ரோல்ஸ்ராய்ஸ் வாங்கினாலும், நடிகர் விஜய்க்கு பிடித்த கார் பிராண்டு எது தெரியுமா?

தமிழ் சினிமாவின் இளைய தளபதியாக வலம் நடிகர் விஜய் மெர்சல் மூலமாக தளபதியாக உயர்ந்துள்ளார். வயது ஏற, ஏற, இளமை கூடிக் கொண்டே செல்லும் விஜய் தனது கதைகள் மூலமாக ரசிகர்களை மட்டுமின்றி, மக்களையும் வெகுவாக நெருங்கி வருகிறார்.

அனைவருக்கும் பிடித்த நடிகர் விஜய்க்கு தனிப்பட்ட முறையில் கார்கள் மீது அலாதி பிரியம் உண்டு. பிஎம்டபிள்யூ, ஆடி மட்டுமில்லை, ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்திலும் இணைந்துவிட்டார். அவர் போற்றி பாதுகாக்கும் அவரது கார்களை ஸ்லைடரில் காணலாம்.

பிடித்த பிராண்டு

பிடித்த பிராண்டு

சச்சின் டெண்டுல்கர் போன்றே நடிகர் விஜய்யும் பிஎம்டபிள்யூ கார் பிரியர். இதனை ஒரு விழாவிலேயே அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லை, அவர் ஓட்டுவதற்கு பிரியப்படும் மாடல்கள் பெரும்பாலும் பிஎம்டபிள்யூவாகத்தான் இருக்கும். ஆம், இரண்டாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி ஒன்றை அவர் வாங்கி வைத்திருக்கிறார்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5

பிஎம்டபிள்யூ எக்ஸ்5

இந்த காரை தானே ஓட்டி மகிழ்கிறார் விஜய். அதற்கு காரணம், இந்த காரில் இருக்கும் சக்திவாய்ந்த 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின். இந்த எஞ்சினுடன் எக்ஸ்- ட்ரைவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. இதனால், இந்த காரின் செயல்திறன் மிகச்சிறப்பாக இருப்பதும் விஜய்யை கவர்ந்த விஷயம்.

டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவாவை யாருக்குத்தான் பிடிக்காது. அகலமான, சவுகரியமான இருக்கைகளால் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கும் இன்னோவாவை விஜய்க்கும் பிடித்ததில் ஆச்சரியமில்லை. பிஎம்டபிள்யூ பிரியராக இருந்தாலும், இன்னோவாவின் இடவசதி விஜய்யை கவர்ந்த விஷயம்.

குடும்பத்துடன் பயணிக்க...

குடும்பத்துடன் பயணிக்க...

குடும்பத்தினருடன் செல்வதற்கு ஏற்ற கார். இந்த காரில் 100 பிஎச்பி பவரையும், 200என்எம் டார்க்கையும் வழங்கும் 2.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் உள்ளது.

 நிசான் எக்ஸ் ட்ரெயில்

நிசான் எக்ஸ் ட்ரெயில்

நடிகர் விஜய்யிடம் நிசான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவி ஒன்றும் உள்ளது. விஜய்க்கு ஆஃப்ரோடு செல்வதிலும் ஆர்வம் இருக்கிறது. எனவே, இந்த மிகச்சிறந்த ஆஃப்ரோடு எஸ்யூவி மாடலை வாங்கி பயன்படுத்தி வருகிறார்.

 நிசான் எக்ஸ் ட்ரெயில்

நிசான் எக்ஸ் ட்ரெயில்

இந்த எஸ்யூவியில் 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் உள்ளது. அதிசெயல்திறன் மிக்க இந்த எஞ்சின் விஜய்யை மிகவும் கவர்ந்துவிட்டது. அத்துடன், இந்த எஸ்யூவி மணிக்கு 200 கிமீ வேகம் வரை செலலும் திறன் கொண்டது. தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை.

