முதல்வன் பட பாணியில் ரசிகரின் கையை உடைத்தாரா விஜய்? கார் கதவை சரியா அடைக்கலேன்னா இதான் நடக்கும்!

நடிகர் விஜய் நேற்று கோவையில் ரோடு ஷோ மற்றும் பூத் கமிட்டி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்காக கோவை வந்த விஜய் காரில் செல்லும் போது ரசிகர்கள் துரத்தி வந்த நிலையில் ரசிகர் ஒருவரின் கையை கார் கதவில் மாட்டும் வகையில் கதவை திறந்து மூடினார். இவர் முதல்வன் படத்தில் ரகுவரன் நடித்த காட்சி போல நடந்து கொண்டதாக தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் தனி விமானம் மூலம் கோவைக்கு வந்து அங்கு ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பின்னர் இவர் ஃபார்ச்சூனர் கார் மூலம் பூத் கமிட்டி மாநாடு நடக்கும் இடத்திற்கு சென்றார். இவர் அந்த காரில் செல்லும் போது இவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் காரை துரத்தி வந்தனர்.

Vijay Car Door Video

அப்பொழுது விஜய் திடீரென கார் கதவை திறந்து மூடினார். இந்த காட்சிகளை வெளியிட்ட சில செய்தி ஊடகங்களின் பதிவுகளை வைத்து சில நெட்டிசன்கள் இவர் முதல்வர் படத்தில் நடிகர் ரகுவரன் ஒரு காட்சியில் தனது தொண்டரின் கையை காரின் ஜன்னல் கண்ணாடி உள்ளே வைத்து உடைத்துவிடுவார். அது போல நடிகர் விஜய் காரை தொடும் ரசிகரின் கையை பதம் பார்க்க தான் இப்படி கார் கதவை திறந்து மூடுவதாக பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் உண்மை என்ன என்றால் சற்று வித்தியாசமாக இருக்கிறது. நடிகர் விஜய் இந்த காரில் ஏறும் போது காரின் கதவை சரியாக அடைத்திருக்க மாட்டார். அதனால் கார் ஓடும் போது அது டிரைவரின் டேஷ் போர்டில் எச்சரிக்கை லைட் எரிந்திருக்கும். இதையடுத்து டிரைவர் விஜய்க்கு கார் கதவு சரியாக அடைக்காமல் இருப்பதை சொல்லியிருப்பார்.

Vijay Car Door Video

உடனடியாக சுதாரித்துக்கொண்ட நடிகர் விஜய் காரின் கதவை திறந்து மூடியுள்ளார். இது ஒரு முறை மட்டுமே செய்துள்ளார். இந்த வீடியோவை லூப் மோடில் போட்டு திரும்ப திரும்ப திறந்து திறந்து மூடுவது போன்ற ஒரு தோற்றத்தை வீடியோவில் ஏற்படுத்தியுள்ளனர். அதனால் சிலர் விஜய் ரசிகர்களின் கையை பதம் பார்க்கும் வகையில் விஜய் கார் கதவை திறந்து மூடினார் என பரப்பி வருகின்றனர்.

காரில் பயணிக்கும் போது அனைத்து கதவுகளும் சரியாக லாக்காகிவிட்டதா என சுதாரித்துக்கொண்டு தான் வாகனத்தை டிரைவர் நகரத்த வேண்டும். கதவு சரியாக லாக் ஆகவில்லை என்றால் கார் வேகமாக பயணிக்கும் போது கார் கதவு தானாக திறக்க வாய்ப்புள்ளது. இதை நடிகர் விஜய் காரை ஓட்டி டிரைவர் மிக தாமதமாக சுதாரித்தார். நல்ல வேளையாக அசம்பாவிதங்கள் ஏதுவும் நடக்கவில்லை.

Vijay Car Door Video

அதே நேரம் இது போன்ற அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலர் காரில் செல்லும் போது அவர்களது ரசிகர்கள், தொண்டர்கள் என பலர் அவர்களது கார்களை பின்தொடர்ந்து ஓடுகிறார்கள். இது என்றைக்குமே ஆபத்தானது. பலர் பைக்குகளில் கூட இப்படி பின்தொடர்கின்றனர். நிச்சயம் இது போன்ற செயல்களை செய்வதை ரசிர்கள், தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனம் ஓட்டும் போது மிகவும் முக்கியமான விஷயம் எல்லாம் சரியாக இருக்கிறதா என செக் செய்த பிறகு தான் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய வேண்டும். பிரபலங்கள் பயணிக்கும் வாகனங்களில் இது மிக முக்கியமான விஷயம். நடிகர் விஜய் சாதாரணமாக கார் கதவை திறந்து மூடியதை சிலர் மாற்றி எடிட் செய்து அவருக்கு எதிராக பரப்பி வருகின்றனர் என்பது தான் உண்மை.

Source: Galatta

More from DriveSpark

Article Published On: Sunday, April 27, 2025, 21:30 [IST]
English summary
Actor vijay car door open explained viral video controversy
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X