ஒரே படத்தில் இந்தியா முழுக்க பிரபலமான நடிகர்! சம்பளத்தை உயர்த்திட்டாரா என்ன? ஒரே நாளில் இரு கார்கள் டெலிவிரி!!

லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் டிஃபெண்டர் (Defender) கார்களுக்கு உலகம் முழுவதுமே சிறப்பான வரவேற்பு உள்ளது. இந்தியாவிலும் தான். டிஃபெண்டர் கார்களின் கம்பீரமான தோற்றத்திற்காகவே நிறைய பேர் அதனை ஆர்வத்துடன் வாங்குகின்றனர். குறிப்பாக, சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகளின் பிரதானமான தேர்வாக டிஃபெண்டர் கார்கள் உள்ளன.

அந்த வரிசையில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை தற்போது வாங்கியுள்ளார். இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், பிராண்ட்-நியூ டிஃபெண்டர் கார் மட்டுமின்றி, இந்த நடிகர் ஒரே நாளில் இன்னொரு விலையுயர்ந்த காரையும் டெலிவிரி பெற்றுள்ளார். அது என்ன கார் என்பதை பார்க்கும் முன்னர், இந்த மலையாள நடிகரை பற்றி முதலில் பார்த்துவிடுவோம்.

actor unni mukundan bought luxury cars

தற்போது இரு விலையுயர்ந்த சொகுசு கார்களை டெலிவிரி பெற்றிருக்கும் இந்த மலையாள நடிகரின் பெயர், உன்னி முகுந்தன் (Unni Mukundan) ஆகும். கேரளாவின் திரிச்சூரில் பிறந்தவரான 37 வயதான உன்னி முகுந்தனின் முழு பெயர், உன்னிகிருஷ்ணன் முகுந்தன் ஆகும். 2011இல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'சீடன்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் இவர் அறிமுகமாகினார்.

முதல் படத்திலேயே நடிகர் தனுஷ் உடன் தமிழ் மொழியில் நடித்ததினால் அதன்பின் நடிகர் உன்னி முகுந்தனுக்கு மலையாளத்தில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. 2012ஆம் ஆண்டில் மட்டும் இவரது நடிப்பில் 6 மலையாள திரைப்படங்கள் திரைக்கு வந்தன. அதன்பின் ஒவ்வொரு வருடத்திலும் உன்னி முகுந்தனின் நடிப்பில் 3- 4 திரைப்படங்கள் திரைக்குவர ஆரம்பித்தன.

actor unni mukundan

இருப்பினும், நடிகர் உன்னி முகுந்தனை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்த திரைப்படம் என்றால் அது கடந்த 2024இல் வெளியான 'மார்கோ' (Marco) திரைப்படம் ஆகும். மலையாளத்தில் உருவான இந்த திரில்லர் திரைப்படம் பல இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பெரிய ஹிட் அடித்தது.

இதன் மூலமாக திரைத்துறையில் மேலும் கவனிக்கத்தக்க நடிகராக உருவெடுத்த உன்னி முகுந்தன் தற்போது வாங்கியிருப்பது பளபளப்பான கருப்பு நிறத்திலான டிஃபெண்டர் காரின் எச்.எஸ்.இ (HSE) வேரியண்ட் ஆகும். இதில் 2 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. டிஃபெண்டர் எச்.எஸ்.இ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.39 கோடியில் இருந்து உள்ளன.

actor unni mukundan bought luxury cars

நடிகர் உன்னி முகுந்தன் மற்றொரு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ளதாக கூறினோம் அல்லவா. அது என்னவென்றால், மினி கண்ட்ரீமேன் இவி ஜே.சி.டபிள்யூ (MINI Countryman EV JCW) என்கிற எலக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். கடந்த ஜூன் மாதத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மினி எலக்ட்ரிக் காரையும் முழுவதும் கருப்பு நிறத்தில் உன்னி முகுந்தன் வாங்கி உள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் உன்னி முகுந்தனுக்கு கருப்பு தான் பிடித்தமான நிறம் போல. அதேபோல், மலையாள நடிகர், நடிகைகளுக்கு மினி கார் என்றாலே பிடித்தமான கார் என்றாலும் உன்னி முகுந்தன் வாங்கியிருப்பது அரிதான மினி கார் ஆகும். ஏனெனில், இந்தியாவில் மொத்தமாகவே வெறும் 20 மினி கண்ட்ரீமேன் இவி ஜேசிடபிள்யூ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.

More from DriveSpark

Article Published On: Sunday, July 13, 2025, 5:00 [IST]
English summary
Actor unni mukundan takes delivery of two luxury cars in single day
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X