அடுத்த சிஎம் இவர் தான் போல! நடிகர் விஜய் மாலையுடன் வந்திறங்கிய காரை பார்த்தீர்களா?
ஏப் 14ம் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் எளிமையான காரில் வந்து அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் வந்த கார் எளிமையான காராக இருக்கிறது. இந்த கார் குறித்து பலர் பேசி வருகின்றனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப் 14ம் தேதி நாடு முழுவதும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்பொழுது அரசியல் தலைவர்கள் பலர் அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். அப்படியாக தற்போது புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜயும் சென்னை பாலவாக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் அவர் எளிமையாக வந்திருந்தார். அவர் சாதாரண காரில் வந்திறங்கிய வீடியோவை பார்த்து பலர் இவர் சிம்பிளான ஆளா என வியந்து பேசி வருகின்றனர். இந்த வீடியோவின் படி இவர் மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் ஒன்றில் வந்திறங்கினார். இந்த கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் ஹேட்ச் பேக் கார்களில் ஒன்றாக இருக்கிறது.
மாருதி நிறுவத்தின் ஸ்விஃப்ட் காரை பொருத்தவரை இந்திய மார்கெட்டில் ரூ7.28 லட்சம் முதல் ரூ 10.71 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. மொத்தம் 14 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. நடிகர் விஜய் வந்திறங்கியது. முந்தைய தலைமுறை ஸ்விஃப்ட் காராகும். இதில் பியர்ல் மெட்டாலிக் மிட் நைட் ப்ளூ கலரில் ரூஃப் பகுதி மட்டும் பியர்ல் ஒய்ட் கலர் கொண்ட ரூஃப் பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது விற்பனையாகி வரும் மாடலில் இந்த ரூஃப் கலர் ஆப்ஷன் கிடையாது.

தற்போது விற்பனையாகி வரும் உள்ள காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் இசட் சிரீஸ் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 80 பிஎச்பி பவரையும் 111.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 3 சிலிண்டர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கார் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படும் போது 24.8 கி.மீ மைலேஜையும், ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படும் போது 25.75 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது. இந்த கார் அதிகபட்சமாக 120 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுலபமாக 100 கி.மீ வேகத்தை பிக்கப் செய்துவிடும். இந்த கார் நீண்ட ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பை பெற்ற காராக இருக்கிறது.

இந்த காரின் பாதுகாப்பு வசதிகளும் சிறப்பாகவே இருக்கிறது. இதில் 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ஸ்டெபிளிட்டி புரோகிராம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் அனைத்து வேரியன்ட்களிலும வழங்கப்பட்டுள்ளன. இது போக பின்பக்க பார்க்கிங் கேமரா, ஸ்பீடு சென்சிடிவ் டோர் லாக், பகல் இரவு நேர அட்ஜெஸ்டபிள் ஐ ஆர்விஎம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் விஜய் போன்ற பிரபலங்கள் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற காஸ்ட்லியான காரை வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் லோக்கில் பயணிக்கும் போது தேவையில்லாமல் அந்த காரை பயன்படுத்துவதை தவிர்த்து சிம்பிளான காரை பயன்படுத்துகிறார்கள். இதனால் சுற்றுசூழலும் மாசு ஏற்படுவது குறைகிறது. அதே நேரம் அவர்கள் தேவையில்லாத செலவுகளையும் குறைத்து கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications









