நடிகர் விஜய் வந்திறங்கியது காரே இல்ல பிஎம்டபிள்யூ தேரு! இதோட விலை என்ன தெரியுமா?

நடிகர் விஜய் ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரில் தனது தயாரிப்பாளர் குடும்ப திருமண விழாவிற்கு வந்திறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காரை இந்தியாவில் வெகு சிலரை வைத்துள்ளனர். அதில் நடிகர் விஜயும் ஒருவர். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட்டான நிலையில் இவருக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் பின்னால் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் அரசியலுக்கு நுழைவதற்கு குறித்து பல்வேறு நகர்வுகளை செய்து வருகிறார். இதனால் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக நடிகர் விஜய் இருக்கிறார்.

actor vijay

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ படம் மிகப்பெரிய ஹிட்டான நிலையில் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார் என்பவரது மகனுக்கு நேற்று சென்னையில் வைத்து திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு சினிமா திரையுலக பிரபலங்கள் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். அதன்படி நடிகர் விஜய்யும் இந்த திருமணத்திற்காக அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த திருமணத்திற்கு வருகை தந்த நடிகர் விஜய் தனது பிஎம்டபிள்யூ 5சீரிஸ் 530டி எம் ஸ்போர்ட் காரில் வந்து இறங்கினார். வெள்ளை நிற சட்டை கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார். இந்த காரில் அவர் வந்து இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது இந்த திருமண நிகழ்விற்காக இவர் வந்த கார் குறித்து தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

actor vijay

நடிகர் விஜய்யிடம் உள்ள இந்த பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530 காரை தான் இவர் சென்னை நகர் உள்ளே பயணிப்பதற்காக அதிகம் பயன்படுத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் சினிமா படப்பிடிப்பிற்காக தாய்லாந்து கிளம்பி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வரும்போது இந்த காரில் தான் வந்திருந்தார். அப்பொழுது இந்த வீடியோ வைரலாக பரவியது.

தற்போது தயாரிப்பாளர் லலித் மகன் திருமணத்திற்கு இந்த காரில் இவர் வந்த செய்தியும் வைரலாக பரவி வருகிறது. இந்த பிஎம்டபிள்யூ 530டி எம் ஸ்போர்ட் காரை பொறுத்தவரை பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஒரு சிறந்த காராக இருக்கிறது. இந்த காரில் 2993சிசி 6 சிலிண்டர் இன்லைன் 4வால்வு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 3லி b57டர்போசார்ஜர் ஐ6 இன்ஜினாக இருக்கிறது. இந்த இஞ்சினுடன் 8ஸ்பீடு கியர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

actor vijay

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 261 பிஎச்பி பவரையும் 620 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினை கொண்டு இந்த கார் அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வேகம் வரை சீறிப்பாயும் திறன் கொண்டதாக இருக்கிறது. மேலும் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.7 நொடியில் பிக்கப் செய்து விடும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் லிட்டருக்கு 17.4 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. முக்கியமாக இந்த காரை ஓட்டிச் செல்லும் டிரைவர் 80 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் காரை ஓட்டி சென்றால் ஒரு முறை பீப் சத்தம் கேட்கும்.

actor vijay

தொடர்ந்து காரின் வேகத்தை அதிகரித்து 120 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும்போது தொடர்ந்து பீப் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் இதன் மூலம் அவர் சுதாரித்துக் கொண்டு காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும். இது மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது.

இதுபோக இந்த காரில் எமர்ஜென்சி பிரேக் லைட் பிளாஷிங், பின்பக்கம் மூன்று பாயின்ட் சீட் பெல்ட், பின்பக்கம் உள்ள பயணிக்கான ஹெட் ரெஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரின் சிஸ்டம், சைல்டு சீட் ஆங்கர் பாயிண்ட்கள், சீட் பெல்ட் வார்னிங் உள்ளிட்ட ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. இதுபோக இந்த கார் யூரோ என்கேப் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள பாதுகாப்பான கார்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

இது போக இந்த காரின் பிரேக்கிங்கை பொருத்தவரை இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்பி, ஹில் ஹோல்டு கண்ட்ரோல் சிஸ்டம், உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. எந்த அளவுக்கு பாதுகாப்பான கார் அதே அளவுக்கு சொகுசு அம்சங்கள் நிறைந்த காராக இருக்கிறது.

இதன் காரணமாகவே இதை சினிமா பிரபலங்கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த காரில் நான்கு ஸோன் கொண்ட ஆட்டோமெட்டிக் ஏசி, கேபினிலிருந்து பூட் பகுதியை ஆக்சஸ் செய்து கொள்ளும் வசதி, 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார், ஸ்டேரிங் வீல் அட்ஜஸ்ட்மென்ட், உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு இல்லை என்றாலும் கடைசியாக ரூபாய் 75 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. நடிகர் விஜய் இந்த காரை கடந்த 2020-ம் ஆண்டு வாங்கிவிட்டார் தற்பொழுது 3 ஆண்டுகளாக இந்த காரை தான் அவர் அதிகம் பயன்படுத்தி வருகிறார். நடிகர் விஜய் வைத்திருப்பது கார்பன் மெட்டாலிக் நிறை பிஎம்டபிள்யூ 5 சீரியஸ் காராகும் இதுபோக ஆல்பைன் ஒயிட் நிறத்திலும் இந்த கார் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விஜய் பயன்படுத்தி வரும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் எம் 530டி டி எம் ஸ்போர்ட் கார் தற்போது விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்டாலும் இன்றைய அளவும் இந்த காரை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த காருக்கு கிரேஸ் இருக்கிறது. இன்றும் ஏகப்பட்ட மக்கள் இந்த காரை காண்பதற்காக.

நடிகர் விஜயிடம் இந்த கார் மட்டும் அல்ல ரோல்ஸ்ராய்ஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ளன அவர் இந்த காரை தான் அடிக்கடி சென்னையில் பயணம் செய்ய பயன்படுத்தி வருகிறார். இவரது ரசிகர்கள் பலர் இவரை விட இவரது கார்களை அதிகம் ரசிக்க துவங்கிவிட்டனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 25, 2023, 11:57 [IST]
English summary
Actor vijay arrives in bmw 5 series on lalit son marriage
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X