நடிகர் விஜய் பைக் ஓட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவர் பைக் ஓட்டுவது போன்ற காட்சி சென்னையில் சூட் செய்யப்பட்டது. அதை செல்போன் வீடியோவில் படமெடுத்து வைரலாக்கியுள்ளனர் அவரது ரசிகர்கள்.

By Balasubramanian

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே குவித்து வைத்திருப்பவர் நடிகர் விஜய். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இவரது நடிப்பிற்கு ஏகேபித்த ரசிகர்கள் இருக்கின்றனர்.

நடிகர் விஜய் பைக் ஓட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மெகா ஹிட் ஆகி தமிழ் திரையுலகம் மட்டும் அல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

நடிகர் விஜய் பைக் ஓட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

தற்போது இவர் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடாத ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கான படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகர் விஜய் பைக் ஓட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

இந்நிலையில் அவர் சென்னையில் உள்ள ஒரு ரோட்டில் பைக் ஓட்டி வருவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சி மக்களோடு மக்களாக விஜய் பைக் ஓட்டி வருவது போல் படமாக்கப்பட்டது.

நடிகர் விஜய் பைக் ஓட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

அதற்காக திடீர் என பைக்கில் நடிகர் விஜய் ரோட்டில் பைக் ஓட்டி வந்தார். முன்னால் ஒரு லாரியில் கேமரா பொறுத்தப்பட்டு அந்த காட்சி படமாக்கப்பட்டது. இந்த சூட்டிங்கை அதே ரோட்டில் பைக்கில் சென்ற சிலர் தங்கள் மொபைல் போனில் படம் பிடித்துள்ளனர்.

நடிகர் விஜய் பைக் ஓட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சி உங்களுக்காக கீழே வழங்கியுள்ளாம்.

இந்த காட்சியில் நடிகர் விஜய் ஹோண்டா ஷைன் பைக்கை ஓட்டி வருகிறார். அவர் ஹெல்மெட் போட்டு கொண்டே பைக்கை ஓட்டி வருகிறார். படம் குறித்த எந்த வித தகவலும் வெளியாகமல் இருந்த நிலையில் இந்த வீடியோ ரசிகர் மத்தியில் ஏகோபித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் பைக் ஓட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

நடிகர் விஜய் மோட்டர் வாகன பிரியர் இவர் பல கார்களை வாங்கி தனது கராஜில் குவித்து வைத்துள்ளார். இவரது நடிப்பு துறையில் சக போட்டியாளராக உள்ள நடிகர் அஜித்தின் ஆட்டோமொபைல் ஆர்வம் குறித்து உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை அவர் நடிகர் விஜய் கார் வாங்கும்போதெல்லாம் சில டிப்ஸ்களை வழங்குவதாக கூட செய்திகள் வந்தன.

நடிகர் விஜய் பைக் ஓட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

நடிகர் விஜயிடம் உள்ள கார்களின் பட்டியலை அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கீழே பட்டியலிட்டுள்ளோம்.

நடிகர் விஜய் பைக் ஓட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

பிஎம்டபிள்யூ எக்ஸ்5

கிரிக்கெட் வீரர் சச்சின் போன்றே நடிகர் விஜயும் பிஎம்டபிள்யூ கார்கள் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர். பி.எம்.டபிள்யூ கார்களை அவரே ஓட்ட விரும்புவார். அவரிடம் பிஎம்.டபிள்யூ எக்ஸ் 5 காரும் சொந்தமாக உள்ளது. இது 3.0 லிட்டர் டர்போ டீசல் 6 சிலிண்டர் இன்ஜின் கொண்ட ஆல் வீல் டிரைவ் கார் இது.

நடிகர் விஜய் பைக் ஓட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

டொயோட்டா இனோவா

நடிகர் விஜய் தன் குடும்பத்தினருடன் வெளியில் செல்வதற்கு டொயோட்டா இனோவா கார்களையே பயன்படுத்தி வருகிறார். இது அதிக இடவசதியும் செளகரியமாகவும் இருப்பதால் இதை அவர் வாங்கியுள்ளார். இது 2.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் கொண்டது. இது 100 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

நடிகர் விஜய் பைக் ஓட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

நிஷான் எக்ஸ் ட்ரெயில்

நடிகர் விஜய் ஆப்ரோடு பயணங்களில் ஆர்வம் கொண்டவர் என்பதால் இந்த நிஷான் எக்ஸ் ட்ரெயி்ல காரை வாங்கியுள்ளார். இது 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினை கொண்டது. இது 200 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது.

நடிகர் விஜய் பைக் ஓட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

பிஎம்டபிள்யூ எக்ஸ் 6

நடிகர் விஜயிடம் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 6 எஸ்யூவி காரும் உள்ளது. இவரது காராஜில் அதிகமாக எஸ்.யூ.வி கார்கள் தான் அதிகம் உள்ளது.

நடிகர் விஜய் பைக் ஓட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

ஆடி ஏ8எல்

பெரும்பாலும் பிரபலங்கள் காரஜில் ஆடிகார் இல்லாமல் இருக்காது அந்த வகையில் நடிகர் விஜயிடம் ஆடி ஏ8எல் ரக ஆடி காரும் உள்ளது. இந்த காரின் விலை சுமார் ரூ 1.17 கோடியாகும்.

நடிகர் விஜய் பைக் ஓட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

ரோல்ஸ்ரோய்ஸ் கோஸ்ட்

இவர் கடந்த 2012ம் ஆண்டு ரோல்ஸ்ரோய்ஸ் கோஸ்ட் காரை வாங்கினார். இது 6.6 லிட்டர் வி12 வகை இன்ஜினை கொண்டது. இது அதிகபட்சமாக 570 பிஎச்பி பவரையும், 780 என்எம் டார்க்கையும் வழங்கும். இதன் விலை ரூ 3.5 கோடி.

நடிகர் விஜய் பைக் ஓட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

மினிகூப்பர் கார்

ஜில்லா படபிடிப்பின் போது திடீர் என நடிகர் விஜய் மினி கூப்பர் காரில் வந்திறங்கினார். அப்பொழுது தான் அவரிடம் இந்த கார் இருப்பதே பலருக்கு தெரியவந்தது. இந்த கார்பார்ப்பதற்கு ஸ்விஃப்ட் போலவே காட்சியளித்தாலும், இந்த காரில் அதிக சக்திவாய்ந்த 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 184 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க்கையும் இந்த இன்ஜின் வழங்கும்.

நடிகர் விஜய் பைக் ஓட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்

பிஎம்டபிள்யூ பிரியரான நடிகர் விஜய்யிடம் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரும் உள்ளது. இந்த காரையும் அதிகம் பயன்படுத்துகிறார். இந்த காரில் இருக்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 258 பிஎச்பி பவரையும், 560 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த கார் லிட்டருக்கு 14.69 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. ரூ.50 லட்சம் விலை மதிப்பு கொண்டது.

Article Published On: Saturday, April 28, 2018, 18:55 [IST]
English summary
actor vijay riding bike for his UNNAMED film shooting. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+