க்கு கூடுதல் பிரியம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே ஏகப்பட்ட பிஎம்டபிள்யூ கார்களை தனது வீட்டு கேரேஜில் வைத்திருக்கும் இவர் புதியதாக பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கிரான் லிமௌசைன் என்ற லக்சரி தரத்திலான செடான் காரை வாங்கியுள்ளார். டெலிவிரி எடுக்கப்பட்ட பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காருடன் டைகர் ஷெராஃப் நிற்கும் படங்களை இங்கே காணலாம்.

tiger shroff buys bmw 3-series

மும்பையில் உள்ள பூஜா ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் டைகர் ஷெராஃப்பிடம் கார் டெலிவிரி செய்யப்பட்ட போது இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. படங்களில் கார் சிவப்பு நிற நம்பர் பிளேட்டை கொண்டு இருப்பதை காணலாம். இத்தகைய நம்பர் பிளேட் ஷோரூம் பயன்பாட்டிற்கு வழங்கப்படுவது ஆகும். இந்த ரெட் நம்பர் பிளேட் உடன் கஸ்டமர்களால் எந்த வாகனத்தையும் சாலையில் இயக்க முடியாது.

இதனால், டைகர் ஷெராஃப்பும் வெறுமனே காருக்குள் அமர்ந்து மட்டுமே பார்ததாகவும், காரை ஓட்டி பார்க்கவில்லை எனவும் அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. டைகர் ஷெராஃப் வாங்கி இருப்பது பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கிரான் லிமௌசைன் காரின் 330எல்.ஐ வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டை பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் தேர்வுடன் பெற முடியும். நடிகர் டைகர் ஷெராஃப் வாங்கி இருப்பது பெட்ரோல் என்ஜின் உடன் ஆகும்.

tiger shroff buys bmw 3-series

பெட்ரோல் வேரியண்ட்களில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 258 பிஎஸ் மற்றும் 400 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. நடிகர் டைகர் ஷெராஃப் வாங்கி இருக்கும் வேரியண்ட்டில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.2 வினாடிகளிலேயே எட்டிவிடலாம்.

டீசல் வேரியண்ட்களில் பொருத்தப்படும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மூலம் 190 பிஎஸ் மற்றும் 400 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். டீசல் வேரியண்ட்களில் 0-100kmph வேகத்தை சற்று தாமதமாக 7.6 வினாடிகளிலேயே எட்ட முடியும். ஆனால் டீசல் வேரியண்ட்களில் கிட்டத்தட்ட 20kmpl மைலேஜ் கிடைப்பதை மறந்துவிட வேண்டாம். லக்சரி கார் ஒன்றில் இந்த அளவிற்கான மைலேஜ் கிடைப்பது அதிசயம் ஆகும்.

tiger shroff buys bmw 3-series

பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் செடான் காரின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலையே நடிகர் டைகர் ஷெராஃப் வாங்கி உள்ளார். இந்த நடிகர் வாங்கி இருக்கும் பிஎம்டபிள்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஏறக்குறைய ரூ.60 லட்சம் இருக்கும். ஆன்-ரோடு விலை ரூ.70 லட்சம் வரலாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ரூ.70 லட்சத்தில் ஒரு சொகுசு காரை வாங்குவது டைகர் ஷெராஃப் போன்ற நடிகர்களுக்கு அவ்வளவு பெரிய மேட்டர் கிடையாது. ஏனெனில் நடிகர், நடிகையர் கோடிக்கணக்கிலான விலைகளில் புதியது, புதியதாக கார்களை வாங்கி வருகின்றனர். அதிலிலும் பாலிவுட் நடிகர்கள் நம் தமிழ் நடிகர்களை விட பல கோடிகளில் அதிக சம்பளம் வாங்குகின்றனர்.

Source: NDTV

More from DriveSpark

Article Published On: Friday, July 28, 2023, 15:27 [IST]
English summary
Actor tiger shroff buys bmw 3 series gran limousine
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X