நடிகர் விஜய் வந்த பச்சை நிற நம்பர் பிளேட் கொண்ட சொகுசு கார்!.. தமிழகம் முழுக்க இப்ப இதபத்திதான் பேச்சு!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய், விரைவில் திரைத்துறையை விட்டு விலகி அரசியலில் முழுமையாக ஈடுபட இருக்கின்றனர். ஏற்கனவே இவரின் கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. 'தமிழக வெற்றி கழகம்', இதுவே நடிகர் விஜய் கட்சியின் பெயர் ஆகும். மேலும், கட்சிக்கான அதிகாரப்பூர்வ கொடியை அறிமுகம் செய்யும் பணியில் தமிழக வெற்றி கழகம் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே, பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் நடிகர் விஜய் கொடி ஒன்றை ஏற்றி வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்த வீடியோவே தற்போது வெளியாகி, தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் நிற கொடி, மையப் பகுதியில் விஜய்-யின் படம் என அந்த கொடி அட்டகாசமாக இருப்பதாக விஜய்யின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவே விஜய் கட்சியின் அதிகாரப்பூர்வ கொடி என கூறப்படுகின்றது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Vijay bmw i7 luxury ev

வருகின்ற 22 ஆம் தேதி அன்றே தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழா நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே கொடியை ஏற்றி வைத்து அவர் ஒத்திகைப் பார்த்திருக்கின்றார். இந்த கொடி ஏற்றத்துடன் சேர்த்து மற்றுமொரு ஆச்சரியத்தையும் நடிகர் விஜய் கிளப்பி இருக்கின்றார்.

பச்சை நிற நம்பர் பிளேட்டில் கெத்தாக வந்த அவரின் கார்தான் அது. இது என்ன கார்? காரின் விலை எவ்வளவு? மற்றும் அந்த காரின் சிறப்புகள் என்ன? மற்றும் அந்த கார் பச்சை நிற நம்பர் பிளேட்டைக் கொண்டிருந்ததற்கான காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளே அவரது ரசிகர்கள் மத்தியில் எழும்பியிருக்கின்றது. இதற்கான பதில்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Bmw i7 luxury ev

நடிகர் விஜய் பயன்படுத்திய அந்த கார் பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) சொகுசு வாகனம் ஆகும். இது ஓர் லக்சூரி அம்சங்கள் நிறைந்த செடான் வகை எலெக்ட்ரிக் கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது எலெக்ட்ரிக் கார் என்பதாலேயே பச்சை நிற நம்பர் பிளேட் இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த காரில் ஆடம்பர அம்சங்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதனால்தான் அதன் விலையும்கூட மிக மிக உயரியதாகக் காட்சியளிக்கின்றது. இந்த கார் நாட்டில் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஐ7 (BMW i7) மற்றும் ஐ7 எம்70 எக்ஸ்-டிரைவ் (i7 M70 xDRIVE) ஆகியவையே அவை ஆகும்.

இதில் உயர்நிலை தேர்வாக இரண்டாவதாக பார்த்த ஐ7 எம்70 எக்ஸ்-டிரைவ் காட்சியளிக்கின்றது. இதன் விலை ரூ. 2.50 கோடி ஆகும். காட்சிகளின் அடிப்படையில் பார்க்கையில் நடிகர் விஜய் இந்த உயர்நிலை தேர்வையே வைத்திருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஏற்கனவே கூறியதைப் போலவே இது ஓர் அல்ட்ரா லக்சூரி அம்சங்களைத் தாங்கிய வேரியண்ட் ஆகும்.

குறிப்பாக இந்த காரில் தியேட்டர் உணர்வை வழங்கக் கூடிய பிரமாண்ட திரை ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கும். 31.3 அங்குல திரையே காருக்குள் வழங்கப்பட்டிருக்கும். இது 8K தொழில்நுட்பம் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. தியேட்டர் போன்ற துள்ளியமான விஷுவலையும் இந்த திரை வழங்கும்.

இந்த திரையில் அமேசான் ஃபையர் டிவி வசதியும் வழங்கப்பட்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இந்த எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 625 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 101.7 kWh பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.

பேட்டரி பேக்கைப் போலவே அதிக பவர்ஃபுல்லான எலெக்ட்ரிக் மோட்டாரே பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. 544 எச்பி பவர் மற்றும் 745 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய சக்தி வாய்ந்த மின்சார மோட்டாரே அதில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. வெறும் 4.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதே இந்த எலெக்ட்ரிக் மோட்டார் ஆகும்.

இந்த எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிலும் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையிலேயே இருக்கின்றது. அந்தவகையில், ஒயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு, 655 வாட்ஸ் திறன் கொண்ட 18 ஸ்பீக்கர்கள் அடங்கிய மியூசிக் சிஸ்டம், அகலமான வளைவான திரை உள்ளிட்ட அம்சங்களாலேயே இந்த கார் அலங்கரிக்கப்பட்டு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, 12.3 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் திரை, 3டி மேப் நேவிகேஷன் வசதி, வாய்ஸ் கன்ட்ரோல் போன்ற முக்கியமான அம்சங்களையும் இந்த எலெக்ட்ரிக் கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது. பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்த வரை பன்முக ஏர் பேக்குகள், பிரேக் அசிஸ்ட் வசதி உடன் கூடிய ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, பார்க்கிங் அசிஸ்டன்ஸ், கிராஷ் சென்சார், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு வசதி உடன் கூடிய எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், டயர் ரிப்பேர் கிட் மற்றும் சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளையும், பாதுகாப்பு அம்சங்களையுமே இந்த காரில் காண முடியும்.

இத்தகைய விலை உயர்ந்த சொகுசு எலெக்ட்ரிக் காரையே நடிகர் விஜய் பயன்படுத்தி வருகின்றார். சமீபத்திலேயே இவர் லெக்சஸ் எல்எம் 350எச் (Lexus LM 350h) சொகுசு எம்பிவி ரக காரை வாங்கியிருந்தார். இதன் விலை ரூ. 2.50 கோடிக்கும் அதிகம் என்பது கவனிக்கத்தகுந்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே அகும். மேலும், இதுவே நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் சொகுசு கார் கொள்முதல் என கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் விஜய் பிஎம்டபிள்யூ ஐ7 சொகுசு எலெக்ட்ரிக் காரை எப்போது வாங்கினார் என்பது துள்ளியமாக தெரியவில்லை. இருப்பினும், இந்த காரை அவர் சுற்றுச்சூழலின் நலனைக் கருத்தில் கொண்டே வாங்கியிருக்கலாம் என யூகிக்க முடிகின்றது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பூஜ்ஜியம் உமிழ்வைக் கொண்ட வாகனங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 20, 2024, 10:58 [IST]
English summary
Actor vijay uses bmw i7 luxury sedan ev worth rs 2 50 cr
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+