இதெல்லாம் காரே கிடையாது... சொகுசு கப்பல்... கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வாங்கிய பிரபலம்... இவர்தானா அது?

பிரபல மனிதர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை தற்போது சொந்தமாக வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதெல்லாம் காரே கிடையாது... சொகுசு கப்பல்... கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வாங்கிய பிரபலம்... இவர்தானா அது?

இந்தியாவின் பிரபல மனிதர்கள் மத்தியில் சமீப காலமாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS) கார் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். பிரபலமான மனிதர்கள் பலர் தொடர்ச்சியாக இந்த காரை வாங்கி வருகின்றனர். பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான விக்ராந்த் மேஸ்ஸியிடம் (Vikrant Massey) இந்த கார் உள்ளது.

இதெல்லாம் காரே கிடையாது... சொகுசு கப்பல்... கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வாங்கிய பிரபலம்... இவர்தானா அது?

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரை விக்ராந்த் மேஸ்ஸி வெகு சமீபத்தில்தான் வாங்கினார். மேலும் மணீஷ் பாலிடமும் (Maniesh Paul), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார் உள்ளது. பாலிவுட் திரையுலகில் நடிகர், பாடகர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என மணீஷ் பாலுக்கு பல்வேறு முகங்கள் இருக்கின்றன.

இதெல்லாம் காரே கிடையாது... சொகுசு கப்பல்... கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வாங்கிய பிரபலம்... இவர்தானா அது?

இந்த சூழலில், பாலிவுட் திரையுலகின் மற்றொரு முன்னணி நடிகரான வருண் தவானும் (Varun Dhawan) தற்போது புதிதாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரை வாங்கியுள்ளார். வருண் தவான், கருப்பு நிறத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரை தேர்வு செய்துள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இதெல்லாம் காரே கிடையாது... சொகுசு கப்பல்... கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வாங்கிய பிரபலம்... இவர்தானா அது?

400டி 4மேட்டிக் (400d 4MATIC), 450 4மேட்டிக் (450 4MATIC) மற்றும் மேபெக் 600 4மேட்டிக் (Maybach 600 4MATIC) என 3 வேரியண்ட்களில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார் கிடைக்கிறது. இதில், 400டி 4மேட்டிக் மற்றும் 450 4மேட்டிக் ஆகிய 2 வேரியண்ட்களும் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த 2 வேரியண்ட்களின் விலையும் 1.14 கோடி ரூபாய் ஆகும் (எக்ஸ் ஷோரூம்).

இதெல்லாம் காரே கிடையாது... சொகுசு கப்பல்... கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வாங்கிய பிரபலம்... இவர்தானா அது?

அதே நேரத்தில் மேபெக் 600 4மேட்டிக் டாப் வேரியண்ட்டாக உள்ளது. இதன் விலை 2.47 கோடி ரூபாய் ஆகும். இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான். ஆனால் இதில் எந்த வேரியண்ட்டை வருண் தவான் வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரின் ஒவ்வொரு வேரியண்ட்டிலும் ஒவ்வொரு வகையான இன்ஜின் வழங்கப்படுகிறது.

இதெல்லாம் காரே கிடையாது... சொகுசு கப்பல்... கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வாங்கிய பிரபலம்... இவர்தானா அது?

இதன்படி இந்த சொகுசு காரின் 400டி 4மேட்டிக் வேரியண்ட்டில் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வும், 450 4மேட்டிக் வேரியண்ட்டில் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது. அதே சமயம் மேபெக் 600 4மேட்டிக் 4.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இவை மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்த இன்ஜின்கள் ஆகும். இந்த 3 இன்ஜின்களுடனும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள்தான் வழங்கப்படுகின்றன.

இதெல்லாம் காரே கிடையாது... சொகுசு கப்பல்... கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வாங்கிய பிரபலம்... இவர்தானா அது?

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரின், 400டி 4மேட்டிக் மற்றும் 450 4மேட்டிக் ஆகிய 2 வேரியண்ட்களும் 7 சீட்டர் மாடல்கள் ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் மேபெக் 600 4மேட்டிக் வேரியண்ட் 4 சீட்டர் மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. எனவே மற்ற 2 வேரியண்ட்களை காட்டிலும், மேபெக் 600 4மேட்டிக் வேரியண்ட்டில் பயணம் செய்வது இன்னும் சொகுசான அனுபவமாக இருக்கும்.

இதெல்லாம் காரே கிடையாது... சொகுசு கப்பல்... கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வாங்கிய பிரபலம்... இவர்தானா அது?

எனவே மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரின் மிகவும் விலை உயர்ந்த மேபெக் 600 4மேட்டிக் வேரியண்ட்டை வருண் தவான் வாங்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் வருண் தவான் எந்த வேரியண்ட்டை வாங்கியுள்ளார்? என்பதை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை. வருண் தவானிடம் ஏற்கனவே மிகவும் விலை உயர்ந்த பல்வேறு கார்கள் சொந்தமாக இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதெல்லாம் காரே கிடையாது... சொகுசு கப்பல்... கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வாங்கிய பிரபலம்... இவர்தானா அது?

இதில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி 4மேட்டிக் (Mercedes Benz GLS 350d 4Matic), லேண்ட் ரோவர் எல்ஆர்3 (Land Rover LR3) மற்றும் ஆடி க்யூ7 (Audi Q7) போன்ற கார்கள் மிகவும் முக்கியமானவை. இவை மூன்றும் கூட எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்கள்தான் என்பது கவனிக்கத்தக்கது. இந்த வரிசையில் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரும் வருண் தவானின் சொகுசு கார் கலெக்ஸனில் இணைந்துள்ளது.

இதெல்லாம் காரே கிடையாது... சொகுசு கப்பல்... கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வாங்கிய பிரபலம்... இவர்தானா அது?

மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரை வாங்கியுள்ள நடிகர் வருண் தவானுக்கு, சமூக வலை தளங்கள் மூலமாக அவரது ரசிகர்கள் தற்போது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வரும் காலங்களில் வருண் தவான் இன்னும் பல்வேறு மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை சொந்தமாக்குவார் என நாம் எதிர்பார்க்கலாம்.

Article Published On: Friday, June 24, 2022, 16:50 [IST]
English summary
Actor varun dhawan buys mercedes benz gls luxury suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+