நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம்! உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

நடிகர் விஜய் கடந்த 2005ம் ஆண்டு இறக்குமதி செய்த காருக்கு நுழைவு வரி செலுத்தக் கோரி வணிக வரித்துறை அளித்த நோட்டீஸ்க்கு எதிரான வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் கீழே காணுங்கள்

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

தமிழ் நடிகர்களில் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் நடிகர் விஜய், இவர் நடிக்கும் திரைப்படங்களிலிருந்து இவர் வாங்கிய கார்கள் வரை எல்லாமே சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இவர் நடித்த காவலன், துப்பாக்கி, தலைவா, மெர்சல் போன்ற படங்கள் எல்லாம் சர்ச்சையில் சிக்கியது. இந்நிலையில் கடந்தாண்டு இவர் வாங்கிய கார் தொடர்பான வழக்கில் இவரை விமர்சனம் செய்து நீதிபதி அளித்த தீர்ப்பு சர்ச்சையைக் கிளப்பியது.

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

அதன்படி நடிகர் விஜய் கடந்த 2005ம் ஆண்டு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரை வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் நேரடியாக இறக்குமதி செய்து வாங்கினார். பொதுவாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் எதை இறக்குமதி செய்தாலும் அதற்கு இறக்குமதி வரி விதிக்கப்படும்.

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

அதன்படி இந்தியாவில் சொகுசு கார்களை இறக்குமதி செய்தால் அதற்கு அந்த காரின் விலையை விட அதிகப் பணம் இறக்குமதி வரியாக விதிக்கப்படும். நடிகர் விஜய் அந்த இறக்குமதி வரிகளை எல்லாம் கட்டி காரை இறக்குமதி செய்த தமிழ்நாட்டிற்குள் பதிவு செய் பயன்படுத்திவந்தார்.

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

இந்நிலையில் இந்த காருக்காக தமிழக அரசுக்கு நுழைவு வரி செலுத்தக் கோரி தமிழக வணிக வரித்துறை நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியது. அதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக விசாரணையிலிருந்தநிலையில் கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றம் நுழைவு வரி கோருவதற்கு மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது எனத் தீர்ப்பளித்தது.

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் இந்த காருக்கான நுழைவு வரியை ரூ7,98,075 ஏற்கனவே கட்டியிருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி வணிக வரித்துறையினர். கடந்த வரி செலுத்தப்படாத இடைபட்டகாலத்திற்கு அபராதம் செலுத்தும்படி உத்தரவிட்டனர்.

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

அதன்படி சுமார் ரூ7,98,075 வரிக்கு ரூ30,23,609 அபராதம் செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ் நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல இதே போன்ற வழக்கில் சிக்கியுள்ள இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், சென்னை அடையார் கேட் ஓட்டல் நிர்வாகம் உள்ளிட்டோருக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவர்களும் இது குறித்து தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

இந்த மூன்று வழக்கையும் ஒரே வழக்காகச் சேர்ந்து நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். இதில் வாதிகள் தரப்பில் வரி செலுத்தாமல்போனால் 2 சதவீதம் மட்டுமே அபராதம் போட வேண்டும் என விதி உள்ளது. ஆனால் தற்போது 400 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

ஆனால் வணிக வரித்துறை 2 சதவீதம் என்பது ஒரு மாதத்திற்கான அபராதம் தான் எனவும் தற்போது 190 மாதங்கள் வரை ஆகிவிட்டதால் அதை எல்லாம் சேர்ந்து கிட்டத்தட்ட 400 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக வாதித்தனர்.

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குறிப்பிட்ட அபராத தொகையை 2019ம் ஆண்டு ஜனவரிக்குள் செலுத்தியிருந்தால் அதற்கு அபராதம் கட்ட வேண்டாம் எனவும், அதற்குப் பின்னர் செலுத்தியிருந்தால் அபராதம் கட்ட வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதே போல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட்ஸ் ஓட்டல் நிர்வாகம் தொடர்ந்த வழக்கையும் முடித்து வைத்தார்.

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நடிகர் விஜய் மீது போடப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய கார் தற்போது நடிகர் விஜயிடமே இல்லை அதை அவர் வேறு நபருக்கு விற்பனை செய்துவிட்டார். இருந்தாலும் இந்த காரை முதலில் இவர் தான் வாங்கினார் என்பதால் இந்த நோட்டீஸை அவருக்கு வணிக வரித்துறையினர் அளித்துள்ளனர். இந்த செய்திகளை எல்லாம் படிக்கும்போது பலருக்குக் குழப்பமாக இருக்கலாம் ஒரு காருக்கு எவ்வளவு வரிகள் தான் விதிக்கப்படும் என நீங்கள் குழப்பலாம்.

