படத்தில் மட்டுமல்ல! நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான்! 'மின்னல் முரளி' பற்றிய இந்த விஷயம் தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!
'மின்னல் முரளி' திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த டொவினோ தாமஸ், நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மலையாள திரையுலகை சேர்ந்தவர் டொவினோ தாமஸ் (Tovino Thomas). மலையாளம் மட்டுமின்றி தமிழ் திரைப்படங்களிலும் நடித்து, தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை டொமினோ தாமஸ் உருவாக்கியுள்ளார். ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய டொமினோ தாமஸ், தற்போது மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

இதற்கு அவரது கடின உழைப்புதான் முக்கியமான காரணம். சமீபத்தில் வெளிவந்த 'மின்னல் முரளி' (Minnal Murali) திரைப்படத்தில் டொவினோ தாமஸ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் டொவினோ தாமஸின் திரையுலக பயணத்தில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இந்த திரைப்படத்தின் மூலமாகதான் டொவினோ தாமஸை பலருக்கும் தெரிய ஆரம்பித்தது.

பொதுவாக திரைப்பட நடிகர், நடிகைகள் பல்வேறு கார்களை சொந்தமாக வைத்திருப்பார்கள். டொவினோ தாமசும் இதற்கு விதிவிலக்கு அல்ல. டொவினோ தாமஸிடம் ஏராளமான கார்கள் உள்ளன. அவரது கார் கலெக்ஸன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைதான் இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஹோண்டா சிட்டி (Honda City)
திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கிய பின்னர், டொவினோ தாமஸ் வாங்கிய முதல் கார் இதுதான். இது செடான் ரகத்தை சேர்ந்த கார். கடந்த 2014ம் ஆண்டு, 4வது தலைமுறை ஹோண்டா சிட்டி செடான் காரை டொவினோ தாமஸ் வாங்கினார். டொவினோ தாமஸ் இன்னமும் இந்த காரை வைத்திருக்கிறார்.

அவ்வப்போது இந்த காருடன் அவரை காண முடியும். டொவினோ தாமஸ் மெரூன் நிறத்தில் ஹோண்டா சிட்டி காரை வாங்கியுள்ளார். இது ஃபேஸ்லிஃப்ட்டிற்கு முந்தைய மாடல் ஆகும். கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, நிவாரண முகாம்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கு, டொவினோ தாமஸ் தனது ஹோண்டா சிட்டி காரை பயன்படுத்தினார். நிஜ வாழ்க்கையிலும் இவர் ஹீரோதான்!

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா போன்ற கார்களுடன், ஹோண்டா சிட்டி கார் போட்டியிட்டு வருகிறது. இதில் ஸ்கோடா ஸ்லாவியா கார் வெகு சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செக்மெண்ட்டில் வரும் மாதங்களில் போட்டி இன்னும் அதிகரிக்கவுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார்தான் அதற்கு காரணம். ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் வெகு சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து வரும் மே மாதம் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அப்போது இந்த செக்மெண்ட்டில் போட்டி இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடி க்யூ7 (Audi Q7)
டொவினோ தாமஸின் கனவு கார்களில் ஒன்றாக ஆடி க்யூ7 காரை குறிப்பிடலாம். இந்த காரை அவர் கடந்த 2017ம் ஆண்டு வாங்கினார். இந்திய சந்தையில் ஆடி நிறுவனம் வெகு சமீபத்தில்தான் க்யூ7 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டொவினோ தாமஸ் வைத்திருப்பது ஃபேஸ்லிஃப்ட்டிற்கு முந்தைய மாடல் ஆகும்.

டொவினோ தாமஸ் கருப்பு நிறத்தில் ஆடி க்யூ7 காரை வாங்கியுள்ளார். இந்த நிறம், ஆடி க்யூ7 காரை இன்னும் பிரீமியமாக காட்டுகிறது. கடந்த காலங்களில் ஆடி க்யூ7 காருடன் டொவினோ தாமஸை அடிக்கடி பார்க்க முடிந்துள்ளது. டொவினோ தாமஸிடம் உள்ள விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக ஆடி க்யூ7 கார் திகழ்ந்து வருகிறது.

பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series)
டொவினோ தாமஸிடம் இருப்பதிலேயே அனேகமாக இதுதான் மிகவும் விலை உயர்ந்த காராக இருக்கும் என கூறப்படுகிறது. இது சொகுசு செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இது பிஎம்டபிள்யூ 730எல்டி எம் ஸ்போர்ட் வெர்ஷன் (BMW 730Ld M Sport Version) ஆகும். டொவினோ தாமஸ் இந்த காரை கடந்த 2019ம் ஆண்டு வாங்கினார்.

இந்த பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரில், 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 265 பிஎஸ் பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் சொகுசு கார் மிகவும் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








