போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?

வாக்களிப்பது நமது முக்கிய கடமைகளில் ஒன்றாகும். இதை உணர்ந்தே நடிகர் விஜய் தன்னுடைய அனைத்து பிசியான வேலைகளையும் விட்டுவிட்டு தற்போது தாயகம் திரும்பி இருக்கின்றார். விஜய் விரைவில் தீவிர அரசியல் பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றார். இதன் அடிப்படையிலேயே, 'தமிழக வெற்றி கழகம்' எனும் கட்சியை அவர் தொடங்கி உள்ளார்.

தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் இதுவரை பல நடிகர்கள் அரசியல் களத்தில் களமிறங்கி இருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் விஜயும் இணைந்திருக்கின்றார். இந்த சூழலிலேயே தன்னுடைய ஜனநாயக கடைமையை ஆற்றும் விதமாக அவர் ரஷ்யாவில் இருந்து வந்து தன்னுடைய வாக்கை பதிவுச் செய்திருக்கின்றார்.

Vijay innova car

அவர் நடிகராக இருந்து இதற்கு முன்னர் பலமுறை வாக்களித்திருக்கின்றார். ஆனால், ஓர் கட்சியின் தலைவராக இருந்து வாக்களிப்பு இதுவே முதல் முறையாகும். அரசியல் பயணத்திற்காக விஜய் தன்னுடைய நடிப்பு பயணத்தை முடித்துக் கொள்ள இருக்கின்றார் என்பது கவனத்திற்குரியது. தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'கோட்' (G.O.A.T) என குறிப்பிடப்படும் அந்த படமே அவரின் கடைசிப் படம் என கூறப்படுகின்றது.

இதன் முக்கிய காட்சிகளே தற்போது ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இயக்குநர் வெங்கட் பிரபல இயக்கத்தில் இந்த படம் இயற்றப்பட்டு வருகின்றது. சுமார் 80 சதவீதம் காட்சிப் பதிவு பணிகள் நிறைவுற்றுவிட்டதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அனைத்து வேலைகளையும் நிறுத்துவிட்டு அவர் தன்னுடைய ஜனநாயக கடைமையை ஆற்ற தாயகம் வந்திருக்கின்றார்.

Vijay booth visit

கடந்த முறை சட்டமன்ற தேர்தலின் போதும் விஜய் தவறாமல் தன்னுடைய வாக்கைச் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அப்போது அவர் சைக்கிளில் வந்திருந்தார். அவர் பயன்படுத்திய அந்த சைக்கிள் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தாலானது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறம் குறிப்பிட்ட கட்சியைக் குறிப்பதாக விமர்சனங்கள் எழும்பின.

மேலும், அந்த வீடியோவும் அனைத்து வழிகளிலும் தீவிரமாக பரவத் தொடங்கியது. இந்த நிலையிலேயே. இம்முறையும் ஏதேனும் சம்பவத்தை அவர் செய்வார் என்கிற எதிர்பார்ப்பு அநேகரின் மத்தியில் எழும்பி இருந்தது. ஆனால், அவர் இம்முறை காரிலேயே மிகவும் சைலண்டாக வாக்கு சாவடிக்கு வந்து தன்னுடைய வாக்கினைச் செலுத்தினார்.

Vijay voting

இதற்காக அவர் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரையே பயன்படுத்தினார். இது முந்தைய வெர்ஷன் இன்னோவா ஆகும். தற்போது இன்னோவா க்ரிஸ்டா (புதுப்பிக்கப்பட்ட நிலையிலும்) மற்றும் இன்னோவா க்ரிஸ்டா ஹைகிராஸ் என்கிற இரண்டு விதமான அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கியவை என்கிற காரணத்தினால் பலர் இந்த கார்களுக்கு எப்போதோ மாற தொடங்கிவிட்டனர்.

இருப்பினும், நடிகர் விஜய் பழைய வெர்ஷன் இன்னோவா க்ரிஸ்டாவையே இப்போதும் பயன்படுத்தி வருகின்றார். இதன் வாயிலாக தான் எளிமையான நபர் என்பதை அவர் உறுதிப்படுத்தியிருக்கின்றார். அதேநேரத்தில், அவரிடத்தில் இதை விட விலை உயர்ந்த மற்றும் சொகுசான கார்கள் பல பயன்பாட்டில் இருக்கின்றன. இருப்பினும் இந்த எளிமையான காரையே நடிகர் விஜய் பயன்படுத்தி இருக்கின்றார்.

புதிய இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் ரூ. 25,72 லட்சம் தொடங்கி ரூ. 30.68 லட்சம் வரையிலான விலையிலும், இன்னோவா க்ரிஸ்டா ரூ. 20 லட்சம் தொடங்கி ரூ. 26.30 லட்சம் வரையிலான விலையிலும் விற்கப்படுகின்றது. இதேபோல், நடிகர் விஜய் சேதுபதிகூட வாக்களித்த பின்னர் அவருடைய ரசிகர் ஒருவரின் பைக்கில் ஏறி சென்றிருக்கின்றார்.

ஏழைகளின் பிரியமான பைக் மாடலாக பஜாஜ் சிடி100 விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பைக்கிலேயே விஜய் சேதுபதி ஏறி சென்றார். தான் ஒரு எளிமையான நபர் என்பதை விஜய் சேதுபதி இந்த செயலின்வாயிலாக நிரூபித்திருக்கின்றார். ஆனால், இந்த பயணத்தின்போது அவர் தலைக் கவசம் அணியவில்லை. இது சற்றே சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்திருக்கின்றது.

இரண்டு சக்கர வாகனத்தின்போது தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், வாக்குச்சாவடியில் இருந்த சூழல் அவரை அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டு செய்ய செய்திருக்கின்றது. அதேநேரத்தில், பிற முன்னணி நடிகர்கள் மிக மிக விலையுர்ந்த கார்களில் வாக்கு செலுத்த வாக்குசாவடிக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

குறிப்பாக, நடிகர் தனுஷ் பயன்படுத்திய கார் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. அவர் மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் சொகுசு காரிலேயே அவர் வந்திருக்கின்றார். இந்த காரின் விலை ரூ. 4 கோடி ஆகும். இத்தகைய விலை உயர்ந்த காரில் அவர் வந்த காரணத்தினாலேயே தற்போது தனுஷ் வாக்களிக்கும் வீடியோ இணையத்தில் அதிகளவில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனுஷின் பென்ஸ் கார் அதிக கவர்ச்சியானது என்பதாலும் கார் ஆர்வலர்கள் மத்தியில் வீடியோ அதிகம் டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே நடிகர் விஜய்யின் வாக்களிக்கும் வீடியோவும் டிரெண்டாகிக் கொண்டு இருக்கின்றது. குறிப்பாக, அவர் வாக்களித்த காயமடைந்த கையுடன் வந்திருப்பது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, April 19, 2024, 14:08 [IST]
English summary
Actor vijay used toyota innova car to visit election booth
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X