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

இதைச் செய்தியில் தெளிவாக விளக்குகிறோம். இந்தியர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை இந்தியாவிலேயே செலவு செய்தால் அந்த பணத்தால் மற்றொரு இந்தியர் வளர்ச்சியடைவார், அவர் அந்த பணத்தைச் செலவு செய்தால் அவரால் மற்றவர் என வளர்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

ஆனால் இந்தியாவில் சம்பாதித்த பணத்தை வெளிநாட்டில் செலவு செய்தால் இந்தியாவிற்குக் கிடைக்கவேண்டிய நன்மை கிடைக்காது. இதைச் சரி செய்ய மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் எந்த பொருட்களை இறக்குமதி செய்தாலும் அதற்கு வரி விதிக்கிறது.

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

ஆனால் இறக்குமதி செய்யப்படும் பொருள் எந்த அளவிற்கு இந்தியாவிற்குள் கிடைக்கிறது. இந்தியாவிற்கு இதனால் ஏற்படும் நஷ்டத்தை அளவிக்கு ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மாதிரியான வரி விதிப்பு நடக்கிறது. ஆட்டோமொபைல் துறையைப் பொருத்தவரை பல விதங்களில் வரி விதிப்பு பிரிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

அதன்படி இந்தியாவில் இன்ஜின், கியர் பாக்ஸ், எல்லாம் அசெம்பிள் செய்யப்படாமல் உதிரிப் பாகங்களாக இறக்குமதி செய்தால் 15 சதவீத இறக்குமதி வரியும், இன்ஜின் கியர் பாக்ஸ் எல்லாம் அசெம்பிள் செய்யப்பட்டு இறக்குமதி செய்தால் 25 சதவீத வரியும், இதுவே பயணிகள் வாகனமாக இருந்தால் 30 சதவீத வரியும்,

முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட டிரக் மற்றும் பஸ்களுக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

முழுவதும் கட்டமைக்கப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரியும், முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட கார்களில் பெட்ரோல் இன்ஜினில் 3000 சிசி வரையிலும், டீசல் இன்ஜினில் 2500 சிசி வரையிலும் அதே நேரம் 40 ஆயிரம் டாலருக்கு குறைவான மதிப்பில் உள்ள கார்களுகு்கு 60 சதவீத வரியும், பெட்ரோல் இன்ஜினில் 3000 சிசிக்கு அதிகமாகவும், டீசல் இன்ஜினில் 2500 சிசிக்கு அதிகமாகவும் அல்லது 40 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு அதிகமான மதிப்பிலும் இருந்தால் அதற்கு 100 சதவீத வீரியும், பயன்படுத்திய கார்களை இறக்குமதி செய்ய 125 சதவீத இறக்குமதி வரியும் விதிக்கப்படுகிறது.

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

ஆனால் நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்டது மாநில அரசு சார்பில் விதிக்கப்பட நுழைவு வரி ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு முன்பு மாநில அரசுகள் தனியாகவும் மத்திய அரசு தனியாகவும் வரிகளை வசூலித்து வந்தன. அப்பொழுது இந்த நுழைவு வரி எல்லாம் இருந்தது. தற்போது ஜிஎஸ்டி வந்துவிட்ட பின்பு நுழைவு வரி ஜிஎஸ்டி உடனேயே இணைந்து விடும்.

நடிகர் விஜய் வரியே கட்டவேண்டாம் . . . உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு . . . கார் இறக்குமதி குறித்த தெளிவான விளக்கம்

தற்போது கார்களை இறக்குமதி செய்தால் நுழைவு வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஜிஎஸ்டி கட்ட வேண்டும். சொகுசு கார்கள் எல்லாம் ஜிஎஸ்டி சிலாப்களில் இல்லாமல் தனியாக வரிகள் விதிக்கப்படுகிறது. நீங்கள் வெளிநாட்டிலிருந்து ஒரு காரை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் எந்த காரை இறக்குமதியைச் செய்வீர்கள்? உங்கள் பதிலை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Friday, July 15, 2022, 18:09 [IST]
English summary
Actor Vijay BMW x5 car import entry tax case got judgment
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+