பிஎம்டபிள்யூ எக்ஸ்6

பிஎம்டபிள்யூ எக்ஸ்6

நடிகர் விஜய்யின் கராஜை பார்த்தோமேயானால், பெரும்பாலான கார்கள் எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததாகவே இருக்கிறது. அதிலிருந்து, அவரது ரசனையையும், ஆர்வத்தையும் புரிந்து கொள்ள முடியும். ஆம், பிஎம்டபிள்யூ பிரியரான விஜய்யிடம் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எஸ்யூவி ஒன்றும் உள்ளது. இதன் வித்தியாசமான க்ராஸ்ஓவர் ரக டிசைன் விஜய்யை கவர்ந்துவிட்டது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த க்ராஸ்ஓவர் ரக சொகுசு காரில் 3.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிசிறந்த கையாளுமை, உயர்தர இன்டீரியர், சொகுசு வசதிகள்தான் இந்த காரை விஜய் தேர்வு செய்ததற்கான காரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆடி இல்லாமலா...

ஆடி இல்லாமலா...

சினிமா நட்சத்திரங்களின் வீட்டு கராஜ்களில் எந்த பிராண்டு வேண்டுமானாலும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஆடி பிராண்டு கார் இல்லாத இடம் இருக்காது. அந்த வகையில், விஜய் ஆடி நிறுவனத்தின் மிகவும் உயர்வகை சொகுசு செடான் கார் மாடலான ஆடி ஏ8எல் காரும் உள்ளது. வசதிகளிலும், இடவசதியிலும் ஈடு இணையற்ற செடான் கார் மாடல்.

ஆடி ஏ8எல்

ஆடி ஏ8எல்

இந்த காரின் மிக முக்கிய அம்சம், சாதாரண ஏ8 மாடலைவிட அதிக நீளம் கொண்டது. இதனால், பின் இருக்கையில் அமர்ந்தால், விசாலமான சோபாவில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை தரும். இந்த கார் ரூ.1.17 கோடி விலை மதிப்பு கொண்டது.

ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில்...

ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில்...

கடந்த 2012ம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் இணைந்துவிட்டார் நடிகர் விஜய். அதாவது, ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வாங்க பணம் வைத்திருந்தால் மட்டும் போதாது. வாடிக்கையாளரின் பின்புலத்தை ஆராய்ந்த பிறகே ரோல்ஸ்ராய்ஸ் தனது கார்களை டெலிவிரி கொடுக்கும். அந்த வகையில், ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கியை பெருமையை பெற்றார் விஜய்.

 ரோல்ஸ்ரோய்ஸ் கோஸ்ட்

ரோல்ஸ்ரோய்ஸ் கோஸ்ட்

ரூ.3.5 கோடியில் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த காரில் இருக்கும் 6.6 லிட்டர் வி12 வகை எஞ்சின் அதிகபட்சமாக 570 பிஎச்பி பவரையும், 780 என்எம் டார்க்கையும் வழங்கும். ரோல்ஸ்ராய்ஸ் கார்களிலேயே விலை குறைவான மாடல் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 மினி கூப்பர் கார்

மினி கூப்பர் கார்

ஜில்லா படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள் திடீரென இந்த காரில் வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் விஜய். மேலும், படப்பிடிப்பு தளத்திற்கு இந்த காரில்தான் வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

மினி கூப்பர் சிறப்புகள்

மினி கூப்பர் சிறப்புகள்

பார்ப்பதற்கு ஸ்விஃப்ட் போலவே காட்சியளித்தாலும், இந்த காரில் அதிக சக்திவாய்ந்த 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 184 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க்கையும் இந்த எஞ்சின் வழங்கும். கச்சிதமான இந்த காரின் செயல்திறன் விஜய்யை வியக்க வைத்திருக்கிறது.

 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்

பிஎம்டபிள்யூ பிரியரான நடிகர் விஜய்யிடம் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரும் உள்ளது. இந்த காரையும் அதிகம் பயன்படுத்துகிறார்.

சிறப்புகள்

சிறப்புகள்

இந்த காரில் இருக்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 258 பிஎச்பி பவரையும், 560 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த கார் லிட்டருக்கு 14.69 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. ரூ.50 லட்சம் விலை மதிப்பு கொண்டது.

பிஎம்டபிள்யூவா, எனக்கா... ஹாஹாஹா... எளிமையின் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கார் கலெக்ஷன்!

பிஎம்டபிள்யூவா, எனக்கா... ஹாஹாஹா... எளிமையின் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கார் கலெக்ஷன்!

புது மாருதி ஸ்விஃப்ட் வாங்க ஐடியா இருக்கா? கண்டிப்பா இந்த ஆல்பத்தை மிஸ் பண்ணாதீங்க!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Actor Vijay Car Collection.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X